Dare To Watch: ஆத்தாடி இப்படி ஒரு திரைக்கதையா? கொடூரத்தின் உச்சம்.. என்ன படம் தெரியுமா?
சென்னை: என்னதான் பல வகையான சினிமாக்கள் வந்தாலும், கொடூரத்தை விவரிக்கும் திரைக்கதை கொண்ட சினிமாக்களுக்கு என்றுமே தனி வரவேற்பு உள்ளது. அதற்கு காரணம் அவை நேரடியாக மக்களை பாதிப்பது தான். ஆனாலும் ரசிகர்கள் பலரும் இது போன்ற படங்களைத் தேடித் தேடிப் பார்க்கிறார்கள்.
அப்படி தேடித் தேடிப் பார்க்கும் ரசிகர்கள், இந்த வகை படங்களை ஏதோ பொழுது போக்கிறாக மட்டும் பார்க்காமல், படங்களை டீ கோட் செய்வதை எல்லாம் பார்க்க முடியும். இப்படியான படங்களை தேடித் தேடி பார்க்கும் ரசிகர்களே சவால் விடும் அளவுக்கு ஒரு படத்தை உருவாக்கி வைத்துள்ளார்கள். அப்படியான ஒரு படம் குறித்து பார்க்கலாம்.
Galder Gaztelu-Urrutia என்ற ஸ்பானிஷ் இயக்குநர் இயக்கத்தில் உருவான படம் தி பிளாட்பார்ம். sci-fi psychological thriller என்று வகைப்படுத்தப்பட்டுள்ள இந்த படத்தின் தன்மையை புரிந்து கொள்வது என்பதே கொஞ்சம் சிக்கலானது தான். கொடூரமான இந்த உலகத்தை மொத்தமாக புரிந்து கொள்வதற்காக ஒரு சிறந்த படம் என்று பார்ப்பவர்களை சொல்ல வைக்கும் வகையில் திரைக்கதையை அமைத்திருப்பார்.

படத்தின் கதை "Vertical Self-Management Center" என்ற விசித்திரமான சிறையை மைய்யமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது பல நூறு அடுக்குகளுடன் கூடிய சிறை. இந்த சிறையின் எல்லா அறைகளிலும் கைதிகள் உள்ளனர். அடுக்குகளாக உள்ள மேல் சிறையில் இருந்து கடைசி சிறை வரை உணவு கொடுக்கும் முறையை வைத்துத்தான் இயக்குநர் நினைத்த உரையாடலை ரசிகர்கள் மத்தியில் உருவாக்குகிறார்.
அதாவது சிறைவாசிகளுக்கு உணவு கொடுக்க, ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிளாட்ஃபார்மில் அனைவருக்கும் போதுமான உணவு நிரப்பப்படுகிறது. ஆனால் அந்த பிளாட்ஃபார்ம் எல்லை சிறைவாசிகளின் அறையிலும் அந்த உணவு கொண்டு செல்லும் பிளாட்ஃபார்ம் நின்று செல்லும். முதல் அறையில் உள்ள சிறைவாசி அனைத்து உணவுகளையும் தானே சாப்பிட வேண்டும் என்று நினைத்து அனைத்து உணவுகளையும் வீணடிக்கிறார்.

இப்படியான பேராசைக்காரர்களினால் கீழே உள்ள சிறைவாசிகளுக்கு உணவு கிடைப்பதில்லை. அதே நேரத்தில் சில நாட்களுக்கு ஒருமுறை சிறைவாசிகள் வசிக்கும் அறை மாற்றப்படுகிறது. அப்படி மாற்றப்படும் போது அதுவரை உணவையே பார்க்காத சிறைவாசி அதிக உணவை பார்க்கும் போது ஏற்கனவே அதிக உணவைப் பார்த்ததும் பேராசையில் ஒருவர் எப்படி நடந்து கொண்டாரோ அதேபோலத்தான் அவரும் நடந்து கொள்கிறார்.
இதை ஒரு கட்டத்தில் புரிந்து கொள்ளும் கதாநாயகன் தனது மற்ற சிறைவாசிகளுக்கு நடப்பதை உணர்த்த எடுக்கும் முயற்சிகள் மொத்த படத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பட்டினி ஒரு மனிதனை என்னவெல்லாம் செய்ய வைக்கும் என்ற காட்சிகள் இந்த உலகத்தின் நிலையை உணர்த்துகிறது. அதேபோல் ஒரு சமூகம் ஒரு அமைப்பாக செயல்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் காட்சிகள் வலிந்து திணிக்காமல் கையாண்டது அருமை. இந்த படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், சுய பரிசோதனை செய்து கொள்ளவும் வைக்கிறது. இந்த படம் நெட் ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிறது.


Click it and Unblock the Notifications











