தூக்கில் தொங்கும் இருவர்... ஆவலைத்தூண்டும் “பிளட் மணி“ டிரைலர்!
சென்னை : பிரியா பவானி சங்கர் நடிக்கும் பிளட் மணி (Blood Money) திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
கிறிஸ்துமஸை முன்னிட்டு வருகிற டிசம்பர் 24-ந்தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
சஸ்பென்ஸ் டிராமாவாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர் பத்திரிக்கையாளர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பிளட் மணி
நயன்தாரா நடிப்பில் வெளியான ஐரா திரைப்படத்தை இயக்கிய சர்ஜூன் இப்படத்தை இயக்கி உள்ளார். கிஷோர், சிரிஷ், பஞ்சு சுப்பு, ராட்சசன் வினோத் சாகர், ஶ்ரீலேகா ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எம்பரர் எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்த படத்துக்கு சதிஷ் ரகுநந்தன் இசையமைத்துள்ளார். சங்கர் தாஸ் திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.

ஜீ5 ஓடிடியில்
பிளட் மணி (Blond Money) திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் டிசம்பர் 24ந் தேதி வெளியாக உள்ளது. மலேஷியா டூ அம்னிஷியா, விநோதய சித்தம், டிக்கிலோனா படங்களை வெளியிட்ட ஜீ5 ஓ டிடி தளம் பிளட் மணி படத்தையும் வெளியிடுகிறது.

டிரைலர்
இந்த நிலையில், இத்திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகி உள்ளது. அதில், வெளிநாட்டில் வேலைக்காகச் சென்று மாட்டிக்கொண்டுள்ள சிலருக்கு தூக்கு தண்டனை அளிக்கப்படுகிறது. அவர்களை பத்திரிக்கையாளராக இருக்கும் பிரியா பாவனி சங்கர் காப்பாற்ற படாதபாடு படுகிறார். இன்று வெளியாகி உள்ள இந்த டிரையலர் பலரின் பாராட்டை பெற்று வைரலாகி உள்ளது.

வயிற்று பிழைப்புக்காக
வயிற்று பிழைப்புக்காக சொந்தம் பந்தங்களை விட்டுவிட்டு வெளிநாட்டில் வேளைக்கு செல்லும் இளைஞர்கள் அங்கு சந்திக்கும் பிரச்சினைகளை தோலுரித்து காட்டும் திரைப்படமே இந்த பிளட் மணி.


Click it and Unblock the Notifications











