அந்நியன் போல ஒரு ஹாலிவுட் படம்.. வேலைக்காரி இப்படி இருந்தா என்ன ஆகும்?.. Deadly Illusions விமர்சனம்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: 2005ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்து வெளியான அந்நியன் திரைப்படத்தில் கதையின் நாயகனுக்கு மல்டிபிள் பர்சனாலிட்டி டிசார்டர் எனும் அரிய வகை நோய் பாதிப்பு இருக்கும். அம்பி, ரெமோ, அந்நியன் என தன்னை மாற்றிக் கொண்டு அவர் செய்யும் செயல்கள் தான் அந்த படத்தின் கதை. அந்நியனாக தப்பு செய்பவர்களை கொலை செய்யும் காட்சிகளில் மிரட்டியிருப்பார் சியான் விக்ரம்.

அம்பியாக அப்பாவியான நடிப்பு மற்றும் காதல் யானை ரெமோவாக இளம் பெண்கள் மனதை கொள்ளை கொள்வது என மாஸ் காட்டியிருப்பார். கடந்த 2021ம் ஆண்டு மல்டிபிள் பர்சனாலிட்டி டிசார்டரால் பாதிக்கப்பட்ட ஒரு பேபி கேர் டேக்கர் பெண்ணை மையப்படுத்திய படத்தை ஹாலிவுட்டில் எடுத்துள்ளனர்.

review deadly illusions

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் பார்த்து வரும் Deadly Illusions படத்தின் விமர்சனத்தை முழுமையாக இங்கே பார்க்கலாம் வாங்க.

டெட்லி இலுஷன்ஸ் கதை: பெண் இயக்குநர் அன்னா எலிசபத் ஜேம்ஸ் இயக்கத்தில் கிறிஸ்டின் டேவிஸ் மற்றும் க்ரீர் கிராமர் நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான சைக்கோ த்ரில்லர் படம் தான் டெட்லி இலுஷன்ஸ். பிரபல எழுத்தாளரான மேரி (கிறிஸ்டின் டேவிஸ்) புதிய கதையை எழுதிக் கொண்டிருக்கும் போது திடீரென கற்பனை வறட்சியால் தடுமாறும் போது தனது ட்வின்ஸ் குழந்தைகளை பார்த்துக் கொள்ள ஒரு அழகான இளம் பேபி சிட்டரை நம்ம ஊரில் சொல்ல வேண்டுமென்றால் ஆயம்மாவை வேலைக்கு அமர்த்துகிறார்.

review deadly illusions

ஆனால், அந்த இளம் பணிப்பெண் குழந்தைகளை பார்த்துக் கொள்வதை தாண்டி மெயின் லீடான மேரியை ஒரு பக்கம் வசீகரிக்கிறார். இன்னொரு பக்கம் மேரியின் கணவருடன் கள்ள உறவு கொள்வது என திரைக்கதை பதை பதைக்க வைக்கிறது. கடைசியில், இதெல்லாம் பணிப்பெண் கிரேஸ் ஏன் செய்கிறார் என்றும் தனது தோழி எலைனை கொலை செய்த கிரேஸின் உண்மையான ஃபிளாஷ்பேக் ஸ்டோரியை தெரிந்துக் கொள்ளும் மேரிக்கு மேலும் அச்சம் அதிகரிக்கிறது. கிரேஸ் ஒரு மல்டிபிள் பர்சனாலிட்டி என்பது கிளைமேக்ஸில் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில், அவரிடம் இருந்து தப்பித்து தனது குடும்பத்தை மேரி காப்பாற்றினாரா? இல்லையா? அல்லது இவையெல்லாமே மேரியின் கற்பனையா? என்கிற வித்தியாசமான திரைக்கதையில் இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் அன்னா எலிசபத் ஜேம்ஸ்.

review deadly illusions

பார்க்கலாமா? வேண்டாமா?: நிர்வாணக் காட்சிகள் ஆங்காங்கே இருப்பதால் குழந்தைகளுடன் பார்ப்பதை தவிர்த்து விடுங்கள். அந்நியன் படத்தைப் போலவே கிளைமேக்ஸில் கிரேஸ் நடித்திருக்கும் நடிப்பு அட்டகாசம். அவரது அழகில் மயங்காத ஆட்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நீச்சல் குள காட்சிகள் மற்றும் பாத் டப் காட்சிகள் என இளைஞர்களை கவரும் பல மேட்டர்கள் உள்ளன. கடைசி கிளைமேக்ஸில் கிரேஸ் மேரியையே கொன்று விட்டு அவரது உடையை அணிந்து செல்கிறாரா? என்பது போன்ற காட்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தி விடும்.

மொத்த கதையை மேரியின் பார்வையில் இருந்து பார்த்தால் அவருக்குத்தான் Deadly Illusions தோன்றுவது போலவும் படத்தை டபுள் டிராக்கில் எடுத்து உள்ளதால் ஒரு முறை தாராளமாக ஓடிடியில் இந்த படத்தை முயற்சிக்கலாம். டைட்டிலில் இருந்தே தொடங்கும் ப்ளர் எஃபெக்ட் கடைசி வரை கதையிலும் காட்சியிலும் நிறைந்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X