DD Returns: OTT-ல் டிடி ரிட்டர்ன்ஸ் படத்துக்கு கிடைத்த கிராண்ட் ஓபனிங்... சந்தானம் காட்டுல மழைதான்!
சென்னை: சந்தானம் நடித்த டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் ஜூலை 28ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
ஹாரர் காமெடி ஜானரில் உருவான இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது.
பிரேம் ஆனந்த் இயக்கிய இந்தப் படம் தற்போது ஜீ5 ஓடிடி தளத்திலும் வெளியாகியுள்ளது.
டிடி ரிட்டர்ன்ஸ் படத்துக்கு ஓடிடி ரசிகர்களிடமும் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது கோலிவுட்டையே அதிர வைத்துள்ளது.

ஓடிடியில் மாஸ் காட்டும் டிடி ரிட்டர்ன்ஸ்: கோலிவுட்டின் செம்ம பிஸியான காமெடியனாக வலம் வந்த சந்தானம், இப்போது ஹீரோ மெட்டீரியலாக மாறிவிட்டார். தில்லுக்கு துட்டு, சர்வர் சுந்தரம், சக்க போடு போடு ராஜா, டகால்டி, பிஸ்கோத், பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, குலுகுலு, ஏஜென்ட் கண்ணாயிரம் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். ஆனாலும், சந்தானத்துக்கு ஒருசில படங்கள் மட்டுமே கை கொடுத்தன.
இந்நிலையில், ஜூலை இறுதியில் வெளியான டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம், சந்தானம் கேரியரில் சூப்பரான சம்பவமாக அமைந்தது. பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சந்தானத்துடன் ரெடின் கிங்ஸ்லி, லொள்ளு சபா மாறன், முனிஷ்காந்த், மொட்டை ராஜேந்திரன், தினா உட்பட பலரும் நடித்திருந்தனர். அதிகம் எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியான டிடி ரிட்டர்ன்ஸ் படத்துக்கு முதல் நாளில் இருந்தே சிறப்பான ஓபனிங் கிடைத்தது.
தில்லுக்கு துட்டு பட வரிசையில், அதன் சீக்வெல் வெர்ஷனாக டிடி ரிட்டர்ன்ஸ் படத்தை இயக்கியிருந்தார் பிரேம் ஆனந்த். ஹாரர் ப்ளஸ் காமெடியில் மாஸ் காட்டிய இந்தப் படம், ரசிகர்களின் வயிற்றை பதம் பார்த்தது. பணத்துக்காக பேய் பங்களாவில் மாட்டிக்கொண்டு சந்தானம் & கோ திணறுவது தான் இந்தப் படத்தின் ஒன்லைன். சந்தானம் மட்டும் இல்லாமல் படத்தில் நடித்த அனைவருக்கும் நல்ல வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் இன்று (செப் 1) ஜி5 தளத்தில் வெளியாகியுள்ளது. நள்ளிரவு முதல் ஸ்ட்ரிமிங் ஆகி வரும் டிடி ரிட்டர்ன்ஸ் படத்துக்கு ஓடிடி ரசிகர்களிடமும் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. முக்கியமாக இந்த வாரம் வேறு எந்த தமிழ்ப் படங்களும் ஓடிடி தளங்களில் வெளியாகவில்லை. அதோடு டிடி ரிட்டர்ன்ஸ் தியேட்டரிலேயே சக்கைப் போடு போட்டிருந்ததால், ஓடிடி ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.
அதனால் ஜீ5 தளத்தில் வெளியானது முதலே டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் வீவர்ஸ் கவுண்டிங் உச்சம் தொட்டுள்ளதாம். அதுமட்டும் இல்லாமல் டிவிட்டரிலும் டிடி ரிட்டர்ன்ஸ் படம் ட்ரெண்டாகி வருகிறது. நீண்ட நாட்களாக சரியான கம்பேக் இல்லாமல் தவித்து வந்த சந்தானத்துக்கு, ஒட்டுமொத்தமாக சேர்த்து வைத்து ட்ரீட் கொடுத்துள்ளது டிடி ரிட்டர்ன்ஸ்.


Click it and Unblock the Notifications











