Oppenheimer OTT: 7 ஆஸ்கர் விருதுகளை தட்டி தூக்கிய ஓபன்ஹெய்மர்.. ஓடிடியில் எந்த தளத்தில் பார்க்கலாம்!
சென்னை: ஏழு ஆஸ்கர் விருதுகள், குளோபல் விருதை குவித்த கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கிய ஒபன்ஹெய்மர் திரைப்படத்தை தற்போது ஓடிடியில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் கண்டு ரசிக்கலாம். தியேட்டரில் இப்படத்தை தவறவிட்ட கிறிஸ்டோஃபர் நோலன் ரசிகர்களுக்கு, இந்த வாரம் மகிழ்ச்சியான வீக் எண்டாக நிச்சயம் இருக்கும்.
கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கிய ஒபன்ஹெய்மர் திரைப்படம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தில், அணுகுண்டு வெடித்து சிதறும் காட்சிகள் உட்பட அனைத்தும் கிராபிக்ஸாக இல்லாமல் ஒரிஜினலாகவே படமாக்கி இருந்தார் கிறிஸ்டோபர் நோலன். இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு இதுதான் மிக முக்கியமான காரணமாக இருந்தது. திரையில் பிரம்மாண்டமாக தெரியும் இந்த காட்சியை பார்த்து ரசிக்கவே திரையரங்கிற்கு பலர் படையெடுத்தனர்.

ஓபன்ஹெய்மரின் பயோபிக்: இரண்டாம் உலகப் போரில் ஹிரோஷிமா - நாகசாகி மீது அணுகுண்டை வீசிய அமெரிக்க விஞ்ஞானி ஓபன்ஹெய்மரின் பயோபிக்காக இந்தப் படம் உருவாக்கப்பட்டது. ஓபன்ஹெய்மர் வாழ்க்கையை துல்லியமாக இந்த படத்தில் காட்ட புலிட்சர் விருது பெற்ற நூல் ஒன்றை தழுவியும் இப்படத்தை கிறிஸ்டோபர் நோலன் உருவாக்கி இருந்தார். இப்படம் இந்தியாவில் வசூலை அள்ளியது.
7 ஆஸ்கர் விருது: அண்மையில் ஓபன்ஹெய்மர் திரைப்படம், சிறந்த துணை நடிகர், சிறந்த ஒரிஜினல் ஸ்கோர், சிறந்த எடிட்டிங், சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த துணை நடிகை, சிறந்த திரைக்கதை, ஆடை வடிவமைப்பு, சிறந்த அலங்காரம், சிறந்த இசை என 13 பிரிவுகளின் கீழ் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டன. இதில், ஓபன்ஹெய்மர் திரைப்படம், சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த ஒரிஜினல் ஸ்கோர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த எடிட்டிங் ஆகிய எழு பிரிவில் விருதை வென்றுள்ளது. சிறந்த இயக்குனருக்கான கிறிஸ்டோபர் நோலன் ஆஸ்கர் விருதை முதன் முறையாக வென்றார்.
ஓடிடியில் பார்க்கலாம்: அதே போல கோல்டன் குளோப் மேடையிலும் 5 விருதுகள் வென்றுள்ள இத்திரைப்படம், BAFTA Awards,Critics Choice Movie Award, Bandung Film Festival award என பல்வேறு விருதுகளை வென்ற இத்திரைப்படம் ஓடிடியில் தற்போது வெளியாகி உள்ளது. இப்படத்தை ஜியோசினிமா மற்றும் அமேசான் பிரைம் வீடியோ ஆகிய தளங்களில் பார்க்கலாம். ஓபன்ஹெய்மர் படத்தை தியேட்டரில் தவறவிட்ட ரசிகர்களுக்கு, வார இறுதி நாட்களை கொண்டாட இது ஒரு அறிய வாய்ப்பாகும்.


Click it and Unblock the Notifications











