Year ender 2024: இந்த ஆண்டு வரவேற்பை பெற்ற சிறந்த வெப் தொடர்கள்!
சென்னை: முன்பெல்லாம் பெண்களுக்கு நேரம் போகவில்லை என்றால், டிவி முன்பு அமர்ந்து கொண்டு, சேனலை மாற்றி நொந்து போவார்கள். அப்படிப்பட்டவர்களின் குறையை போக்கும் வகையில் தற்போது பல ஓடிடித்தளங்கள் வந்துள்ளன. அவற்றில் படம் மட்டுமில்லாமல், ரசிகர்களின் விருப்பத்திற்கு மேற் பல வெப் தொடர்களும் வந்துள்ளன. அந்த வகையில் இந்த ஆண்டு 2024ல் ரசிகர்களின் மனம் கவர்ந்த வெப் தொடர்களை பார்க்கலாம்.
சிட்டாடல்: ஹனி பன்னி: தி ஃபேமிலி மேன் வெப் தொடர் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த புகழ் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் ரூஸோ பிரதர்ஸ் தயாரிப்பில் உருவானத் தொடர் 'Citadel: Honey Bunny'. இதில், வருண் தவான், சமந்தா ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். ஸ்டண்ட் மேனாக இருக்கும் வருண் தவான் இரவில் உளவாளியாக இருக்கிரார். சினிமாவில் கதாநாயகியாக ஆசைப்படும் சமந்தா, அதற்கான வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் இருக்கிறார். இந்த நேரத்தில் சமந்தா, வருணுடன் சேர்ந்து உளவாளியாக மாறுகிறார். அதன்பின் இவர்கள் சந்திக்கும் பிரச்சனை தான் இந்த சிட்டாடல்: ஹனி பன்னி வெப் தொடரின் கதையாகும். ஆறு எபிசோடுகள் கொண்ட இந்த வெப்தொடரை அமேசான் பிரைமில் பார்க்கலாம்.

பிருந்தா: ஹைதராபாத்தில் ஒரு கூர்மையான போலீஸ் அதிகாரியாக இருக்கும் த்ரிஷா எடுத்து வளர்த்த தந்தை இறந்துவிட மன அழுத்தத்தில் இருக்கிறார். இந்த நேரத்தில், கிராமத்தில் ஒரு உடல் கிடக்கிறது. இது தற்கொலை என முடிவுசெய்து, போலீஸ் ஸ்டேஷனில் கேஸ் முடிக்கப்படுகிறது. ஆனால், த்ரிஷாவின் உள்ளுணர்வு இது தற்கொலை இல்லை என்று சொல்ல. அந்த உள்ளுணர்வை நம்பி, அவள் தோண்டி தோண்டி விசாரிக்க அது ஒரு கொலை என்பது தெரிய வருகிறது. பல ட்விஸ்டுகள் நிறைந்த இந்த தொடரை சோனி லிவ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
இன்ஸ்பெக்டர் ரிஷி: அடுத்தடுத்து கொலைகள் பல திருப்பங்கள் நிறைந்த இந்த தொடரரை ஜே.எஸ். நந்தினி இயக்கி உள்ளார். இதில், நவீன் சந்திரா, கண்ணா ரவி, மாலினி ஜீவரத்தினம், சுனைனா, இளங்கோ குமாரவேல், ஸ்ரீகிருஷ்ணா தயாள் ஆகியோர் நடித்துள்ளனர். கிராமத்தில் இருக்கும் சிலர் குறிவைத்து கொல்லப்படுகிறார்கள். வனரட்சி தான் அவர்களைப் பழிவாங்குவதாக ஊர் மக்கள் நம்புகிறார்கள். இத்தகைய சூழலில் அங்கு வரும் இன்ஸ்பெக்டர் ரிஷி கொலையாளியைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பது தான் இந்த வெப்தொடரின் கதை. இத்தொடரை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
பஞ்சாயத்து சீசன் 3: தீபக் மிஸ்ரா இயக்கத்தில், ஜிதேந்திர குமார், ரகுபீர் யாதவ், நீனா குப்தா, பைசல் மாலிக் ஆகியோர் நடிப்பில் உருவான நகைச்சவைத் தொடராகும். பஞ்சாயத்து தொடரின் முதல் இரண்டு சீசனும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில், மூன்றாவது சீசனும் ரசிகர்களை கவர்ந்தது. அந்த வெப் தொடரை, அமேசான் பிரைம் வீடியோவில் பார்க்கலாம்.
தலைமைச்செயலகம்: வசந்தபாலன் இயக்கத்தில் ஜீ5 ஓடிடியில் வெளியானத் வெப் தொடர் தலைமைச்செயலகம். 8 எபிசோடுகள் கொண்ட இந்த தொடரில், நிரூப் நந்தகுமார், ஷாஜி சென், ஆதித்யா மேனன், தர்ஷா குப்தா,ஒய்.ஜி.மகேந்திரன், சித்தார்த் விபின், கவிதா பாரதி ஆகியோர் நடித்துள்ளனர். ஊழல் குற்றம்சாட்டப்பட்டு தீர்ப்புக்காக காத்திருக்கும் ஒரு முதலமைச்சரின் நாற்காலியை குறிவைத்து நடக்கும் அரசியல் சூழ்ச்சி குறித்து இந்த வெப் தொடர் உருவாகி உள்ளது.
உப்பு புளி காரம்: டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியான வெப் தொடர், 'உப்பு புளி காரம்' இதில் பொன்வண்ணன், வனிதா, ஆயிஷா, நவீன், அஷ்வினி, தீபிகா, கிருஷ்ணா, பரினா, தீபக் பரமேஷ் மற்றும் ராஜ் அய்யப்பா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எம்.ரமேஷ் பாரதி இயக்கியுள்ளார். ஷேக் இசையமைக்க, பார்த்திபன் மற்றும் சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்கள். ஒரு வயதான தம்பதிகள் மற்றும் அவர்களின் நான்கு குழந்தைகளை சுற்றி நடக்கும் கதை அழகாக காட்டப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications