தீபிகா படுகோனின் அடல்ட் படம் எந்த ஒடிடியில் ரிலீசாகுது தெரியுமா? ரிலீஸ் தேதியும் அறிவிப்பு!

மும்பை: பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் இன்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

பிறந்தநாளை முன்னிட்டு தனது நடிப்பில் உருவாகி உள்ள புதிய படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதியை தற்போது அறிவித்துள்ளார்.

அதிக அளவு அடல்ட் கன்டென்ட் உள்ள இந்த திரைப்படம் அமேசான் பிரைம் ஒடிடியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தீபிகா படுகோன் பிறந்தநாள்

தீபிகா படுகோன் பிறந்தநாள்

இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் அளவுக்கு பாலிவுட்டின் முன்னணி நடிகையாக தீபிகா படுகோன் வலம் வருகிறார். நடிகை தீபிகா படுகோன் இன்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் தீபிகா படுகோன்.

ஷாருக்கான், பிரபாஸ்

ஷாருக்கான், பிரபாஸ்

ஷாருக்கானின் பதான் படம் மற்றும் பிரபாஸ் உடன் ஒரு பிரம்மாண்ட படம், ஹாலிவுட் படம் என ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார் நடிகை தீபிகா படுகோன். இந்நிலையில், அவர் நடிப்பில் உருவாகி உள்ள ஒரு அடல்ட் கன்டென்ட் திரைப்படம் ஒடிடியில் வெளியாகப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்ன டைட்டில்

என்ன டைட்டில்

இயக்குநர் ஷாகுன் பத்ரா இயக்கத்தில் தீபிகா படுகோன், அனன்யா பாண்டே மற்றும் சித்தாந்த் சதுர்வேதி நடிப்பில் உருவாகி வரும் அந்த படத்திற்கு Gehraiyaan என டைட்டில் வைத்துள்ளனர். தற்போது படத்தின் பிரத்யேக போஸ்டர்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பிறந்தநாள் ட்ரீட் கொடுத்துள்ளார்

அமேசான் பிரைம்

அமேசான் பிரைம்

பாலிவுட்டின் டாப் ஹீரோயினான தீபிகா படுகோன் படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் முறையாக ஒடிடியில் தனது படத்தை நேரடியாக ரிலீஸ் செய்கிறார் நடிகை தீபிகா படுகோன். அதற்கு காரணம் அந்த படத்தில் அதிக அடல்ட் கன்டென்ட் உள்ளது தான் என முன்னதாக கூறப்பட்டது.

மீண்டும் லாக்டவுன்

மீண்டும் லாக்டவுன்

மேலும், டெல்லி, மகாராஷ்ட்ரா உள்ளிட்ட வட மாநிலங்களில் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில், பெரிய படங்களும் தியேட்டரை தவிர்த்து ஒடிடி ரிலீசுக்கே செல்லும் நிலை உருவாகி உள்ளது. இந்நிலையில், தீபிகா படுகோன் படம் அமேசான் பிரைமில் வர போவது நல்ல முடிவு தான் என ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.

எப்போ ரிலீஸ்

எப்போ ரிலீஸ்

அதிக இன்டிமேசி காட்சிகள் நிறைந்த கெஹ்ரயான் திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் 11ம் தேதி காதலர் தின ரிலீசாக வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பலர் தீபிகா படுகோனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறி இந்த பட அறிவிப்பை வரவேற்றுள்ளனர்.

Recommended Video

OTT னா ஒட்டி ஒட்டி பாப்பாங்க நமக்கு தியேட்டர் தான் முக்கியம் | Hiphop Thamizha | Filmibeat Tamil
கணவருடன் இணைந்து

கணவருடன் இணைந்து

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான 83 படத்தில் கணவர் ரன்வீர் சிங்குடன் இணைந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் நடிகை தீபிகா படுகோன். கூடிய சீக்கிரமே இருவரும் இணைந்து மற்றொரு பெரிய படத்திலும் நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X