Chithha OTT Release: சித்தா OTT ரிலீஸ் தேதி இதுதான்... எந்த பிளாட்ஃபார்ம்ன்னு தெரியுமா..?

சென்னை: சித்தார்த் நடித்த 'சித்தா’ திரைப்படம் செப்டம்பர் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அருண் குமார் இயக்கத்தில் சித்தார்த், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.

அதிகம் எதிர்பார்ப்பில்லாமல் வெளியான சித்தா, பாசிட்டிவான விமர்சனங்கள் பெற்றது. இந்நிலையில், சித்தா படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Chithha OTT Release: Chithha movie streaming on Hotstar from Nov 17th

சித்தா ஓடிடி ரிலீஸ் தேதி
சித்தார்த் நடிப்பில் அருண் குமார் இயக்கிய திரைப்படம் சித்தா. மினிமம் பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் செப். 28ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அதிக எதிர்பார்ப்பில்லாமல் ரிலீஸான சித்தா, ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. அனைத்துத் தரப்பில் இருந்தும் பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்தன.

சித்தார்த்துடன் நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம், Child Abuse எனப்படும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை பின்னணியாக வைத்து உருவாகியுள்ளது. Child Abuse பற்றி இதுவரை பேசாத புதிய கோணத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளதாக பலரும் விமர்சனம் செய்திருந்தனர். அதுமட்டும் இல்லாமல் சித்தார்த்தின் நடிப்பும் சித்தா சக்சஸ்க்கு காரணமாக இருந்தது.

பெண் குழந்தைகள் குட் டச், பேட் டச் பற்றி தெரிந்துகொள்ள சித்தா படத்தை பார்க்கலாம் என கூறியிருந்தனர். திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய சித்தா, பாக்ஸ் ஆபிஸில் 20 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்தின் பட்ஜெட் 6 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சித்தா படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து அபிஸியலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, சித்தா திரைப்படம் வரும் 17ம் தேதி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளது. இதனால் ஓடிடி ரசிகர்கள் அதிக உற்சாகத்தில் உள்ளனர். சித்தா படத்தை தியேட்டரில் மிஸ் செய்த ரசிகர்கள், இப்போது ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்த்துவிட வேண்டும் என ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். திரையரங்குகளை போல ஓடிடியிலும் சித்தாவுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X