CM விஜயின் ஜனநாயகன் டூ டோவினோ தாமஸின் ஆக்ஷன் வேட்டை வரை.. ஓடிடி & தியேட்டரில் ரிலீஸாகும் படங்கள்!
சென்னை: இந்த வாரம் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டமான வாரம் என்று தான் சொல்ல வேண்டும். ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துகாத்து இருந்த முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் வெளியாக உள்ளது. அதோ போல, பல்வேறு முன்னணி ஓடிடி தளங்களிலும் புதிய திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் வரிசையாக வெளியாக உள்ளன. அந்த வகையில் ஜூலை 20 முதல் ஜூலை 26 வரை நெட்ஃபிளிக்ஸ், ஜியோ ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் வீடியோ, சோனிலிவ், ஜீ5, ஆப்பிள் டிவி பிளஸ், சன் நெக்ஸ்ட் உள்ளிட்ட தளங்களில் வெளியாகவிருக்கும் திரைப்படங்கள் என்னென்ன என்தை பார்க்கலாம்.
ஜனநாயகன்: எச் வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய், மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் ஜனநாயகன். விஜய் நடித்துள்ள கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' இந்த வாரம் வியாழக்கிழமை ஜூலை 23ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. அரசியல் கலந்த அதிரடி ஆக்ஷன் படமான இதற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

சிறிய பட்ஜெட் படங்கள்: கிரண் அப்பாவரம் மற்றும் 'லவ்வர்' பட புகழ் ஸ்ரீ கவுரி பிரியா நடிப்பில் வெளியாகவுள்ள படம் சென்னை லவ் ஸ்டோரி தியேட்டரில் வெளியாக உள்ளது. அதே போல,காஜல் அகர்வால் நடித்துள்ள 'தி இந்தியா ஸ்டோரி', மற்றும் 'காகிதப் படகுகள்' போன்ற சிறிய பட்ஜெட் படங்களும் இந்த வாரம் தியேட்டரில் வெளியாக உள்ளன.
ஆதர்ஷ் பால் வித்யாலயா: கே.கே.மேனன், நவீன் கஸ்தூரியா ஆகியோர் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள இந்த வெப் சீரிஸ் ஜூலை 24 முதல் ஸ்ட்ரீமிங் ஆகிறது. ஒரு அரசுப் பள்ளியை மாற்றியமைக்க போராடும் ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் கதையாக இப்படம் உள்ளது. இப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது.
முசாஃபிர் கஃபே: திவ்யா பிரகாஷ் துபே எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்ட காதல் மற்றும் உணர்வுப்பூர்வமான தொடர் முசாஃபிர் கஃபே. இதில் விக்ராந்த் மாஸ்ஸி, வேதிகா பிண்டோ மற்றும் பிரீத்தி ஆகிய மூன்று அந்நியர்களின் பின்னிப் பிணைந்த வாழ்க்கையை விவரிக்கிறது. போபால் மற்றும் முசோரி ஆகிய இடங்களுக்கு பயணம் செய்யும் இவர்கள் எப்படி உணர்வு பூர்வமான பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை சொல்கிறது முசாஃபிர் கஃபே வெப் தொடர். இதை நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூலை 24 ந் தேதியில் ஸ்ட்ரீமிங் ஆகிறது

Pallichattambi: மலையாள நடிகர் டோவினோ தாமஸ் நடித்துள்ள வரலாற்று சிறப்புமிக்க அதிர ஆக்ஷன் டிராமா Pallichattambi திரைப்படம். இதில் பிருத்விராஜ் சுகுமாரன் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். ஜூலை 24 முதல் சோனிலிவ் தளத்தில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பார்க்கலாம்.
ஜீ5 ஓடிடியில்: இதோடு மட்டுமில்லாமல் ஜீ5 தளத்தில் மராத்தி வெப்தொடரான 'அகா ஆய் அஹோ ஆய்' மற்றும் பெங்காலி சீரிஸ் 'பிரேம் ஷாட்ஸ்', 'புரொடெக்டர்' 'படமும், ஆப்பிள் டிவியில் 'தி டிங்க்' மற்றும் சன் நெக்ஸ்ட் தளத்தில் மலையாளப் படமான 'சீக்ரெட் ஆஃப் கலிங்கா'வும் ஸ்ட்ரீமிங்கிற்கு ஜூலை 24ந் தேதி முதல் பார்க்கலாம்


Click it and Unblock the Notifications