ஓடிடி ஓர் அபாயம்.. புதிய படங்களுக்கு செக் வைக்கும் பெரிய நிறுவனங்கள்.. பிஸ்மி குற்றச்சாட்டு!

சென்னை: புதிய படங்கள் தியேட்டருக்கு வரும் தேதியையே தற்போது முடிவு செய்யும் இடத்துக்கு ஓடிடி நிறுவனங்கள் வந்து விட்டதாக பகீர் கிளப்புகிறார் பத்திரிகையாளர் பிஸ்மி. அவர் தனது யூடியூப் சேனலில் ஓடிடி நிறுவனங்கள் எப்படி எல்லாம் தமிழ் சினிமாவை காலி செய்கின்றன என ஒரு வீடியோ வெளியிட்டு ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை அடுக்கி உள்ளார்.

தியேட்டர்களுக்கு மக்களை வரவிடாமல் செய்து விட்டதே இந்த ஓடிடி நிறுவனங்கள் தான் என்கிற குற்றச்சாட்டு ஒரு பக்கம் இருக்க தற்போது தயாரிப்பாளர்கள் முதலில் தங்கள் படத்தை ஓடிடி நிறுவனத்திடம் பெரிய தொகைக்கு விற்று விட வேண்டும் என்பதில் குறியாக உள்ளனர்.

Bismi opens up about OTT mafia in his new video

புதிய படங்களை 4 வாரத்துக்குள் ஓடிடியில் வெளியிடுவோம் என்கிற ரூல்ஸ் எல்லாம் மாறி ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான ரெபல், டியர் படங்கள் 2 வாரங்களில் எல்லாம் ஓடிடியில் வெளியாகி வரும் சூழல் தற்போது வெளியாகி விட்டது.

அடிவாங்கிய ஓடிடி பிசினஸ்: ஒரு பக்கம் தியேட்டர்களை ஓடிடி நிறுவனங்கள் மூடி வரும் நிலையில், ஓடிடி பிசினஸும் உதை வாங்கி வருவதாக கூறுகின்றனர். தொடர்ந்து கமர்ஷியலுக்காகவும் ஓடிடியில் அதிக தொகைக்கு படத்தை விற்று லாபம் பார்க்கும் நோக்கில் பல குப்பை படங்கள் குவிந்து வருகின்றன என்கிறார் பிஸ்மி. அதன் காரணமாக அந்த படங்களை நம்பி வாங்கிய பல ஓடிடி நிறுவனங்கள் போட்ட காசை கூட எடுக்க முடியாமல் பெரும் கடன் சுமையில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

உஷாரான ஓடிடி நிறுவனங்கள்: அதன் காரணமாக தற்போது புதிய படங்கள் வெளியானால் அதை பார்த்து விட்டு தேறுமா தேறாதா என்பதை முடிவு செய்து விட்டு ஓடிடிக்கு படங்களை வாங்குவதாக கூறுகிறார். மேலும், முன்பு கொடுத்ததை போல பல கோடிகள் கொடுத்தெல்லாம் படங்களை வாங்குவதில்லையாம். ஓடிடியில் வரும் லாபத்தில் ஷேர் என்கிற கணக்கில் படங்களை வாங்கி வெளியிடுவதாக கூறுகிறார்.

புரோக்கர்கள்: பல தயாரிப்பாளர்களில் பெரிய ஓடிடி நிறுவனங்களில் படத்தை சேல் பண்ணி தருகிறேன் என இடைத்தரகர்களும் அதிகம் இந்த பிசினஸில் நுழைந்து விட்டதால் பல குழப்பங்கள் தமிழ் சினிமாவில் எழுந்திருப்பதாக கூறுகின்றனர். பல பெரிய படங்களின் ரிலீஸ் தேதியை நிறுத்தி விட்டு மாசத்துக்கு ஒரு படத்தை வெளியிட வேண்டும் என்பதற்காக ஓடிடி நிறுவனங்கள் தான் தற்போது ரிலீஸ் தேதியில் இருந்து அனைத்து விஷயங்களையும் முடிவு செய்வதாக கூறியுள்ளார். இதனால், கலைஞர்களின் திறமை, பல சிறு பட்ஜெட் படங்கள் வெளியாகாமல் கடன் சுமையில் தவிப்பது போன்றவை அரங்கேறி வருகிறது என பிஸ்மி குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X