OTT: சமுத்திரக்கனி - கௌதம் மேனனின் 'கார்மேனி செல்வம்': ஜூன் 3 முதல் ஓடிடி ரிலீஸ்.. எதில் தெரியுமா?

சென்னை: பாத்வே புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராம் சக்ரி இயக்கத்தில் உருவாகி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்ற படம் 'கார்மேனி செல்வம்'. சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், லட்சுமி பிரியா சந்திரமௌலி, அபிநயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மியூசிகிளவுட் ஸ்டுடியோஸ் மற்றும் டெக்னாலஜிஸ் நிறுவனம் இசையமைத்துள்ளது. யுவராஜ் தக்ஷன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தியேட்டர்களில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்த படம் ஜூன் 3-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

படத்தின் கதையைப் பொறுத்தவரையில், நிதி நெருக்கடியிலிருந்து தப்பிப்பதற்காக தனது முதலாளியின் காரை யாருக்கும் தெரியாமல் டாக்ஸியாக இயக்கும் ஓட்டுநர் ஒருவரின் வாழ்க்கை தான் ஒன்லைன். பண மற்றும் மனப் போராட்டங்களுக்கு நடுவே அந்த மனிதன் எதிர்கொள்ளும் சவால்களும், அதன் பின்னணியில் நடக்கும் சம்பவங்களும் தான் கதை. படம் முடிந்த பிறகும், மன அமைதி, நேரம், குடும்பம் ஆகியவற்றை இழந்த பிறகு கிடைக்கும் நிதி சுதந்திரம் உண்மையில் மதிப்புள்ளதா? என்ற கேள்வியோடு கதை நகர்கிறது.

படத்தின் கதையைப் பொறுத்தவரையில் மிகவும் எதார்த்தமான பிளாட் போலத்தான் உள்ளது. ஆனால், திரைக்கதையில் இயக்குநர் ராம் சக்ரி திறம்பட செயல்பட்டுள்ளார். மனிதர்களின் உணர்வுகளை மிகச் சரியாக பிரதிபலித்து, ஒரு காட்சியைக் கூட இது எதற்கு என்று யாரும் கேள்வி எழுப்ப முடியாத அளவுக்குப் பார்த்துப் பார்த்து உணர்வுப்பூர்வமாக உருவாக்கியுள்ளார் என்று தான் கூற வேண்டும்.

Kaarmeni Selvam OTT Release Samuthirakani Starrer Streams on Amazon Prime Video from June 3

யதார்த்தமான நடிப்பு: சமுத்திரக்கனி மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் முதன்மை வேடங்களில் தங்களது எனர்ஜியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ரசிகர்களை மொத்தமாக சர்ப்ரைஸ் ஆக்கியது என்றால் அது லட்சுமி பிரியா சந்திரமௌலி மற்றும் அபிநயாவின் யதார்த்தமான நடிப்பு தான். இவர்களின் பங்களிப்பு படத்திற்குப் பெரிய பலம் சேர்த்துள்ளது.

எமோஷனல்: படத்தின் முதல் பாதியிலேயே, கதாபாத்திரங்களின் எமோஷனல் காட்சிகள் மூலம் ரசிகர்களுக்கு வைக்கும் நடிப்பு விருந்துக்கே தியேட்டரில் அப்லாஸ் அள்ளியது. படத்தின் விறுவிறுப்பான திரைக்கதைக்கு ஜெகன் ஆர்.வி மற்றும் தினேஷ் எஸ் ஆகியோரின் படத்தொகுப்பு கச்சிதமாகப் பொருந்தி, படத்தை டாப் கியரில் நகர்த்திக் கொண்டு உள்ளது. அதே விறுவிறுப்பில் இரண்டாவது பாதியும் நகர, மொத்த படமும் விருதுகளை வெல்வதற்குத் தகுதியான ஒரு படம் என்று நினைக்கும் அளவுக்கு இருந்தது.

Kaarmeni Selvam OTT Release Samuthirakani Starrer Streams on Amazon Prime Video from June 3

ஓடிடி ரிலீஸ்: படத்திற்குப் பெரிய பிளஸ் என்றால் அது, யுவராஜ் தக்ஷனின் ஒளிப்பதிவும், மியூசிகிளவுட் ஸ்டுடியோஸின் இசை மற்றும் ஒலி வடிவமைப்பும் தான். உணர்வுப்பூர்வமான காட்சிகளை ரசிகர்களுக்கு மேலும் நெருக்கமாகக் காட்ட காட்சிக்குக் காட்சி மெனக்கெட்டு இசையமைத்துள்ளனர். "இந்த படம் ஒவ்வொரு வீட்டையும் சென்றடைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் - இப்போது அது சாத்தியமாகிறது" என்று இயக்குநர் ராம் சக்ரி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். குடும்பத்துடன் இணைந்து பார்க்கும் வகையில், தரமான திரைக்கதையுடன் மிக நீண்ட நாட்களுக்குப் பின்னர் வெளிவந்துள்ள பக்கா எமோஷனல் டிராமா படம். ஒர்த் டூ வாட்ச். ஜூன் 3ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X