இங்கிலாந்தில் பிறந்த கிரிக்கெட்டை தெலுங்கு சினிமாவில் அடக்கம் செய்தாரா ராம் சரண்? ஓவர் கலாய்.. என்ன நடந்தது?
சென்னை: உலகம் முழுவதும் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த முன்னணி நடிகரின் பிரம்மாண்ட திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியான நிலையில், படத்தின் ஒரு காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேறு காரணத்திற்காக ட்ரெண்டாகி வருகிறது. குறிப்பாக கிரிக்கெட் ரசிகர்களே அந்த காட்சியை எடுத்து மீம்ஸ் போட்டு கலாய்த்து வருவது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
பிரபல இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், ராம் சரண் கதாநாயகனாக நடித்துள்ள 'பெத்தி' திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தில் சிவ ராஜ்குமார், ஜெகபதி பாபு, திவ்யேந்து சர்மா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படம், திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது.

மரண கலாய்: தியேட்டரில் பார்க்கத் தவறிய பலரும் தற்போது ஓடிடியில் படத்தை பார்த்து வருகின்றனர். அப்படிப் பார்த்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருப்பது, படத்தில் இடம்பெற்றுள்ள கிரிக்கெட் காட்சிதான். ராம் சரண் பேட்டிங் செய்யும் சில காட்சிகள் ரசிகர்களுக்கு நம்பும்படியானதாக இல்லை என சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக, அந்த காட்சிகளை பகிர்ந்த நெட்டிசன்கள், "Cricket was born in England... but buried in Telugu cinema என்றும் Cricket born in England... Died in Telugu Cinema” என்றும் கலாய்த்து பதிவிட்டு வருகின்றனர். இதைப் பார்த்த சிலரோ, இதுதான் மரண கலாயா என்று கிண்டலாக கேட்டு வருகிறார்கள். சிலர், "கிரிக்கெட் விதிகளையே புதுசாக எழுதிட்டாங்க போல", "இப்படி ஒரு ஷாட் நிஜ மேட்ச்ல அடிச்சா உலக சாதனைதான்" என்று மீம்ஸ்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

ரசிகர்கள் பதில்: மறுபக்கம், ராம் சரண் ரசிகர்களோ, இது ஒரு மாஸ் கமர்ஷியல் படம். அதில் வரும் காட்சிகளை முழுக்க முழுக்க லாஜிக் வைத்து பார்க்கக் கூடாது. ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில்தான் அந்த காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று பதிலடி கொடுத்து வருகின்றனர். எது எப்படி இருந்தாலும், ஓடிடியில் வெளியான பிறகும் 'பெத்தி' படம் மீண்டும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. படத்தில் இடம்பெற்ற அந்த கிரிக்கெட் காட்சிக்காகத்தான் இணையமே ஓவராக கலாய்த்து வருகிறது.


Click it and Unblock the Notifications