Chithha OTT Release - தியேட்டரில் மட்டுமில்லை ஓடிடியிலும் செம ரெஸ்பான்ஸ்.. ஹாட் ஸ்டாரில் ரிலீஸானது சித்தா..

சென்னை: Chithha OTT Release (சித்தா ஓடிடி ரிலீஸ்) சித்தார்த் நடிப்பில் உருவான சித்தா திரைப்படம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.

இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக இருந்தவர் சித்தார்த். கன்னத்தில் முத்தமிட்டால், ஆய்த எழுத்து உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக இருந்த அவர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். அந்தப் படத்தில் அவரின் நடிப்பு வெகுவாக ரசிக்கப்பட்டது. அதனையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் 2004ஆம் ஆண்டு வெளியான ஆய்த எழுத்து படத்திலும் நடித்தார்.

Chithha Movie Released in Hot Star OTT Platform

தொடர் நடிப்பு: அவர் நடித்த முதல் இரண்டு படங்களிலுமே அவருக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்ததை அடுத்து வரிசையாக படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் கவனம் செலுத்த ஆரம்பித்த சித்தார்த்துக்கு சில படங்கள் மட்டுமே சொல்லிக்கொள்ளும்படியான ஹிட் படங்களாக அமைந்திருக்கின்றன. இருந்தாலும் அவர் நல்ல நடிகர் என்ற பெயரையும் பெற்றிருக்கிறார்.

சித்தா: சூழல் இப்படி இருக்க பல வருடங்களாக நடித்துவரும் சித்தார்த்துக்கு ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் என்று சொல்லிக்கொள்ளும்படி எந்தப் படமும் அமையாமல் இருந்தது. இப்படிப்பட்ட நிலைமையில்தான் சித்தா படத்தில் நடித்தார் அவர். நடித்தது மட்டுமில்லாமல் அந்தப் படத்தை அவரே தயாரிக்கவும் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. படமானது கடந்த செப்டம்பர் மாதம் ரிலீஸானது.

செம ரெஸ்பான்ஸ்: அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த், நிமிஷா சஜயன் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. எதிர்பார்ப்பில்லாமல் படம் வெளியானாலும் படத்தின் கதை, மேக்கிங் உள்ளிட்டவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதன் காரணமாக குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு சென்று படத்தை பார்த்தார்கள் ரசிகர்கள். எனவே இந்தப் படம் சித்தார்த்தின் கரியரில் மெகா ஹிட்டாக அமைந்திருக்கிறது.

ஓடிடியில் ரிலீஸ்: சாமானிய ரசிகர்கள் மட்டுமின்றி கமல் ஹாசன், ரஜினிகாந்த், மணிரத்னம் உள்ளிட்ட செலிபிரிட்டிகளும் படத்துக்கு தங்களது பாராட்டை தெரிவித்தனர். 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான படம் வணிக ரீதியாகவும் நல்ல லாபத்தை பார்த்திருக்கிறது. இந்நிலையில் படமானது இன்று ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் படம் ரிலீஸாகவிருக்கிறது. திரையரங்குக்கு சென்று படத்தை பார்க்காதவர்களும், ஏற்கனவே பார்த்தவர்களும் படத்தை பார்த்து ஓடிடியிலும் நல்ல ரெஸ்பான்ஸை கொடுத்துவருகிறார்கள். அது சம்பந்தமான கமெண்ட்ஸ்களையும் சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது. தியேட்டர் மற்றும் ஓடிடி ஆகிய இரண்டு இடங்களிலும் படத்துக்கு செம ரெஸ்பான்ஸ் கிடைத்திருப்பதால் சித்தா படக்குழு ஹேப்பி அண்ணாச்சி மூடில் இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X