பதான் ஓடிடி ரைட்சை வாங்கிய பிரபல நிறுவனம்.. யாருன்னு தெரிஞ்சிக்கலாங்களா?

சென்னை : நடிகர் ஷாருக்கானின் பதான் படம் சில தினங்களுக்கு முன்பு சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

கடந்த 25ம் தேதி ரிலீசான இந்தப் படம் கடந்த 5 நாட்களில் 560 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாலிவுட் படவுலகை தூக்கி நிறுத்தியுள்ளதாக கூறப்படும் பதான் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட்டும் தற்போது வெளியாகியுள்ளது.

ஆட்டம் கண்ட பாலிவுட் படங்கள்

ஆட்டம் கண்ட பாலிவுட் படங்கள்

கடந்த சில ஆண்டுகளாகவே பாலிவுட்டின் பல முன்னணி ஹீரோக்களின் படங்களும் தோல்வியையே கண்டன. இதில் அமீர்கான் உள்ளிட்டவர்களும் தப்பவில்லை. பாய்காட் பாலிவுட் என்ற ஹேஷ்டேக்கையே ஒவ்வொரு படமும் ரிலீசின்போது சந்தித்தன. இந்நிலையில் கடந்த 25ம் தேதி ஷாருக்கானின் பதான் படம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது.

ஷாருக்கானின் பதான் படம்

ஷாருக்கானின் பதான் படம்

ஷாருக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆப்ரஹாம் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து பதான் படம் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளியாகியுள்ளது. தன்னுடைய மகனின் வழக்கு உள்ளிட்டவற்றால் கடந்த 4 ஆண்டுகளாக ஷாருக்கானின் படங்கள் ரிலீசாகாத நிலையில், சோர்ந்து போயிருந்த அவரது ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் பதான் அமைந்துள்ளது.

5 நாட்களில் ரூ.560 கோடி வசூல்?

5 நாட்களில் ரூ.560 கோடி வசூல்?

இந்தப் படம் கடந்த 5 நாட்களில் சர்வதேச அளவில் 560 கோடி ரூபாய்களை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெறும் சர்ச்சைகளுக்கிடையில் படம் வெளியான நிலையில், அவற்றையெல்லாம் தகர்த்தெறிந்து படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. படத்தின் பாடல்கள் உள்ளிட்ட அனைத்து ஷாருக்கானின் படத்திற்கான அம்சங்களுடன் அமைந்துள்ளது படத்தின் ப்ளசாக பார்க்கப்படுகிறது.

ஓடிடி ரைட்சை கைப்பற்றிய அமேசான்

ஓடிடி ரைட்சை கைப்பற்றிய அமேசான்

இந்நிலையில் இந்தப் படத்தின் ஓடிடி ரைட்சை பிரபல அமேசான் ப்ரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே பதான் வெற்றியை கொண்டாடும் வகையில், ஷாருக்கானின் இல்லத்தில் ஏராளமான ரசிகர்கள் நேற்றிரவு கூடி அவருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். அவரும் ரசிகர்களுடன் இந்தக் கொண்டாட்டத்தில் இணைந்துள்ளார்.

உற்சாகத்தில் பாலிவுட் திரையுலகம்

உற்சாகத்தில் பாலிவுட் திரையுலகம்

பதான் வெற்றி பாலிவுட் திரையுலகத்தை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அடுத்ததாக அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வருகிறார். ஏப்ரல் மாதத்தில் அந்தப் படமும் வெளியாகவுள்ள நிலையில், தற்போது பதான் ட்ரெயிலர் தான் என்றும் ஜவான் படம்தான் மெயின் பிக்சர் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X