Case Of Kondana: க்ரைம் த்ரில்லர் படம் பிடிக்குமா? அப்போ இந்த படத்தை ஓடிடியில் பாருங்க!

சென்னை: தேவி பிரசாத் ஷெட்டியின் 'கேஸ் ஆஃப் கொண்டனா' ஒரு த்ரில்லர் மற்றும் தனித்துவமான மனநிலையையும், அசுர வேகத்தில் நகரும் திரைக்கதையையும் கொண்ட திரைப்படமாகும். இப்படம் ஜனவரி மாதம் தியேட்டரில் வெளியான நிலையில் இத்திரைப்படத்தை இப்போது ஓடிடியில் பார்க்கலாம்.

தேவி பிரசாத் ஷெட்டி இயக்கத்தில் விஜய் ராகவேந்திரா, பாவனா நடித்த திரைப்படம் கேஸ் ஆஃப் கொண்டனா. பெங்களுர் அருகில் இருக்கும் கொண்டனா என்ற கிராமத்தில் ஹீரோ போலீஸ் வில்சன் (விஜய் ராகவேந்திரா) எஸ்ஐயாக பணியில் சேருகிறார். அதே காவல்நிலையத்தில் ஏசிபியாக (லட்சுமி) நடிகை பாவனா மேனன் இருக்கிறார். இவர் ஒரு தொடர் கொலை வழக்கை விசாரித்து வருகிறார். லட்சுமி தனது இலக்கை நெருங்கிவிட்டாலும், காவல் துறையில் புதியவரான சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (விஜய் ராகவேந்திரா) சம்பந்தப்பட்ட மற்றொரு குற்றத்துடன் கதையை மசாலாப்படுத்தி நம்மைத் திகைக்க வைக்கிறார் இயக்குனர்.

Case Of Kondana streaming now on Amazon prime

கேஸ் ஆஃப் கொண்டனா: ஒரு புறம் ரவுடி, மற்றொரு பானி பூரி விற்பனை செய்யும் நபர் தனது மகனின் மருத்துவ செலவிற்காக 5 லட்சத்தை தேடி அலைந்து கொண்டு இருக்கிறார். சப் இன்ஸ்பெக்டர் வில்சன், ஏசிபி லட்சுமி, ரவுடி, பானிபூரி வியாபாரி என அனைவருக்கும் தனித்தனி கதை இருந்தாலும் அனைவரும் ஒன்று சேருவது போல ஒரு சம்பவம் நடக்கிறது. அதில் இருந்து கதையின் போக்கு மாறுகிறது. ஹீரோ கொலை செய்கிறார் அதை மறைக்க பல முயற்சியை செய்ய, அந்த கொலையை கண்டுபிடிக்க பாவனா மெனக்கெடுகிறார். ஹீரோ யாரை கொலை செய்தார்... பாவனா அதை கண்டுபிடித்தாரா.. இல்லையா.. என்பது தான் படத்தின் மீதிக் கதை.

படத்தின் பிளஸ்: படத்தின் திரைக்கதை இந்த படத்திற்கு மிகப்பெரிய பிளஸாக அமைந்துள்ளது. நான்கு பேரின் கதையை இந்த படத்தில் ஒரு இடத்தில் கொண்டுவந்து அதற்கான காட்சிகளை, திரைக்கதையும் அழகாக சொல்லி இருந்தார் இயக்குநர் தேவி பிரசாத் ஷெட்டி. ஹீரோ வில்சன் அதிகம் யோசிக்காமல் சூழ்நிலைக்கு ஏற்ப நடந்து கொண்டாலும், லக்ஷ்மி குற்றவாளிகளை கையாளும் போது சட்டத்தை தன் கைகளில் எடுத்துக்கொள்கிறார்.

Case Of Kondana streaming now on Amazon prime

ஓடிடியில் பாருங்க: நமக்குப் பழக்கப்பட்ட த்ரில்லர் திரைப்படமாக இருந்தாலும், படம் ஆரம்படத்தில் இருந்து இறுதிவரை அசுர வேகத்தில் நகர்கிறது. ஜனவரி மாதம் தியேட்டரில் வெளியாகி சக்கைப்போடு போட்ட இத்திரைப்படத்தின் மொத்த வசூல் ரூ.51 கோடியாகும். இத்திரைப்படத்தை தற்போது அமேசான் பிரைமில் பார்க்கலாம். க்ரைம் த்ரில்லர் படங்களை ரசித்து பார்க்கும் ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் நிச்சயம் பிடிக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X