Blast OTT: ஆக்‌ஷனில் மிரட்டி விட்ட பிளாஸ்ட் ஓடிடியில் ரிலீஸ்.. அடடே எந்த தளத்தில் தெரியுமா?

சென்னை: AGS நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சுபாஷ் கே ராஜா இயக்கத்தில் வெளியாகி திரையரங்குகளில் பட்டையைக் கிளப்பி வரும் 'பிளாஸ்ட்' திரைப்படம், பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை படைத்து மிகப்பெரிய வெற்றிப் படமாக உருவெடுத்துள்ளது. உலகம் முழுவதும் இந்தத் திரைப்படம் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் வரை வசூலித்து சாதனை படைத்துள்ளதாக திரைத்துற வட்டாரங்களில் பலத்த பேச்சு ஓடிக் கொண்டிருக்கிறது.

ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், அபிராமி மற்றும் ப்ரீத்தி முகுந்தன் ஆகியோரின் மிரட்டலான நடிப்பில், முற்றிலும் வித்தியாசமான ஒரு மார்ஷியல் ஆர்ட்ஸ் (Karate) குடும்பப் பின்னணியில் உருவான இத்திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பம் தங்களின் தற்காப்பு கலைத்திறனை வைத்துக்கொண்டு, ஒரு பெரும் கார்ப்பரேட் மாஃபியாவை எப்படி எதிர்கொள்கிறது என்ற விறுவிறுப்பான கதைகளமும், ரவி பஸ்ரூரின் அதிரடியான பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது.

Blast OTT Release Arjun and Preethi Mukundan Action Blockbuster Set to Stream on Netflix from June 25

பெண்களின் பாதுகாப்பு மற்றும் தற்காப்பு குறித்த விழிப்புணர்வை, எந்தவித தொய்வும் இல்லாமல் பக்கா மாஸ் ஆக்‌ஷன் எண்டர்டெய்னராகக் கொடுத்ததே படத்தின் இந்த இமாலய வெற்றிக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. வார இறுதி நாட்கள் மட்டுமன்றி, வேலை நாட்களிலும் திரையரங்குகளில் குடும்பங்கள் கூட்டம் கூட்டமாக வந்து படத்தை ரசித்து வருகின்றனர்.

ஓடிடி: திரையரங்குகளில் இந்த அளவுக்கு மாபெரும் வசூல் வேட்டை நடத்தியுள்ள 'பிளாஸ்ட்' திரைப்படம், தற்போது டிஜிட்டல் தளத்திலும் தடம் பதிக்கத் தயாராகிவிட்டது. அதன்படி, வரும் ஜூன் 25ஆம் தேதி முதல் நெட்ஃபிளிக்ஸ் (Netflix) ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

சாதனை: திரையரங்குகளில் மிஸ் செய்தவர்களும், மீண்டும் குடும்பத்துடன் இந்த 100 கோடி வசூல் சாதனைப் படத்தை ரசிக்க நினைப்பவர்களுக்கும், ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருப்பது ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களிடையேயும் பெரும் குஷியை ஏற்படுத்தியுள்ளது. பாக்ஸ் ஆபீஸைத் தொடர்ந்து ஓடிடி தளத்திலும் 'பிளாஸ்ட்' திரைப்படம் புதிய சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் வரும் ஜூன் 25ஆம் தேதி முதல் நெட்ஃபிளிக்ஸ் (Netflix) ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X