Blue Star OTT Release: ஓடிடியில் ரிலீஸாகும் ப்ளூ ஸ்டார்... எப்போ எந்த பிளாட்ஃபார்ம்ன்னு தெரியுமா..?
சென்னை: அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் நடித்துள்ள ப்ளூ ஸ்டார் திரைப்படம் கடந்த மாதம் 25ம் தேதி வெளியானது. பா ரஞ்சித் தயாரித்திருந்த இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஜெயக்குமார் இயக்கியிருந்தார். திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற ப்ளூ ஸ்டார் தற்போது ஓடிடியில் வெளியாகவுள்ளது.
ப்ளூ ஸ்டார் ஓடிடி ரிலீஸ் தேதி: திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற ப்ளூ ஸ்டார் திரைப்படம் தற்போது ஓடிடி ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது. கிரிக்கெட்டை பின்னணியாக வைத்து ஸ்போர்ட்ஸ் ப்ளஸ் பொலிட்டிக்கல் ஜானர் படமாக உருவாகியுள்ள படம் ப்ளூ ஸ்டார். ஜெயக்குமார் இயக்குநராக அறிமுகமாகியுள்ள இந்தப் படத்தை பா ரஞ்சித் தயாரித்துள்ளார்.

அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன், சாந்தனு ஆகியோர் லீடிங் ரோலில் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் ஜோடியாக நடித்த போது தான் அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் இடையே காதல் மலர்ந்துள்ளது. அதன்பின்னர் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். ப்ளூ ஸ்டார் ஷூட்டிங்கின் போது காதலர்களாக இருந்த அசோக் செல்வனும் கீர்த்தி பாண்டியனும், படம் வெளியான நேரம் தம்பதியினராக வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.
அரோக்கோணம் பகுதியில் இரு அணிகளுக்கு இடையே நடக்கும் கிரிக்கெட் போட்டியையும், அதன் பின்னணியில் இருக்கும் அடையாள அரசியலையும் பேசியிருந்தது ப்ளூ ஸ்டார். பாடல்கள், வசனம், மேக்கிங், திரைக்கதை என ஆல் ஏரியாக்களிலும் ப்ளூ ஸ்டார் படத்துக்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்தன. இதனால் பாக்ஸ் ஆபிஸிலும் இந்தப் படத்துக்கு நல்ல ஓபனிங் கிடைத்தது.
திரையரங்குகளில் 25 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிய ப்ளூ ஸ்டார், அடுத்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது. அதன்படி மார்ச் 1ம் தேதி முதல் அமேசான் ப்ரைம், டெண்ட் கொட்டா ஓடிடி தளங்களில் ப்ளூ ஸ்டார் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது. இதனால் தியேட்டரில் ப்ளூ ஸ்டார் படத்தை மிஸ் செய்த ரசிகர்கள், தற்போது ஓடிடியில் பார்க்க ரெடியாகிவிட்டனர். இந்தப் படத்திற்கு ஓடிடி ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்த வாரம் சிங்கப்பூர் சலூன் ஓடிடியில் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்த வாரம் ஓடிடியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக அசோக் செல்வனின் ப்ளூ ஸ்டார் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











