Blue Sattai Maran: நெட்பிளிக்ஸில் நீக்கப்பட்ட நயன்தாராவின் அன்னபூரணி.. ப்ளூ சட்டை மாறன் போட்ட போடு!
சென்னை: நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான அன்னபூரணி திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 75 ஆவது படமாக அன்னபூரணி கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மிக்ஜாம் புயல் காரணமாக அந்த படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கவில்லை. படம் வெளியான ஒரு மாதத்திலேயே டிசம்பர் 29ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் அன்னபூரணி திரைப்படம் வெளியானது.
அந்த படத்தில் நடிகை நயன்தாரா பிராமண வீட்டு பெண்ணாக நடித்திருப்பார். அவரது அப்பாவாக நடிகர் அச்யுத் குமார் திருக்கோயிலில் பிரசாதம் செய்பவராக நடித்திருந்தார். அப்பாவுக்கு தெரியாமல் அசைவ உணவை சமைப்பது, சாப்பிடுவது என நயன்தாரா நடித்திருப்பார். ராமரே வனவாசத்தின் போது மாமிசம் தான் சாப்பிட்டார் என்றும் உணவில் மதத்தை திணிக்கக் கூடாது. யாருக்கு என்ன பிடிக்கிறதோ அதை சாப்பிடலாம் என்கிற கருத்தை இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா முன் வைத்திருந்தார்.

இந்து மதத்துக்கு எதிராக: ஆனால், அன்னபூரணி படத்தில் அசைவம் ஒரு விஷயமாக முன்னிறுத்தப்படாமல் அதை இந்து மதத்துக்கு எதிராக முன் வைத்தது பெரும் சர்ச்சையை வெடிக்கச் செய்தது. மேலும், கிளைமேக்ஸில் நடிகை நயன்தாரா பிரியாணி செய்ய தொழுகை செய்தால் தான் டேஸ்ட் நல்லா வரும் என சொல்லி வைக்கப்பட்ட காட்சிகளும் ஹீரோ ஜெய்யை இஸ்லாமியராக காட்டியதும் தான் அந்த படத்தின் பிரச்சனை என சர்ச்சை வெடித்துள்ளது.
ருசியே இல்லை: ப்ளூ சட்டை மாறன் அன்னபூரணி படத்தை பார்த்த நிலையில், இந்த படத்தில் எந்தவொரு சுவையோ ருசியோ இல்லை என்றும் அட்லீஸ்ட் ஒரு சமையல் குறிப்புக் கூடகொடுக்கலையே என கழுவி ஊற்றி இருந்தார். இந்நிலையில், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்து அன்னபூரணி நீக்கப்பட்ட நிலையில், அதிரடியாக ஒரு ட்வீட் போட்டிருக்கிறார்.
ப்ளூ சட்டை மாறன் ட்வீட்: "இந்து மத உணர்வை புண்படுத்தியதால்.." என நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்து நயன்தாராவின் அன்னபூரணி படம் நீக்கப்பட்டது குறித்து ப்ளூ சட்டை மாறன் ட்வீட் போட்டுள்ளார். நேற்று தான் சானிட்டரி நாப்கின் விற்பனையில் சாதனை படைத்து வருகிறேன் என கெத்தாக பேசி சந்தோஷப்பட்டு இருந்தார். இப்போது அன்னபூரணி விவகாரத்தால் சங்கடத்தில் ஆழ்ந்துள்ளார் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











