தலைநகரம் ஹீரோயின் இப்படி பாட்டி போல மாறிட்டாங்களே.. ஓடிடியில் வெளியான போகன்வில்லா விமர்சனம் இதோ!

சென்னை: அக்டோபர் 17ம் தேதி தியேட்டர்களில் வெளியான மலையாளப்படமான போகன்வில்லா சமீபத்தில், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்ட சோனி லைவ் ஓடிடியில் வெளியானது. ஓடிடி ரிலீஸுக்குப் பிறகு பலரும் அந்த படத்தில் ஹீரோயினாக நடித்த ஜோதிர்மயியை எங்கேயோ பார்த்து இருக்கிறோமே என யோசித்துக் கொண்டே அட தலைநகரம் படத்தில் ஹீரோயினாக நம்ம நாய் சேகர் வடிவேலுவின் அழகில் மயங்கி விழுந்தவரா இவர் இப்படி பாட்டி போல மாறிட்டாங்களே என சோஷியல் மீடியாவில் புலம்பி வருகின்றனர்.

பகத் ஃபாசில், குஞ்சக்கோ போபன் உள்ளிட்டோர் நடித்திருந்தாலும், படத்தில் கதையின் நாயகனே ஜோதிர்மயி தான் என்பது ரசிகர்களுக்கு கூடுதல் ட்ரீட்டாகவும் இவர் இப்படியெல்லாம் நடித்து அசத்துவாரா? என்கிற வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

bougainvillae review jothirmayi

ஜோதிர்மயி, குஞ்சக்கோ போபன் இணைந்து தயாரித்த இந்த படத்தில் இருவரும் கணவன் மனைவியாக அதிலும் ஒரு ட்விஸ்ட் உடன் நடித்து மிரட்டியுள்ளனர். அதன் முழு விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..

bougainvillae review jothirmayi

போகன்வில்லா கதை: காகிதப்பூவின் ஆங்கில பெயர் தான் Bougainvillea. படத்தில் ஜோதிர்மயி விபத்து ஒன்றில் சிக்கிய நிலையில், அவருக்கு பழசை எல்லாம் மறந்துவிட்டு கற்பனையான ஒரு உலகில் வாழ்வது போன்ற நோய் பாதிப்பில் இருக்கிறார். அவரது கணவராக மருத்துவராக வரும் குஞ்சக்கோ போபன் தனது மனைவியை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்கிறார். அந்த ஊரில் திடீரென சில இளம் பெண்கள் காணாமல் போக அவர்களின் உடல் கூட கிடைக்காத நிலையில், அந்த பெண்களை கடைசியாக சந்தித்ததே ரீத்து கதாபாத்திரத்தில் நடித்த ஜோதிர்மயி தான்.

bougainvillae review jothirmayi

போலீஸ் அதிகாரியாக வரும் பகத் ஃபாசில் ஜோதிர்மயி மற்றும் அவரை சுற்றியிருப்பவர்களிடம் நடத்தும் விசாரணை மூலமாகவே கதை விரிகிறது. அந்த பெண்களுக்கு ஜோதிர்மயிக்கும் என்ன சம்பந்தம் அவர்களை இவர் என்ன செய்தார், ரியல் வில்லன் யார் என்கிற ட்விஸ்ட்டுடன் இந்த கதை அமைந்துள்ளது.

bougainvillae review jothirmayi

செம த்ரில்லர்: மலையாள படங்கள் எல்லாம் ஹாலிவுட் படங்களுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு த்ரில்லர் படங்களாக உருவாகி வருகின்றன. ஸ்லோவாக சென்றாலும் போக போக படம் சூடு பிடித்து முக்கிய திருப்பங்கள் வரும் போது ரசிகர்களை திகைக்க வைக்கும் அத்தனை ஐட்டங்களும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளன. காகிதப்பூவை மட்டுமே ஹீரோயின் ஏன் வரைகிறார். அவரது ஓவியங்களை ரகசியமாக அவரது கணவரே ஏன் வாங்குகிறார். காணாமல் போன பெண்களுக்கு என்ன நடந்தது. சிறு வயதில் மனதில் பதியும் பாலியல் வக்கிரம் ஒருவரை எப்படி மோசமான சைக்கோவாக மாற்றுகிறது என ஏகப்பட்ட விஷயங்களை இயக்குநர் அமல் நீரத் அடுக்கி கொடுத்துள்ள விதம் அட்டகாசம்.

பிளஸ்: தலைநகரம் படத்தில் சுந்தர். சிக்கு ஜோடியாக நடித்த ஜோதிர்மயி தான் இவரா என்கிற அளவுக்கு ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும் விதமாக வயதான தோற்றத்தில் ரசிகர்களை தனது நடிப்பின் மூலமாகவே மாஸ் காட்டியுள்ளார் ஜோதிர்மயி. இயக்குநர் அமல் நீரத்தின் மனைவி தான் ஜோதிர்மயி என்பதால் தனது மனைவிக்காக ஒரு பக்கா ஸ்க்ரிப்டை உருவாக்கி தூள் கிளப்பும் படத்தை கொடுத்திருக்கிறார். பகத் ஃபாசில் இந்த படத்துக்கு ஒரு கூடுதல் பிளஸ்ஸாக மாறியுள்ளார்.

மைனஸ்: ஆனால், பகத் ஃபாசிலின் கதாபாத்திரம் கிளைமேக்ஸில் தாமதமாக வரும் போலீஸ் போல அதே போன்ற காட்சிகளையும் வைத்து எழுதப்பட்டிருப்பது அவரை முன்னிலைப்படுத்தியது வெறும் ரசிகர்களை ஈர்க்க மட்டுமே பார்த்த வேலையாக தெரிகிறது. ஆரம்பத்தில் இருந்தே மெயின் வில்லன் மீதும் டவுட் வந்துவிடுவதும் ஃபிளாஷ்பேக் காட்சி எல்லாம் பல படங்களில் பார்த்த அதே விஷயத்தை கையாண்டு இருப்பது போன்ற மைனஸ்களும் உள்ளன. ஆனாலும், ஓடிடியில் ஒரு நல்ல த்ரில்லர் டைம் பாஸ் அனுபவத்தை இந்த போகன்வில்லா நிச்சயம் கொடுக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X