விஜய்யோட கடைசி படத்துக்கும் இவ்ளோ தான் விலையா?.. கறார் காட்டும் ஓடிடி நிறுவனம்.. வாங்குன அடி அப்படி!

சென்னை: தமிழ் மற்றும் தென்னிந்திய படங்களுக்கு அதிகபட்சமாக ஒரு பெரிய தொகையை மட்டுமே நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் முடிவு செய்திருப்பதாகவும் அதற்கு மேல் எந்தவொரு படத்துக்கும் அதிக தொகை கொடுத்து ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்கிற முடிவுடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமேசான் பிரைம், ஜியோ ஹாட்ஸ்டார், சோனி லைவ், ஜீ5 என மற்ற ஓடிடி நிறுவனங்களை விட அதிக சந்தா தொகையை ரசிகர்களிடம் இருந்து நெட்பிளிக்ஸ் வாங்கி வந்தாலும், தொடர்ந்து பல பெரிய படங்களை வாங்கி ஓடிடி ரசிகர்களை திருப்திப்படுத்தி வருகிறது.

Coolie and Jana Nayagan both sold for a same price for Netflix
Photo Credit:

தியேட்டருக்கு எல்லாம் பெரிய படங்கள் வந்தால் கூட மக்கள் கூட்டம் ஏன் போகாமல் 4 வாரங்கள் காத்திருக்கின்றனர் என தெரியுமா? எப்படியோ நெட்பிளிக்ஸ் அந்த படத்தை வாங்கி வீட்டுக்கே கொண்டு வந்துவிடும் என்பதால் தான் என்கின்றனர். ஆனால், இந்த ஆண்டு நெட்பிளிக்ஸ் அப்படி வாங்கி அடுக்கிய பெரிய படங்களில் அதற்கு பெரிதாக லாபமே கிடைக்காமல் போனது தான் அந்த நிறுவனத்தையே ஆட்டம் காண வைத்துள்ளதாக கூறுகின்றனர்.

விடாமுயற்சி முதல் தக் லைஃப் வரை: இந்த ஆண்டு அஜித் குமார் நடித்த விடாமுயற்சி, குட் பேட் அக்லி, சூர்யாவின் ரெட்ரோ, கமல்ஹாசனின் தக் லைஃப் உள்ளிட்ட படங்கள் தான் பெரிய பட்ஜெட் படங்கள். அந்த படங்கள் அனைத்தையும் வாங்கி ஓடிடியில் வெளியிட்டுள்ளது வேற யாரும் இல்லை நம்ம நெட்பிளிக்ஸ் தான். ஆனால், இதில், குட் பேட் அக்லி படத்தை தவிர்த்து வேற எந்தவொரு பெரிய படத்தையும் ரசிகர்கள் அதிக ஆர்வம் செலுத்தி பார்க்காத நிலையில், அந்த நிறுவனத்துக்கு இந்த ஆண்டு பலத்த அடி விழுந்திருப்பதாக கூறுகின்றனர். விடாமுயற்சி, ரெட்ரோ, தக் லைஃப் படங்களுக்கு எல்லாம் நான் தியேட்டரிக்கலாக கொஞ்சம் லாபம் கிடைத்ததே நெட்பிளிக்ஸ் தயவில் தான் என்கின்றனர். கடந்த ஆண்டு மகாராஜா, லக்கி பாஸ்கர் உள்ளிட்ட படங்கள் நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு மிகப்பெரிய வசூல் வேட்டையை உலகளவில் ஈட்டித் தந்தது குறிப்பிடத்தக்கது.

கூலி ஓடிடி வியாபாரம்: இந்நிலையில், ரஜினிகாந்தின் கூலி படத்தை அதிகபட்சமாக 125 கோடி வரை கொடுத்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாக கூறுகின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த், அமீர்கான், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் சாஹிர் மற்றும் ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள அந்த படம் ஆகஸ்ட் 14 திரைக்கு வருகிறது. செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்குள் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் அந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் படத்துக்கும் அவ்வளவுதான்: விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் படம் ஓடிடி பிசினஸில் புதிய சாதனை படைக்கும் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜன நாயகன் படத்துக்கும் அதிக ரிஸ்க் எல்லாம் எடுக்க முடியாது என்றும் கூலி படத்துக்கு கொடுத்த அதே 125 கோடி தான் கிடைக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அக்டோபர் 2ம் தேதி வெளியாகவுள்ள காந்தாரா சாப்டர் 1 படத்துக்கும் அதே விலை தானாம். இந்த ஆண்டு பெரிய நடிகர்கள் படங்களை நம்பி வாங்கி ஏமாந்துப் போன நெட்பிளிக்ஸ் நிறுவனம் இதுக்கு மேல கட்டுப்படி ஆகாது என்கிற முடிவுக்கு வந்துள்ளதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X