Don't Miss!
- Automobiles ரூ.199க்கு கார் கண்ணாடியா!! அதிக உறுதியான பின் பக்கத்தை பார்க்க உதவும் யுனோ மிண்டா-வின் கண்ணாடிகள் அறிமுகம்!
- News மூழ்கும் கப்பலில் ஏறியுள்ளது பாமக.. சேர்ந்து மூழ்கப்போகுது.. கூட்டணி பற்றி கமெண்ட் அடித்த காங்கிரஸ்!
- Finance பிரியாணி கடையில் வருமான வரித்துறை ரெய்டு.. அட பெங்களூர் மேக்னா புட்ஸ்-ப்பா..!!
- Sports மும்பை அணியில் சூர்யகுமார் இல்லை? சமூக வலைத்தளத்தில் போட்ட பதிவால் ரசிகர்கள் சோகம்.. என்ன நடந்தது?
- Technology மார்ச் 22 உறுதி.. 50எம்பி கேமரா.. 5000எம்ஏஎச் பேட்டரி.. வருகிறது அசத்தலான போன்.. எந்த மாடல்?
- Education இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டத்தில் பங்கேற்க ஆசையா...!!
- Lifestyle 3 குழந்தைகளின் தந்தை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஓடிய வினோதம்... காரணத்தை கேட்டு மயக்கம் போட்ட நீதிபதி!
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
ஆலியா பட்டா இல்லை ஆம்பர் ஹெர்டா? ஆண்களுக்கு எதிரான வன்முறை.. கிளம்பியது புதிய பூகம்பம்!
மும்பை: நடிகை ஆலியா பட் படங்களை புறக்கணிக்க வேண்டும் என்றும் அவரை கைது செய்ய வேண்டும் என திடீரென பாலிவுட்டில் புதிய பாய்காட் போராட்டம் வெடித்து வருகிறது.
#BoycottAliaBhatt ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து பாலிவுட் ரசிகர்கள் ஆலியா பட்டை ட்ரோல் செய்தும் கண்டபடி திட்டியும் வருகின்றனர்.
இதற்கு எல்லாம் காரணம் ஆலியா பட் நடிப்பில் நெட்பிளிக்ஸ் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி வெளியாக உள்ள டார்லிங்ஸ் படம் தான்.
அடுத்த 4 மாசத்துக்கு ட்விட்டர் பக்கமே தலை வைத்து படுக்க மாட்டேன்.. நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆவேசம்!
ஆலியா பட்டின் டார்லிங்ஸ்
பெண் இயக்குநர் ஜஸ்மீத் கே ரீன் இயக்கத்தில் ஆலியா பட் நடித்துள்ள டார்லிங்ஸ் படம் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. சமீபத்தில் வெளியான அந்த படத்தின் டிரைலர் பாலிவுட் ரசிகர்களை குறிப்பாக ஆண்களை பெரும் கோபத்திற்கு ஆளாக்கி இருக்கிறது. நடிகை ஆலியா பட் தயாரித்து நடித்துள்ள இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என போராட்டங்கள் வெடித்துள்ளன.
அட்டகாசமான நடிகை
இந்தி திரையுலகின் நம்பர் ஒன் நடிகையாக சமீப காலமாக அசத்தி வருகிறார் ஆலியா பட். இந்த ஆண்டு இதுவரை வெளியான அக்ஷய் குமாரின் பல படங்கள் செய்ய முடியாத வசூல் சாதனையை ஆலியா பட்டின் கங்குபாய் கத்தியவாடி செய்து அசத்தியது குறிப்பிடத்தக்கது. கமர்ஷியல் மற்றும் கன்டென்ட் என இரட்டை குதிரைகளில் சரியாக சவாரி செய்து வரும் ஆலியா பட்டின் அடுத்த போல்டான படம் இப்படியொரு சிக்கலை சந்தித்து இருக்கிறது.
டொமஸ்டிக் வயலன்ஸ்
டொமஸ்டிக் வயலன்ஸ் பெண்களுக்கு கொடுக்கப்பட்டாலும், சரி அது ஆண்களுக்கு கொடுக்கப்பட்டாலும் சரி தவறான ஒன்று தான். அதற்கு எதிராக சட்டங்களும் உள்ளன. இந்நிலையில், ஆலியா பட்டின் டார்லிங்ஸ் திரைப்படத்தில் கணவருக்கு எலி மருந்து கொடுப்பது, கட்டி வைத்து உதைப்பது, நான் இனிமேல் ஃபீல்டிங் பண்ண மாட்டேன், பேட்டிங் ஆடப் போறேன் என மட்டையால் தலையில் அடிப்பது உள்ளிட்ட டொமஸ்டிக் வயலன்ஸ் செய்யும் மனைவி கதாபாத்திரத்தில் ஆலியா பட் நடித்துள்ளது தான் இப்படியொரு பாய்காட் டிரெண்டாக காரணம்.
இந்திய ஆம்பர் ஹெர்ட்
ஜானி டெப்புக்கு டொமஸ்டிக் வயலன்ஸ் கொடுத்த ஹாலிவுட் நடிகை ஆம்பர் ஹெர்ட்டின் இந்திய வெர்ஷன் தான் இந்த ஆலியா பட் என ஆலியா பட் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள டார்லிங்ஸ் திரைப்படத்தை புறக்கணிக்க பாலிவுட் ரசிகர்கள் போர்க் கொடி தூக்கி உள்ளனர்.
வயலன்ஸ் வேண்டாம்
ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் வீட்டில் கொடுமை கொடுப்பது சட்டப்படி குற்றம் அதை ஊக்கவிக்கும் படமாக அமைந்துள்ள ஆலியா பட்டின் டார்லிங்ஸ் படத்திற்கு எதிராக அதன் காட்சிகளை பதிவிட்டு Say no to violence என பாலிவுட் ரசிகர்கள் ஆலியா பட்டை விளாசி வருகின்றனர். தொடர்ந்து பாலிவுட் இதே போன்ற விஷயங்களை கையாண்டு வருவதால் தான் அதை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கிறோம் என்றும் கூறுகின்றனர்.
கொடுமைக்காரி
டார்லிங்ஸ் டிரைலர் கட்டிங்ஸை எடுத்துப் போட்டு ஆலியா பட் இவ்வளவு பெரிய கொடுமைக்காரியா என்றும் பாடுபாவி புருஷனை போட்டு எப்படி அடிக்கிறான்னு பாருங்க என்றும் நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர். டார்லிங்ஸ் படத்தை நெட்பிளிக்ஸில் யாரும் பார்க்க வேண்டாம் என்றும், இது போன்ற படங்களை வெளியிடுவதால் தான் நெட்பிளிக்ஸ் இந்தியாவில் நஷ்டம் அடைந்து வருவதாகவும் கூறி உள்ளனர்.
பெண்கள் பண்ணா தப்பு இல்லையா
மனைவியை கொடுமைப்படுத்தும் கணவனை எப்படியெல்லாம் மனைவி புலியாக மாறி பழி வாங்குகிறாள் என்பது தான் டார்லிங்ஸ் படத்தின் கதை. ஆண்கள் பெண்ணை அறைந்தால் டாப்ஸி போல கோர்ட்டில் கேஸ் போட்டு பிரிந்து செல்லும் படங்களை எடுக்கும் அதே பாலிவுட்டில், பெண்கள் இப்படி அடித்து சித்தரவதை செய்வதை ஆதரிப்பது தப்பு இல்லையா? என்கிற கேள்வியையும் ரசிகர்கள் முன் வைத்து வருகின்றனர்.
-
விக்ரம் படத்தில் விஜய்சேதுபதி கேரக்டரில் நடிக்க மறுத்த நடிகர்கள்.. என்ன காரணம் தெரியுமா?
-
Vijay In Kerala - அய்யய்யோ இது என்ன விபரீதம்.. கேரளாவில் நொறுங்கிய விஜய்யின் கார்?.. ட்ரெண்டாகும் வீடியோ
-
Suriya - என்னது புறநானூறு படம் ட்ராப்பா?.. சூர்யா வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் மகிழ்ச்சி