Bison OTT: திரையரங்கில் முட்டித்தள்ளிய ‘பைசன்‘.. ஓடிடி ரிலீஸ்.. எந்த தளத்தில் தெரியுமா?

சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த 'பைசன்' திரைப்படம் கடந்த மாதம் 17ந் தேதி வெளியான நிலையில், இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ள, இப்படத்தில், அனுபமா பரமேஸ்வரன், லால், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார்.

அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசனின் நிஜ வாழ்க்கைச் சம்பவங்களை மையமாக வைத்து 'பைசன்' திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. துருவ் விக்ரமுக்கு கபடி வீரராக வேண்டும் என்பது ஆசை, ஆனால், அந்த ஊரில் இருக்கும் கபடி வீரர்கள் துருவ் விக்ரமை டீமில் சேர்த்துக்கொள்ளாமல் புறக்கணிக்கின்றனர். பள்ளிக்கூடத்தின் துருவ்விக்ரமின் திறமையைப் பார்த்த பி.டி வாத்தியார். அவனை எப்படியாவது கபடி வீரராக்க வேண்டும் என நினைக்கிறார்.

bison kaalamadan Mari selvaraj
Photo Credit:

பைசன் படத்தின் கதை: பிடி வாத்தியாரின் முயற்சியால் துருவிக்ரம், ஒரு கபடி போட்டியில் கலந்து கொண்டு சிறப்பான விளையாடி அந்த ஊருக்கே பெருமை சேர்க்கிறார். துருவ் விக்ரமிற்கு பக்கபலமாக இருந்த அமீர் இறந்துவிட துருவ் விக்ரமிற்கு தொடர்ந்து பிரச்சனைகள் வருகிறது. அந்த பிரச்சனைகளை கடந்து துருவ் விக்ரம் எப்படி கபடி வீரராக மாறினார் என்பது தான் பைசன் திரைப்படத்தின் கதை.

வசூலை அள்ளியது: இதில் துருவ் விக்ரமின் தந்தையா பசுபதியும், கதாநாயகியாக அனுபமா பரமேஸ்வரனும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். படத்தைப் பார்த்த அனைவரும் வெகுவாக படத்தை பாராட்டினார்கள். குறிப்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திரைமகுடத்தின் மற்றொரு வைரக்கல்லாக பைசன் திரைப்படம் அமைந்துள்ளது என பாராட்டி இருந்தார். அரசியல் பிரமுகர்கள், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் துவங்கி திரையுலக பிரபலங்கள் என பலரும் 'பைசன் காளமாடன்' படத்தை வெகுவாக பாராட்டினார்கள். பாராட்டுகளை குவித்தது மட்டுமில்லாமல், வசூல் சாதனையையும் படைத்தது.

ஓடிடி ரிலீஸ் தேதி: இந்நிலையில், 'பைசன் காளமாடன்' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இத்திரைப்படம் நவம்பர் 14 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 'பைசன் காளமாடன்' ரிலீசாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X