ரெண்டகம் திருட்டு கதையா? ஓடிடியில் வெளியிட உயர்நீதிமன்றம் தடை..ஏன் தெரியுமா?

சென்னை : அரவிந்த் சாமியின் ரெண்டகம் படத்தை ஓடிடியில் வெளியிட உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

மலையாளம் மற்றும் தமிழ் என ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட இப்படம் மலையாளத்தில் செப்டம்பர் 8ந் தேதி வெளியான நிலையில், தமிழில் செப்டம்பர் 23ஆம் தேதி வெளியானது.

ஃபெலினி இயக்கத்தில் அரவிந்த் சாமி, குஞ்சக்கோ போகன் மற்றும் ஈஷா ரெப்பா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

ரெண்டகம்

ரெண்டகம்

வேலையில்லாமல் இருக்கும் இளைஞன் தனது காதலியுடன் வெளிநாட்டில் சென்று செட்டிலாக ஆசைபடுகிறான். எப்படியாவது பணத்தை சம்பாதித்து விடலாம் என அலையும் நேரத்தில், ஒரு மர்ம கும்பல் அவரை அணுகி பழைய நினைவில்லாமல் இருக்கும் அரவிந்த் சாமியிடம் பழகி, அவரது நினைவை மீட்டெடுக்க வேண்டும் என்ற வேலையைக் கொடுக்கிறது. அரவிந்த்சாமிக்கு பழைய நினைவு திரும்பியதா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

படத்திற்கு சிக்கல்

படத்திற்கு சிக்கல்

செப்டம்பர் 23ந் தேதி திரையரங்கில் வெளியான இத்திரைப்படம் சுமாராவாகவே இருந்தது.வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட படம் என்பதால், இப்படத்திற்கு நல்ல விமர்சனம் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்படம் வந்த சுவடே தெரியாமல் பெட்டிக்குள் சுருண்டது. ஓடிடியில் வெளியிட்டு லாபத்தை பார்த்துவிடலாம் என எண்ணிய நிலையில் அதற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு

உயர்நீதிமன்றத்தில் வழக்கு

இந்நிலையில், ரெண்டகம் படத்தின் கதை தன்னுடைய கதை என்று சென்னையை சேர்ந்த கிஷோர் குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். அதில், இந்த கதையை ஜாவா என்கிற பெயரில் அரவிந்த் சாமியிடம் கூறியிருந்தேன். சில காரணங்களால், அந்த படம் எடுக்கமுடியாமல் போனது.

திருட்டு கதை

திருட்டு கதை

என்னுடைய கதையை திருடி ரெண்டகம் என்ற பெயரில், தனக்குத் தெரியாமல் படமாக்கி உள்ளனர். எனவே இந்த படத்தை ஓடிடியில் வெளியிடக்கூடாது என வழக்கு தொடுத்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன் ரெண்டகம் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட இடைக்கால தடை விதித்ததோடு, தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட ஐந்து பேர் தலா 10 லட்சம் ரூபாயை வரும் பத்தாம் தேதிக்குள் டெபாசிட் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X