தியேட்டரில் வசூலை அள்ளிய ‘கப்பிள்ஸ் ஃப்ரெண்ட்லி’.. ஓடிடியில் எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம்!

சென்னை: காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14ந் தேதி 'கப்பிள்ஸ் ஃப்ரெண்ட்லி' திரைப்படம் தியேட்டரில் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல விமர்சனத்தை பெற்று வசூலை அள்ளியது. இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.

பீல் குட் ஃபேமிலி என்டர்டெயின்மென்ட் காதல் படமாக இப்படத்தில், சந்தோஷ் சோபன் மற்றும் மானசா வாரணாசி ஆகியோர் நடித்துள்ளனர்.அஷ்வின் சந்திரசேகர் இயக்கிய இப்படத்திற்கு தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தெலுங்கு மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் வெளியான இப்படத்தை UV கான்செப்ட்ஸ் நிறுவனத்தின் கீழ் அஜய் வர்மா தயாரித்துள்ளார்.

couple friendly OTT Prime Video
Photo Credit:

'கப்பிள்ஸ் ஃப்ரெண்ட்லி' படத்தின் கதை: இப்படத்தின் கதாநாயகனான சந்தோஷ் சோபன் சென்னையில் இன்டீரியர் டிசைனிங் வேலை தேடிக்கொண்டே, பகுதி நேரமாக பைக் ரைடராகப் பணியாற்றி வருகிறார். அதேபோல, மானசா வாரணாசி ஐடி வேலையைத் தேடுகிறார். பல இடத்தில் வேலை தேடியும் அவருக்கு கிடைக்கவில்லை. வேலை கிடைக்காத விஷயம் வீட்டிற்கு தெரிந்தால் திருமணம் செய்து வைத்துவிடுவார்கள் என்ற பயத்தில், வேலை கிடைத்துவிட்டது என பொய் சொல்லிவிட்டு சென்னையிலேயே இருக்கிறார். சந்தோஷ் சோபன் மற்றும் மானசா வாரணாசி இருவரும் எதிர்பாராதவிதமாக சந்தித்துக் கொள்கின்றனர். இதையடுத்து இருவரும் திருமணத்திற்கு முன்பே லிவிங் டுகெதர் முறையில் ஒரே வீட்டில் இணைந்து வாழ முடிவு செய்கின்றனர். அதன் பிறகு அவர்களின் வாழ்க்கை என்ன என்பது தான் 'கப்பிள் பிரண்ட்லி' படத்தின் மீதிக்கதை.

ஓடிடி ரிலீஸ் தேதி: சந்தோஷ், மானசா இருவருமே எதார்த்தமானந நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு வலு சேர்த்து உள்ளனர். படம் வெளியான முதல் நாளில் பெரிதா வரவேற்பை பெறவில்லை என்றாலும், அடுத்தடுத்த நாட்களில் படம் வசூலை அள்ளி 10 நாட்களுக்குள் உலகளவில் ₹12.67 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இதையடுத்து, இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் மார்ச் 13 தேதி, அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக உள்ளது. தியேட்டரில் இந்த படத்தை தவறவிட்டவர்கள் இந்த படத்தை பார்த்து ரசிக்கலாம்.

More from Filmibeat

Read more about: prime video ஓடிடி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X