Criminal Justice S4 Review: ஓடிடியில் ஒர்த்தான வெப்சீரிஸ் பார்க்கணுமா?.. கிரிமினல் ஜஸ்டிஸ் சீசன் 4 விமர்சனம்!

மும்பை: ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பக்காவான வெப்சீரிஸ் தான் கிரிமினல் ஜஸ்டிஸ் சீசன் 4. ஒவ்வொரு வியாழக்கிழமையும் புதிய புதிய எபிசோடுகளுடன் வெளியாகி ரசிகர்களை சீட்டின் நுனிக்கே கொண்டு செல்கிறது. தியேட்டர்களில் வெளியான படங்கள் இந்த வாரம் பெரிதாக உங்களை திருப்திப்படுத்தவில்லை என்றாலோ, மாதக் கடைசி ஓடிடி மட்டும் தான் பாஸ் என்று நினைத்தாலோ இந்த வாரம் இந்த வெப்சீரிஸை மிஸ் பண்ணாம பார்த்துடுங்க.

பிரபல பாலிவுட் நடிகர் பங்கஜ் திரிபாதிக்கு என்றே தமிழ்நாட்டிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகி உள்ளனர். அவரது காமெடி டைமிங் எல்லாம் வேறலெவலில் ரசிகர்களை என்டர்டெயின் செய்து வருகிறது. கிரிமினல் ஜஸ்டிஸ் சீசன் 4ல் வழக்கறிஞராக நடித்து பட்டையை கிளப்பியுள்ளார்.

Criminal Justice S4 Review in Tamil Pankaj Tripathi investigative web series is a real worth watch
Photo Credit:

மருத்துவர் ஒருவரின் காதலி கொல்லப்பட்ட வழக்கில், மருத்துவர் கைதாகி உள்ள நிலையில், அவரது முன்னாள் மனைவியும் கைதாகி இருக்கிறார். மருத்துவருக்காக பங்கஜ் மிஸ்ரா வாதாடி வரும் நிலையில், யார் உண்மையான குற்றவாளி என்பதே புரியாத அளவுக்கு இதுவரை 6 எபிசோடுகள் பரபரப்புக்கு பஞ்சமின்றி ஓடிக்கொண்டிருக்கிறது.

கிரிமினல் ஜஸ்டிஸ் சீசன் 4: தமிழில் சுழல் 1, 2, விலங்கு, தலைமைச் செயலகம் என சில வெப்சீரிஸ்கள் மட்டுமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. ஆனால், பாலிவுட்டில் இந்தி படங்களுக்கு இணையாக ஓடிடி படைப்புகளும் சக்கைப்போடு போட்டு வருகின்றன. ஜியோ ஹாட்ஸ்டாரில் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் உருவாகி வரும் Criminal Justice: A Family Matter வெப்சீரிஸ் ஏகப்பட்ட இந்திய ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த வாரமாவது உண்மையான குற்றவாளி யார் என்பதை கண்டுபிடித்து விடுவார்களா என்கிற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Criminal Justice S4 Review in Tamil Pankaj Tripathi investigative web series is a real worth watch
Photo Credit:

ரோஷினியை கொன்றது யாரு?: டாக்டர் நாக்பால் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், அவருடைய ஸ்பெஷல் சைல்ட்டான இராவை பார்த்துக் கொள்ள வந்த நர்ஸ் ரோஷினியை காதலித்து கரெக்ட் செய்துவிட்டார். இருவரும் திருமணம் செய்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மகளின் பிறந்தநாள் பார்ட்டிக்கு அடுத்த நாள் நாக்பாலின் வீட்டில் ரத்த வெள்ளத்தில் இருக்கும் ரோஷினியை ஜாகிங் சென்றுவிட்டு திரும்பிய நாக்பால் காப்பாற்ற முயற்சி செய்ய அவரது கைகளிலேயே இறந்து விடுகிறார். மீன் வாங்கிவிட்டு வீட்டுக்கு வரும் வேலைக்காரி ரோஷினி இறந்து கிடந்ததை பார்க்க கத்தி கூச்சலிடுகிறார். பக்கத்து வீட்டில் இருந்து வரும் முன்னாள் மனைவி போலீசுக்கு போன் செய்ய நாக் பாலை கைது செய்து விடுகின்றனர். தனது கணவரை காப்பாற்ற பங்கஜ் மிஷ்ராவை வழக்கறிஞராக தேர்வு செய்கிறார்.

அடுத்து இந்த வழக்கில் கொலை ஆயுதம் முன்னாள் மனைவியின் குப்பை கவரில் கிடக்க அவரையும் போலீஸார் கைது செய்கின்றனர். இதில், யார் ரோஷினியை கொன்றது? கணவன் மற்றும் மனைவி இருவருமே குற்றத்தை ஒப்புக்கொள்ளாத நிலையில், விசாரணை சூடுபிடித்துள்ளது. நாக்பாலின் அம்மா கொலை செய்து இருப்பாரா? அல்லது நாக்பாலின் ஸ்பெஷல் சைல்ட்டான மகள் கொலை செய்திருப்பாரா? என ஏகப்பட்ட கேள்விகளும் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

ஒர்த் வாட்ச்: ஓடிடியில் புதிதாக பார்க்க எதுவுமே உருப்படியாக இல்லையே என நினைத்து ஃபீல் செய்யும் ஓடிடி ரசிகர்களுக்கு நிச்சயம் இந்த வெப்சீரிஸ் ஒரு ஒர்த்தான ஓடிடி வாட்ச்சாக அமையும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. சீரியஸான விசாரணை சென்று கொண்டிருந்தாலும், பங்கஜ் திரிபாதியின் காமெடியான அணுகுமுறை ரசிகர்களை என்டர்டெயின் செய்வதையும் கச்சிதமாக செய்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X