Captain Miller OTT: தியேட்டரில் மாஸ் காட்டிய கேப்டன் மில்லர்... OTT ரைட்ஸை தட்டித் தூக்கிய அமேசான்

சென்னை: தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு இன்று வெளியானது. உலகம் முழுவதும் ரிலீஸான கேப்டன் மில்லருக்கு சிறப்பான ஓபனிங் கிடைத்துள்ளது. அசுரன் படத்துக்குப் பின்னர் கேப்டன் மில்லர் தான் தரமான சம்பவம் என ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். கேப்டன் மில்லர் படத்துக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளதால், அதன் ஓடிடி உரிமையை அமேசான் நிறுவனம் பல கோடிகள் கொடுத்து வாங்கியுள்ளதாம்.

கேப்டன் மில்லர் ஓடிடி ரைட்ஸ்
தனுஷின் கேப்டன் மில்லர் எதிர்பார்த்தபடியே பாசிட்டிவான விமர்சனங்களுடன் பட்டையை கிளப்பி வருகிறது. பீரியட் ஜானரில் மிரட்டலாக உருவாகியுள்ள இந்தப் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கேப்டன் மில்லர், தனுஷுக்கு மிகப்பெரிய கம்பேக் படமாக அமைந்துள்ளது. இதனை தனுஷ் ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர்.

 Captain Miller OTT Rights Dhanush Captain Miller OTT Rights bagged by Amazon Prime for a higher price

தனுஷ் 3 கெட்டப்புகளில் நடித்துள்ள இந்தப் படத்தில் அவருடன், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். காலை முதலே கேப்டன் மில்லர் படத்துக்கு பாசிட்டிவான விமர்சனங்களே கிடைத்துள்ளன. ஒரு சில இடங்களில் படம் லேங் ஆனாலும், திரைக்கதை, மேக்கிங், தனுஷின் ஆக்டிங், ஜிவி பிரகாஷின் பிஜிஎம் படத்தை தூக்கி நிறுத்தியுள்ளது.

அதேநேரம் கேப்டன் மில்லர் முதல் பாதி தரமாக இருந்தது எனவும், இரண்டாம் பாதியில் அவ்வளவு வேகம் இல்லை என்றும் சிலர் கூறி வருகின்றனர். முதல் நாள் என்பதால் தனுஷ் ரசிகர்களின் விமர்சனங்கள் தான் கேப்டன் மில்லருக்கு பெரிய சப்போர்ட்டாக அமைந்துள்ளது. பொங்கல் முடிந்துவிட்டால் இதே மாதிரியான சக்சஸ் தொடருமா என்பதில் சந்தேகமே எனவும் சொல்லப்படுகிறது.

விமர்சன ரீதியாக படம் எப்படி இருந்தாலும், பாக்ஸ் ஆபிஸில் கேப்டன் மில்லர் தான் பொங்கல் வின்னர் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதன்படி கேப்டன் மில்லர் முதல் நாளில் உலகம் முழுவதும் 30 கோடி வரை வசூலிக்கலாம் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்தடுத்த நாட்களில் வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்நிலையில், கேப்டன் மில்லர் ஓடிடி ரைட்ஸ் பல கோடிக்கு விலை போயுள்ளது.

தியேட்டர் ஆடியன்ஸிடம் கேப்டன் மில்லருக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், ஓடிடியிலும் பெரிய சக்சஸ் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கடும் போட்டிகளுக்கு மத்தியில் கேப்டன் மில்லர் படத்தை அமேசான் ப்ரைம் கைப்பற்றியுள்ளது. அதன்படி, கேப்டன் மில்லர் ஓடிடி ரைட்ஸ் 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக விலை போயுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X