ஓவர் ஆபாசம்.. ஒடிடிக்கு செல்லும் தீபிகா படுகோனின் புதுப்படம்.. தீயாய் பரவும் தகவல்!

மும்பை: தீபிகா படுகோன் நடிப்பில் உருவாகி உள்ள புதிய படம் ஒன்று தியேட்டரை விடுத்து ஒடிடியில் வெளியாக இப்படியொரு காரணம் சொல்லப்படுவது பாலிவுட் திரையுலகையே ஷாக்கில் ஆழ்த்தி உள்ளது.

தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்டு பெரிய நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வரும் நிலையில், நடிகை தீபிகா படுகோன் ஒடிடியில் வெளியாகப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

பல பாலிவுட் படங்கள் இந்த ஒரு காரணத்திற்காக இனி ஒடிடியை நாடும் நிலைமை உருவாகும் என்றும் கூறப்படுகிறது.

தீபிகா படுகோன்

தீபிகா படுகோன்

பாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோன் ஷாருக்கானின் படம், பிரபாஸ் உடன் ஒரு படம், ஹாலிவுட் படம் என ஏகப்பட்ட லைன் அப்களை வைத்துள்ளார். இந்நிலையில், அவர் நடிப்பில் உருவாகி உள்ள ஒரு அடல்ட் கன்டென்ட் திரைப்படம் ஒடிடியில் வெளியாகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அனன்யா பாண்டேவுடன் இணைந்து

அனன்யா பாண்டேவுடன் இணைந்து

இயக்குநர் ஷாகுன் பத்ரா இயக்கத்தில் தீபிகா படுகோன், அனன்யா பாண்டே மற்றும் சித்தாந்த் சதுர்வேதி நடிப்பில் உருவாகி வரும் இன்னமும் பெயர் அறிவிக்கப்படாத புதிய படம் தான் விரைவில் ஒடிடியில் ரிலீசாகப் போவதாக கூறுகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டமாக பல சிக்கல்களை சந்தித்து உருவாக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் ஷூட்டிங் நிறைவடைந்தது.

ஒடிடி ரிலீஸ்

ஒடிடி ரிலீஸ்

பாலிவுட்டின் டாப் ஹீரோயினான தீபிகா படுகோன் படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென ஒடிடிக்கு படம் செல்வதாக வெளியாகி உள்ள அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ஆனால், என்ன காரணத்திற்காக அந்த படம் ஒடிடிக்கு செல்கிறது என்பது தான் உண்மையிலேயே ஷாக்கிங்கான விஷயம்.

ஓவர் ஆபாசம்

ஓவர் ஆபாசம்

அதிகளவில் இன்டிமேசி காட்சிகளுடன் படு ஆபாசமாக இந்த படம் உருவாகி இருப்பதால் இந்த படத்தை சமீபத்தில் பார்த்த தணிக்கை குழு ஏகப்பட்ட கத்தரிகளை போட வேண்டும் என சொல்லி இருக்கிறது. ஆனால், இயக்குநர் ஷாகுன் பத்ராவிற்கு அதில் உடன்பாடு இல்லை என்றும் அப்படி செய்தால் படம் முழுவதுமாக சிதைந்து விடும் என்பதால் தணிக்கை பிரச்சனை இல்லாத ஒடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்துள்ளாராம்.

கிறிஸ்துமஸ் ரிலீஸ்

கிறிஸ்துமஸ் ரிலீஸ்

விரைவில் இந்த படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக்குடன் வெளியாகி ரிலீஸ் தொடர்பான வேலைகள் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. எந்த ஒடிடி தளத்தில் படம் வெளியாகும் என்கிற அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிடும். நடிகை தீபிகா படுகோன் தனது கணவர் ரன்வீர் சிங்குடன் இணைந்து நடித்துள்ள 83 திரைப்படம் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X