ஓடிடியில் வெளியானது “பைரி” திரைப்படம்.. நாகர்கோயில் “புறா” பந்தயம் பார்க்க.. மக்களே நீங்க ரெடியா?
சென்னை: நாகர்கோவிலில் நடக்கும் புறா பந்தயத்தை மையப்படுத்தி அறிமுக நடிகர் “சையத் மஜீத்”(லிங்கம்) நடிப்பில் இயக்குனர் ”ஜான் கிளாரி” இயக்கிய நடித்த “பைரி திரைப்படம்” அமேசான் பிரைமில் வெளியாகி இருக்கிறது.
பைரி திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதத்தில் 2024 இல் தியேட்டரில் வெளியாகி இருந்த நிலையில் அமேசான் பிரைமில் இப்போது வெளியாகி இருக்கிறது.

இந்த திரைப்படத்தின் கதையானது புறா பந்தயத்தில் ஈடுபடுபவர்களின் வாழ்வியல், அவர்கள் சந்திக்கும் பிரச்சனை அவர்களுடைய குடும்பத்தினர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்று பல விஷயங்களை விளக்கி இருக்கிறது. பொதுவாக இந்த மாதிரி பந்தயங்களில் ஈடுபடுபவர்கள் எப்படி அந்த பந்தயத்திற்குள் சிக்குகிறார்கள்?அதுபோல சிலர் எடுக்கும் முடிவால் அவர்களுடைய குடும்பத்தினர், நண்பர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பது பற்றி பல விஷயங்களை இந்த திரைப்படத்தில் உடைத்திருக்கின்றனர்.
இயற்கை எழில் கொஞ்சும் “கன்னியாகுமரி” மாவட்டத்தில் நாகர்கோவில் அருகில் உள்ள அறுகு விளையில் நூற்றாண்டுகளாக நடந்து வரும் புறா பந்தயத்தில் ராஜலிங்கம் (சையத் மஜீத்) குடும்பமும் ஒன்றாக இருக்கிறது. இந்த புறா பந்தயத்தால் ராஜலிங்கத்தின் வாழ்க்கை வீணாக போகக்கூடாது என்று அவருடைய அம்மா சரஸ்வதி (விஜி சேகர்) லிங்கத்தை படிக்க வைத்து அதிலிருந்து அவரை மாற்றிவிட நினைக்கிறார்.

ஆனால் அம்மாவை ஏமாற்றிவிட்டு புறா பந்தயத்தில் ஈடுபடும் லிங்கம் அந்த புறா பந்தயத்தில் ஜெயித்தாரா? இல்லையா? அவர் எப்படி தன்னுடைய அம்மாவின் பேச்சையும் மீறி புறா பந்தயத்துக்குள் வந்தார்? அதனால் அவர் பட்ட கஷ்டங்கள் என்ன என்பதை பற்றி இந்த திரைப்படத்தில் ரத்தமும் சதையுமாகவே கதையை சொல்லி முடித்திருக்கிறார்கள். அதிலும் அறிமுக இயக்குனர் “ஜான் கிளாடி” கதாநாயகன் லிங்கத்தின் நண்பன் “அமல்”ஆக வாழ்ந்து இருக்கிறார்.
அதுபோல ஆரம்பத்தில் இருந்து தன்னுடைய மகனை திருத்தி விட வேண்டும் என்பதற்காக லிங்கத்தின் அம்மா தன் இயலாமையால் திட்டிக்கொண்டே இருப்பதை பார்க்கும்போது நாகர்கோவிலில் ஒரு தெருவில் அமர்ந்து இந்த சண்டையை பார்ப்பது போலத்தான் காட்சிகள் இருக்கிறது . அதுபோல படத்தின் தொடக்கத்திலேயே வில்லுப்பாட்டின் வழியிலே தான் கதையை தொடங்குகிறார்கள்.
“ஏல மக்கா” என்று சொந்த மண்ணின் மொழியிலேயே கதாபாத்திரங்களை அறிமுகம் செய்து ரசிகர்களை இருக்க வைக்கிறார்கள். அதிலும் தன்னுடைய ஊருக்கு ஏதாவது பிரச்சனை என்றால் உடனே ஓடிவரும் ரமேஷ் பண்ணையாராக (ரமேஷ் ஆறுமுகம்) வாழ்ந்து இருக்கிறார். கடைசியில் இரண்டாவது பாகத்திற்காக கதையில் டுவிஸ்ட் வைத்து முடித்திருக்கிறார்கள். லிங்கத்தை ஒருதலையாக காதலிக்கும் அவருடைய மாமன் மகள் அப்போ அப்போ வந்து அனுதாபத்தை பெறுகிறார். அதைப்போல லிங்கம் காதலிக்கும் அவருடைய காதலி போனில் மட்டும் எப்பவாது பேசிக் கொண்டிருக்கிறார். காதல் காட்சிகள் இரண்டாவது பாகத்தில் தொடருமா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம். ஆனாலும் கிளைமாக்ஸ் ரசனையாகவே அமைந்திருந்தது. அதுபோல வில்லன் சுயம்புவை சொல்லியே ஆக வேண்டும். மொட்டை தலை பெரிய மீசை என அப்படியே கிராமத்து வில்லனாக பக்காவாக பொருந்தி இருக்கிறார். இவரும் இனி இரண்டாவது பாகத்தில் என்ன செய்ய காத்திருக்கிறார் என்று பார்க்கலாம். அது போல இந்த படம் முழுக்கவே கன்னியாகுமரியில் பேசப்படும் மூன்று மொழிகளையும் அழகாக பேசி இருக்கின்றனர். ஒரு சில இடங்களில் சில தடுமாற்றங்கள் இருந்தாலும், பல இடங்களில் இந்த படம் நாகர்கோவில் வாழ்க்கையை பிரதிபலித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











