டாடா முதல் ரன் பேபி ரன் வரை.. இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களின் பட்டியல்!
சென்னை : திரையரங்கிற்கு இணையாக ஓடிடி தளங்களும் வெள்ளிக்கிழமையில் போட்டி போட்டுக்கொண்டு படங்களை வெளியிட்டு வருகின்றன.
குடும்பத்தோடு திரையரங்குக்கு சென்றால், பாக்கெட் காலியாகிவிடும் என்று நினைக்கும், குடும்பத் தலைவர்களுக்கு ஓடிடித்தளங்களின் வரவு வரப்பிரசாதம் என்றே சொல்லாம்.
கடந்த வாரம் தி கிரேட் இந்தியன் கிச்சன், தலைகூந்தல் போன்ற படங்கள் வெளியான நிலையில், இந்த வாரம் என்னென்ன படம் வெளியாகிறது என்று பார்க்கலாமா?

டாடா
பிக் பாஸ் கவின் கல்லூரி மாணவனாக நடித்துள்ள திரைப்படம் டாடா. இப்படத்தை கணேஷ் கே.பாபு என்பவர் இயக்கி உள்ளார். அபர்ணா தாஸ், ஹரிஷ், கே.பாக்யராஜ், வி.டி.வி.கணேஷ் ஐஸ்வர்யா ஆகியோர் நடித்துள்ளனர். கல்லூரி மாணவன், கணவன், அப்பா என பலவிதமான கேரக்டரில் தனது பொறுப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். பலரின் பாராட்டை பெற்ற இத்திரைப்படம் வரும் 10ந் தேதி முதல் சிம்ப்லி சவுத் என்ற ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது.

ரன் பேபி ரன்
ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடித்த திரைப்படம் ரன் பேபி ரன். இப்படத்தில் ராதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், இஷா தல்வார், ஸ்மிருதி வெங்கட், விவேக் பிரசன்னா உள்ளிடவர்கள் நடித்துள்ளனர். இப்படம் பிப்ரவரி 3ந் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.. இந்தப் படம் வரும் 10-ம் தேதி முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஓடிடி தளத்தில் வெளியா உள்ளது.

கிறிஸ்டி
மாளவிகா மோகனன் நடித்துள்ள மலையாளத் திரைப்படம் கிறிஸ்டி. இந்த படத்தில் மேத்யூ தாமஸ் பள்ளி மாணவனாகவும், மாளவிகா டீச்சராகவும் நடித்துள்ளார். வயதான பெண்ணை காதலிக்கும் சிறுவன் வயதில் மூத்த பெண்னை காதலிக்கும் கதைக்களத்தைக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அல்வின் ஹென்றி இயக்கியுள்ள இந்தப் படம் பிப்ரவரி 17-ம் தேதி திரையரங்கில் வெளியானது. இப்படம் நாளை டிஸ்னி பிளாஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாக உள்ளது.

ராணா நாயுடு (வெப் தொடர்)
பாகுபலி படத்தில் நடித்து அனைவரின் மனதிலும் இடம்பிடித்த ராணா டகுபதி நடிப்பில் உருவாகி உள்ள இணையத் தொடர் ராணா நாயுடு. இதில், வெங்கடேஷ் டக்குபதி, சுசித்ரா பிள்ளை, கௌரவ் சோப்ரா மற்றும் சுர்வீன் சாவ்லா ஆகியோர் லீட் ரோலில் நடித்துள்ள இத்தொடர் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் 10ந் தேதி வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











