Carry On Review: வேறலெவல்.. 5000 பேர் உயிரை காப்பாற்றும் விமான செக்கர்.. கேரி ஆன் விமர்சனம்!

சென்னை: நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் கடந்த டிசம்பர் 13ம் தேதி வெளியான கேரி ஆன் (Carry On) திரைப்படம் தான் இந்த வாரம் ஓடிடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. பெரிதாக புதிய படங்கள் தியேட்டருக்கு வராத நிலையில், ஓடிடி பக்கம் ஒதுங்கிய ரசிகர்களுக்கு ஜாமே காலெட் செரா இயக்கத்தில் டாரன் எகர்டன், சோஃபியா கார்சன் மற்றும் ஜேசன் பேட்மேன் நடிப்பில் வெளியான இந்த சீட் எட்ஜ் த்ரில்லர் ரசிகர்களின் கண்களுக்கு செம ட்ரீட்டாக அமைந்துள்ளது.

வெடிகுண்டு வைத்து மிரட்டும் படங்களை ஹாலிவுட் முதல் கடைசியாக கோலிவுட்டில் வந்த விஜய்யின் கோட் வரை பார்த்திருக்கிறோம். எப்போதுமே க்ளிக் ஆகக் கூடிய அந்த பரபரப்புக்கு பஞ்சமில்லாத கதையை திரைக்கதை மற்றும் மேக்கிங் மூலமாக எந்தளவுக்கு சுவாரஸ்யமாக கொடுத்து ஆடியன்ஸை கட்டிப்போடுகின்றனரோ அவர்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவார்கள்.

ott review

அந்த வேலையை கேரி ஆன் படம் கனகச்சிதமாக செய்துள்ளது என்றே கூறலாம். அதிலும் ஹீரோ தனியாளாக படம் முழுக்க தன்னுடைய பய உணர்வையும், மக்களையும் கன் பாயின்ட்டில் இருக்கும் தனது மனைவியையும் காப்பாற்ற வேண்டும் என போராடுவதில் தான் பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. கேரி ஆன் படத்தின் நிறை குறைகளை முழுமையாக இந்த ஓடிடி விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க..

கேரி ஆன் கதை:

ஜாமே காலெட் செரா இயக்கத்தில் டாரன் எகர்டன், சோஃபியா கார்சன் மற்றும் ஜேசன் பேட்மேன் உள்ளிட்டோர் நடித்துள்ள கேரி ஆன் படத்தில் போலீஸ் ஆக ஆசைப்படும் நாயகன் சிறு தவறு காரணமாக அந்த வாய்ப்பை இழந்து விமான நிலையத்தில் சாதாரண பாதுகாப்பு பணியில் அமர்த்தப்படுகிறான். ஒரு நாள் தனது பாஸிடம் பேசி தனக்கு பெரிய பொறுப்பைக் கொடுக்கச் சொல்லி லக்கேஜ் பேக் செக் செய்யும் பொறுப்பை ஏற்கிறான். சக்தி வாய்ந்த விஷவாயுவை விமானத்தில் கொண்டு சென்று பிரபல தலைவரை கொன்று அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே போர் வெடிக்க செய்யும் திட்டத்துடன் விமான நிலையத்துக்கு வரும் வில்லன் ஹீரோவை பகடை காயாக மாற்றி தனது காரியத்தை செய்துக் கொள்ள பார்க்கிறான். கடைசியில் வில்லனின் எண்ணம் பலித்ததா? ஹீரோ அந்த விமான நிலையத்தில் இருந்தவர்களையும் விமானத்தில் இருந்தவர்களையும் காப்பாற்றினாரா? இல்லையா? என்பது தான் கேரி ஆன் படத்தின் கதை.

ott review

வில்லனிடம் மாட்டிக் கொண்டு முழிக்கும் ஹீரோ:

படத்தின் தொடக்கத்தில் இருந்தே ஹீரோவை தனது கட்டுப்பாட்டுக்குள் வில்லன் கொண்டு வந்துவிடுகிறார். காதில் ஒரு ப்ளூடூத் ஹெட்செட்டை ஹீரோவை மாட்டிக் கொள்ளச் சொல்லும் வில்லன் தான் சொல்வதை எல்லாம் ஹீரோ கேட்க வேண்டும் என்றும் தப்பித் தவறி வேறு யாருக்காவது இந்த விஷயம் லீக்கானால் உன் மனைவியை கொன்றுவிடுவேன் என எச்சரிக்கிறார்.

கன் பாயின்ட்டில் மனைவி, விமான நிலையத்தில் 5000 பேர் கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக செல்ல காத்திருக்கும் நிலையில், அந்த விமானத்தில் லக்கேஜை க்ளியர் செய்து அனுப்பினாலும் அது வெடித்து அதில் உள்ள கேஸ் வெளியே பரவினால் விமானத்தில் உள்ள 250 பேர் இறந்துவிடுவார்களே என்கிற பதைபதைப்பு மற்றும் தனது மனைவியை காப்பாற்றி விட வேண்டும் என்கிற சுயநலம் என அனைத்து எமோஷன்களையும் பெரிதாக வெளியே காட்ட முடியாமலும் காட்டியும் ஹீரோ டாரன் எகர்டன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஹீரோவை வில்லன் கீ கொடுத்த பொம்மை போல ஆட்டிப் படைக்கும் காட்சிகள் எல்லாம் வேறலெவல். வில்லனாக ஜேசன் பேட்மென் மாஸ் காட்டுகிறார்.

ott review

படம் பார்க்கலாமா? வேண்டாமா?:

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் இந்த படம் வெளியாகி இருக்கிறது. ஸ்குவிட் கேமுக்கு முன்னதாக ஹாலிவுட் பட பிரியர்களுக்கு செம ஐட்டமாக சிக்கியிருக்கும் கேரி ஆன் படத்தை கண்டிப்பாக பார்க்கலாம். அந்த விஷ வாயு பாம் உள்ள பேகை க்ளியர் செய்து அனுப்பிய பின்னர் நடக்கும் காட்சிகள், கிளைமேக்ஸில் தனியாளாக அத்தனை உயிர்களையும் காப்பாற்ற ஹீரோ பண்ணும் முயற்சிகள் என எல்லாமே சிறப்பாக உள்ளது. கிளைமேக்ஸ் எப்படியும் இப்படித்தான் முடியும் என்பது தெரிந்து அதே டிராக்கில் படம் செல்வது கொஞ்சம் நெகட்டிவாக இருந்தாலும் பார்ப்பதற்கு வொர்த்தான படம் தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X