பிக் பாஸ் ஓடிடி... வனிதா, ஜூலி கன்பார்ம் … தொகுப்பாளர் யாருனு பாருங்க!

சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் முடிவடைய இருக்கும் நிலையில் பிக் பாஸ் தமிழ் ஓடிடி நிகழ்ச்சியை கமலஹாசன் தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Recommended Video

விரைவில்!! தமிழில் தொடங்கும் Bigg Boss OTT| Vanitha, Anitha, Julie

இந்த போட்டியில் 12 அல்லது 13 போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் சீசன் 1ல் இருந்து சீசன் 5 வரை கலந்து கொண்ட போட்டியாளர்களில் சிலர் பங்கு பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் டைட்டில் பட்டம் பெற்றவர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

மக்களின் ஆதரவுடன்

மக்களின் ஆதரவுடன்

விஜய் தொலைக்காட்சியில் மக்களின் பேராதரவை பெற்ற நிகழ்ச்சி பிக் பாஸ் ஆகும். முதல் சீசன் தொடங்கி தற்போது ஒளிபரப்பாகி வரும் 5 சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார்கள் .பிரபலங்கள் தங்களது தினசரி வாழ்க்கையை எப்படி வாழ்கிறார்கள், எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருந்ததே இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணம்.

மினி பிக்பாஸ்

மினி பிக்பாஸ்

தற்போது ஒளிபரப்பாகி வரும் சீசன் 5, ஜனவரி இரண்டாவது வாரத்துடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து, ஓடிடியில் 12 முதல் 13 போட்டியாளர்கள் கொண்ட மினி பிக்பாஸ் நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகின. அந்த போட்டி 42 நடக்கும் என்றும் பலவிதமான தகவல்கள் இணையத்தில் உலாவந்தன.

மீண்டும் வனிதா

மீண்டும் வனிதா

இந்நிலையில், தற்போது ஒடிடி பிக் பாஸ் குறித்து புது தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது. முன்பு 42 நாட்கள் என்று அறிவித்த அந்த நிகழ்ச்சி 70 நாட்கள் நடக்கும் என்றும், இதில், வனிதா, ஜூலி, அனிதா ஆகியோர் கலந்து கொள்வது உறுதியாகி உள்ளதாகவும். ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்க இருப்பதாகவும் தகவல் இணையத்தில் வேகமாக வெளியாகி உள்ளது.

ஜனவரி 23 முதல்

ஜனவரி 23 முதல்

ஏற்கனவே பிக்பாஸ் தெலுங்கு தொகுப்பாளரான நாகர்ஜுனா கிராண்ட் பைனலுக்கு பிறகு பிக்பாஸ் தெலுங்கு ஓ.டி.டி.யை தொகுத்து வழங்கப் போவதாக அறிவித்தார். தெலுங்கில் பிப்ரவரி மாதமும், தமிழில் ஜனவரி 23 ம் தேதி முதல் துவங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X