60 வயசு மூதாட்டிக்கும் 30 வயசு ஆணுக்கும் அத்துமீறிய உறவு.. நெட்ஃபிளிக்ஸில் புதுசா வந்த வெப்சீரிஸ்!

சென்னை: நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த அக்டோபர் 6ம் தேதி வெளியான இத்தாலிய வெப்சீரிஸ் தான் தற்போது டாக் ஆஃப் தி டவுனாக மாறியுள்ளது. இந்தியாவில் பல்வேறு நடிகைகள் இளம் நடிகர்களை காதலித்து வந்த கதைகள் எல்லாம் நிஜத்திலேயே நடந்து வரும் நிலையில், அதை மையமாக வைத்து இத்தாலிய இயக்குநர் உருவாக்கியுள்ள வெப்சீரிஸ் தான் Deceitful Love.

வயதான ஆண்கள் இளம்பெண்களுடன் காதல் கொள்ளும் கதைகளை வைத்து ஏகப்பட்ட படங்கள் வெளியாகி உள்ளன. சிறுவர்கள் வயதுக்கு வந்த பெண்களை விரும்புவதும் மாணவர்கள் டீச்சரை காதலிக்கும் வாழை போன்ற படங்களும் உலாவி வரும் நிலையில், 60 வயதான ஹோட்டல் ஓனர் பெண்மணி 30 வயதான ஆணுடன் அத்துமீறிய உறவில் ஈடுபடும் கதையுடன் வெளியாகி உள்ளது இந்த வெப்சீரிஸ்.

ott deceitful love review

60 வயது மூதாட்டியை 30 வயது ஆண் ஏன் காதலிக்கிறார். அவருடைய உள்நோக்கம் என்ன? அந்த வயதான பெண்மணியின் மகன் மற்றும் மகளின் ரியாக்‌ஷன் என வெப்சீரிஸ் தீயாக உள்ளது.

வஞ்சகமான காதல்: Deceitful Love என்பதற்கான அர்த்தம் வஞ்சகமான காதல். நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த 6ம் தேதி 6 எபிசோடுகளாக இந்த வெப்சிரீஸ் வெளியானது. இத்தாலி வெப்சீரிஸாக இருந்தாலும் ஆங்கிலத்திலும் இது உள்ளது. 66 வயதான இத்தாலி நடிகை மோனிகா குரிடோர் லீடு ரோலில் கேப்ரில்லா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 35 வயதாகும் நடிகர் ஜியோகோமா ஜியோனியாட்டி எலியா எனும் ஆண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பெரிய ஹோட்டல் தொழிலதிபரை காதல் வலை வீசி வஞ்சகமாக ஏமாற்றும் இளைஞரை பற்றி தெரிந்தே அவரது வலையில் அந்த மூதாட்டி விழுவதற்கு சொல்லப்பட்டு இருக்கும் காரணங்கள் தான் இந்த வெப்சீரிஸின் ஹைலைட்.

ott deceitful love review

விவாகரத்தான மூதாட்டி: 65 வயதான இத்தாலி நடிகை மோனிகா குரிடோர் 60 வயது கேப்ரில்லாவாக நடித்து அசத்தியுள்ளார். கணவரை விவாகரத்து செய்து விட்டு தனது மகன் மற்றும் மகளை வளர்த்துக் கொண்டே ஹோட்டல் பிசினஸில் கொடிகட்டி பறந்து வரும் கேப்ரில்லா ஒருநாள் தனது வீட்டுக்கு எதிரே கார் ரிப்பேர் ஆனதால் தவித்துக் கொண்டிருக்கும் இளைஞரை சந்திக்கிறார். அவருக்கு உதவி செய்ய முற்படும் போது, உதவிக்குப் பிறகு வலுக்கட்டாயமாக கேப்ரில்லாவை எலியா கட்டிப் பிடித்து லிப் லாக் அடிக்கிறார். ஆரம்பத்தில் அதை தவிர்க்கும் கேப்ரில்லா, பின்னர் அவருடைய நட்பை நாடுகிறார்.

அடல்ட் கன்டென்ட் அதிகம்: கதையே காதல் கதை என்பதால் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி வெப்சீரிஸ்களை போலவே இந்த வெப்சீரிஸிலும் அடல்ட் கன்டென்ட் அதிகம் இடம்பெற்றுள்ளன. வயதான பாட்டியாக நடித்தாலும், அவரையும் விடாமல் முழு நிர்வாணமாக நடிக்க வைத்து இருக்கிறார் இயக்குநர் பாப்பி கார்சிகட்டோ. நீச்சல் குளத்தில் இறங்கினாலும் தலையை நனைக்க மாட்டேன் என கேப்ரில்லா சொல்லும் போது, அவரை உள்ளே இழுத்து அவரை காதல் வலையில் எலியா விழ வைக்கும் காட்சிகள் எல்லாம் இளமை திரும்புதே என வயதான பெண்களையும் பாட வைக்கும் அளவுக்கு எடுக்கப்பட்டுள்ளது.

ott deceitful love review

பார்க்கலாமா? வேண்டாமா?: ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகத்தான் எலியா கேப்ரியலுடன் பழகுகிறான் என்பதை ஆரம்பத்திலேயே புரிந்துக் கொண்டு கேப்ரில்லாவின் மகன் எச்சரிக்கிறார். ஆனால், அம்மாவின் ஆசைக்கேற்ப விட்டு விடலாம் என அவரது மகள் சொல்லும் இடங்கள் சிறப்பு. கடைசி வரை அந்த நபரின் நோக்கம் தெரிந்த பின்னரும் அவரை கேப்ரில்லா ஏன் காப்பாற்ற முயற்சிக்கிறார் என்கிற ட்விஸ்டுடன் வெளியாகி உள்ள இந்த ரொமான்ட்டிக் த்ரில்லரை இளைஞர்கள் மற்றும் வயதானவர்கள் தாராளமாக பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X