Jenny's kitchen : "ஜென்னிஸ் கிச்சன்" கொரிய ரியாலிட்டி ஷோ அமேசான் பிரைமில்!

சென்னை : இந்தியாவிலும் கொரிய படங்களையும், வெப் தொடர்களையும் விரும்பி பார்க்க தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களின் ஆசையை தற்போது அமோசன் பிரைம் நிறைவேற்றி உள்ளது.

கொரிய ரியாலிட்டி நிகழ்ச்சியான, "ஜென்னிஸ் கிச்சன்" அமோசன் பிரைமில் ஒளிபரப்பாகி வருகிறது.

இதில், லீ சியோ-ஜின், பார்க் சியோ-ஜூன், கே பாப் பாய் மற்றும் BTS' V ஆகியோர் நடித்துள்ளனர்.

நாடுகடந்த ரசிகர்கள்

நாடுகடந்த ரசிகர்கள்

இந்தியாவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்கள் சீனா, ஜப்பான், கொரிய நாடுகளில் வரவேற்பு கிடைக்கிறது. ரஜினி காந்த் நடித்த முத்து படம் ஏற்படுத்திய தாக்கத்தில் ஜப்பான் ரசிகர்கள் ஏராளமானோர் தமிழ் கற்றுக்கொண்ட சம்பவம் உண்டு. அதே போல, ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஜப்பானில் வெளியாக ரூ. 80 கோடியை வசூலித்தது.

BTS இசைக்குழு

BTS இசைக்குழு

அதுமட்டுமில்லாமல் கொரியாவைச் சேர்ந்த பாப் இசைக்குழு BTSக்கு என்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு. இசையால் பல உள்ளங்களைக் கட்டிப்போட்ட இந்தக் குழுவினர் ஏராளமான பாப் இசைப் பாடல்களைப் பாடி ரசிகர்களை மகிழ்வித்து வருவதால், தென் கொரியாவின் புகழ் இந்தியாவில் பரவி பெரும்பாலான இளவட்டங்கள் கொரிய படங்களை பார்த்து வருகின்றனர்.

ஜென்னிஸ் கிச்சன்

ஜென்னிஸ் கிச்சன்

ஜென்னிஸ் கிச்சன் என்ற பெயரில் வெளியாகி வரும் இந்த ரியாலிட்டி ஷோவில், கொரிய தெரு உணவுகள், கொரிய பாரம்பரிய உணவு செய்து காட்டப்படுகிறது. இதில் பிடிஎஸ் இசைக்குழுவில் ஒருவரான 'V' Kim taehyung கொரிய தெரு உணவு உணவகத்தில் பயிற்சியாளராக நடித்துள்ளார்.

வித்தியாசமான ரியாலிட்டி ஷோ

வித்தியாசமான ரியாலிட்டி ஷோ

வித்தியாசமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான இந்த ஷோவை இப்போது இந்தியாவிலும் அமோசன் ஓடிடி தளத்தில் பிப்ரவரி 24ந் தேதியில் ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு எபிசோடு என்ற முறையில் இதுவரை நான்கு எபிசோடுகள் வெளியாகி உள்ளது. ஜென்னிஸ் கிச்சன் இந்த புதிய தொடரில், கொரிய நடிகர் பார்க் சியோ ஜூன் மற்றும் சோய் வூ ஷிக் ஆகியோர் நடித்துள்ளனர்.

அமேசானின் பிரைமில்

அமேசானின் பிரைமில்

அமேசானின் பிரைமில் வெளியாகி உள்ள முதல் கொரியான் ரியாலிட்டி ஷோ இதுவாகும். இந்த ஜென்னிஸ் கிச்சன் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் இந்தோனேஷியா உட்பட 12 வெவ்வேறு நாடுகளில் பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X