சந்திரஹாசனின் கடைசிபடம்… ‘அப்பத்தாவ ஆட்டய போட்டுட்டாங்க… நேரடியாக ஓடிடியில்!
சென்னை : நடிகர் சந்திரஹாசன் கடைசியாக நடித்த அப்பத்தாவ ஆட்டய போட்டுட்டாங்க படம் அக்டோபர் 8ந் தேதி நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது.
இப்படத்தில் கமல்ஹாசனின் சகோதரர் சந்திரஹாசனும் கதாநாயகனாகவும், நடிகர் விக்ராந்தின் அம்மா ஷீலா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.
GB Studio நிறுவனத்திற்காக பிரான்சிஸ் ஆல்பர்ட் ஆண்டனி மற்றும் Leo Vision நிறுவனத்திற்காக V.S. ராஜ்குமார் இணைந்து இப்படத்தை தயாரித்து உள்ளனர்.

வயது தடையில்லை
காதலிக்க வயது ஒரு தடைஇல்லை, உடலிற்குத்தான் வயதாகும், மனசு எப்போதும் இளமையுடனே இருக்கும் என்பதை அழகாக எடுத்துரைக்கும் படம் தான் "அப்பத்தாவ ஆட்டய போட்டுட்டாங்க".

முதுமை ஜோடி
ஒரு முதியோர் இல்லம், முதுமை காலத்தில் காதலை அனுபவிக்க எண்ணும் ஒரு ஜோடி, அவர்களின் காதலை தடுக்க நினைக்கும் உறவுகள், காதலை காப்பாற்ற கைக்கொடுக்கும் நண்பர்கள், இறுதியில் காதல் ஜோடிகள் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதை நகைச்சுவையுடன் இப்படம் உருவாகி உள்ளது.

முக்கிய நடிகர்கள்
இப்படத்தை என். ஸ்டிபன் ரங்கராஜ் இயக்கி உள்ளார். மேலும், GB Studio நிறுவனத்திற்காக பிரான்சிஸ் ஆல்பர்ட் ஆண்டனி மற்றும் Leo Vision நிறுவனத்திற்காக V.S. ராஜ்குமார் இணைந்து இப்படத்தை தயாரித்து உள்ளனர். இப்படத்தில், சந்திரஹாசன் கதாநாயகனாகவும், கதாநாயகியாக நடிகர் விக்ராந்தின் அம்மா ஷீலாவும் நடித்துள்ளனர். மேலும், டெல்லிகணேஷ், காத்தாடி ராமமூர்த்தி, ஷண்முகசுந்தரம், ஜெயராவ் ஆகியோர் நடித்துள்ளனர்.

சந்திரஹாசனின் கடைசி படம்
காஞ்சிபுரம், சென்னை ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி இருந்த நிலையில் சந்திரஹாசன் மாரடைப்பால் காலமானார். தற்போது இப்படத்தின் அனைத்து கட்ட பணிகளும் முடிந்து படம் வெளியிட்டுக்கு தயாராக உள்ளது.

கமல் ட்விட்டர் பதிவு
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், என் திறமையை வெளிப்படுத்தும் பேரார்வத்தில் தன்திறமையை திரையில் காட்டாமலே போய்விட்டவர் சந்திரஹாசன். அவர் நடித்த கடைசிபடம்'அப்பத்தாவ ஆட்டைய போட்டுட்டாங்க' அக்டோபர் 8ம் தேதி SonyLIV -ல் வெளியாகிறது. என்னை வாழ்த்தியவரை வணங்க கடமைப்பட்டுள்ளேன் 'ஐயா..அப்பா..உங்கள் படம் 8ம் தேதி ரிலீஸ்' என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











