Sevappi - ஆஹா.. ஓடிடியில் வெளியானது பிக்பாஸ் பூர்ணிமா நடிப்பில் செவப்பி.. ரசிகர்கள் வரவேற்பு

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் கலந்துகொண்டவர் பூர்ணிமா. அராத்தி என்ற யூட்யூப் சேனலை தொடங்கிய அவர் அதன் மூலம் பிரபலமடைந்தார். நடிகை இந்துஜாவின் நெருங்கிய தோழி ஆவார். இவர் தற்போது செவப்பி என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படம் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.

அராத்தி என்ற யூட்யூப் சேனலை தொடங்கி அதன் மூலம் மக்களிடையே சென்று சேர்ந்தார். சூழல் இப்படி இருக்க பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் கலந்துகொண்டார். ஏறத்தாழ 97 நாட்கள் இருந்த பூர்ணிமா விமர்சனங்களையே அதிகம் சந்தித்தார். குறிப்பாக விசித்திராவிடம் பூர்ணிமா உங்கள் மூளை கீழே கிடக்கிறது எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னதெல்லாம் கடுமையான கண்டனத்தை பெற்றுக்கொடுத்தது.

Bigg Boss Poornimas Sevappi Movie Streaming on Aha OTT

இன்னும் நீடிக்கிறார்: பூர்ணிமாவின் அந்த செயல்பாடை எல்லாம் பார்த்தபோது கண்டிப்பாக அவர் விரைவிலேயே வீட்டிலிருந்து வெளியேறிவிடுவாரோ என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் 90 நாட்களுக்கும் மேலே விளையாடினார். டைட்டில் வின்னராகிவிடுவாரோ என்ற சந்தேகம் எழும் அளவுக்கு அவரது கேம் ப்ளே இருந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் 16 லட்சம் ரூபாய் பண பெட்டியை எடுத்துக்கொண்டு பூர்ணிமா வெளியேறினார். இது ஸ்மார் மூவ் என்று பலராலும் பாராட்டப்பட்டது.

பூர்ணிமா நடிக்கும் படம்: இதற்கிடையே அவருக்கு நடிகையாக வேண்டும் என்பதுதான் ஆசை. பிக்பாஸ் மூலம் கிடைக்கும் பிரபல்யத்தை பயன்படுத்த நினைத்துதான் அவர் வீட்டுக்குள் வந்தார். அதேசமயம் வீட்டுக்குள் வருவதற்கு முன்னதாகவே நயன் தாரா நடித்த அன்னபூரணி உள்ளிட்ட படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஹீரோயின்: இந்நிலையில் பூர்ணிமா கதாநாயகியாக அறிமுகமாகிறார். அதன்படி படத்துக்கு செவப்பி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. எம்.எஸ்.ராஜா என்பவர் படத்தை இயக்குகிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தில் குழந்தைக்கு தாயாக பூர்ணிமா நடித்திருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. ஏனெனில் சினிமாவில் அறிமுகமாகும்போது நடிகைகள் பெரும்பாலும் தாயாக நடிப்பதை விரும்பமாட்டார்கள். அதேசமயம் நல்ல நடிகை என்று பெயர் எடுக்க வேண்டுமென நினைப்பவர்கள் எந்தவித தயக்கமும் இல்லாமல் அம்மாவாக நடிப்பார்கள்.

ஆஹா ரிலீஸ்: எனவே பூர்ணிமா அம்மாவாக நடிப்பதை பார்த்த ரசிகர்கள் ஆரம்பமே இப்படி நடிப்பதன் மூலம் அவருக்கு நடிப்பு மீது இருக்கும் ஆர்வத்தை புரிந்துகொள்ள முடிகிறது என கூறி வாழ்த்துகள் தெரிவித்தனர். இந்த சூழலில் செவப்பி படமானது ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி செவப்பி படம் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது. அதற்கு ரசிகர்களும் வரவேற்பை கொடுத்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X