twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'டெல்லி கிரைம்' சீசன் 2 வெப் சீரிஸ் Review.. கிரைம், திரில்லர் கதை பிரியர்களுக்கு தீனி போடும் கதை!

    |

    சென்னை: கிரைம் கதைகளை விரும்பி பார்ப்பவர்கள் பார்த்து ரசிக்கக்கூடிய படமாக தற்போது வெளியாகி உள்ளது டெல்லி க்ரைம் சீசன் 2.

    சமீபகாலமாக தொலைக்காட்சிகளில் அறிமுகம் ஆகும் வெப் சீரிஸ்கள் திரைப்பட காட்சிகளையே மிஞ்சும் அளவிற்கு எதார்த்தமாக சிறப்பாக அமைக்கப்பட்டு ரசிகர்களின் வரவேற்பு பெற்று வருகிறது.

    அதில் ஒரு வெப்சீரிஸ் தான் டெல்லி க்ரைம் சீசன்-2 முதல் சீசனில் கலக்கியவர்கள் இரண்டாவது சீசனிலும் கலக்கியுள்ளனர்.

    27 வயசு தான் ஆகுது.. தற்கொலை செய்து கொண்ட நடிகை.. சூசைட் லெட்டர்ல என்ன தெரியுமா எழுதியிருக்காங்க? 27 வயசு தான் ஆகுது.. தற்கொலை செய்து கொண்ட நடிகை.. சூசைட் லெட்டர்ல என்ன தெரியுமா எழுதியிருக்காங்க?

     கிரைம் கதைகளில் காமெடி பண்ணும் அப்ரண்டீஸ் இயக்குநர்கள்

    கிரைம் கதைகளில் காமெடி பண்ணும் அப்ரண்டீஸ் இயக்குநர்கள்

    சினிமா இயக்குனர்கள் திரைப்படங்களை எடுக்கும் பொழுது அவைகளில் காட்சி அமைப்பை சரியாக அமைப்பது குறித்து மெனக்கிடுபவர்கள் ரசிகர்களால் பாராட்டப்படுகிறார்கள். ஆனால் நான் எடுப்பதே படம் நீ பார்த்துத்தான் ஆக வேண்டும் என்று காட்சிகள் குறித்த அடிப்படை அறிவு இல்லாமல் ரசிகர்களின் ரசிப்பு மனநிலையை மட்டும் நம்பி படம் எடுக்கும் இயக்குனர்கள் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார்கள். சமீபத்தில் இப்படி எடுத்த இரண்டு பிரபல நடிகர்களின் படம் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

    வெப் சீரீஸ், சிறிய பட்ஜெட் படங்களுக்கு வரப்பிரசாதம் ஓடிடி தளம்

    வெப் சீரீஸ், சிறிய பட்ஜெட் படங்களுக்கு வரப்பிரசாதம் ஓடிடி தளம்

    திரையரங்குகளில் இப்படிப்பட்ட பெரிய படங்களுடன் போட்டி போட முடியாதவர்களின் படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்களிடம் மதிப்பு பெறுகிறது. அதேபோல் நல்ல கதைகள் வெப் சீரிஸ்களாக 5, 6 எபிசோடுகளுடன் எடுத்து ஓடிடி தளத்தில் வெளியிடுகின்றனர். இவைகள் மக்களிடம் பெரிய வரவேற்பை பெறுகிறது. இப்படி தற்போது நெட்ஃபிலிக்சில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள கிரைம் திரில்லர் வெப் சீரீஸ் தான் டெல்லி கிரைம் சீசன் - 2. ஏற்கெனவே சீசன் -1 ல் நிர்பயா வழக்கை எடுத்து கலக்கியவர்கள் அதில் எழுந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வண்ணம் சீசன் -2 வெப்சீரிஸும் வெளியாகியுள்ளது.

    கதை இதுதான்

    கதை இதுதான்

    இது ஐந்து எபிசோடுகளை கொண்ட வெப் சீரியஸ் ஆக வெளியாகியுள்ளது. ஒரு எபிசோடு 50 நிமிங்கள் வரை உள்ளது. இதிலும் முந்தைய சீரிஸ் போலவே மிக அழகாக திரைக்கதை அமைத்துள்ளனர். தலைநகர் டெல்லியில் முதியவர்கள் 4 பேர் கொடூரமாக சுத்தியலால் தாக்கப்பட்டு கொலைச் செய்யப்பட்டு கிடக்கின்றனர். டெல்லி தெற்கு துணை ஆணையர் வர்த்திகா தலைமையிலான டீம் விசாரணையில் குதிக்கிறது. வர்த்திகா தலைமையிலான டீம் முதல் சீசனில் சிறப்பாக செயல்பட்டு நிர்பயா போன்று பேருந்தில் சீரழிக்கப்பட்ட பெண்ணை மீட்டு, கொலையாளிகளை பிடித்திருப்பார்கள். முதல் சீசனை பார்த்தவர்களுக்கு இரண்டாம் சீசன் பார்க்கும்போது துணை ஆணையர் வர்த்திகாவின் முழு டீம் மீது பெரிய நம்பிக்கை வந்திருக்கும்.

    கொலை கொள்ளையால் அதிரும் டெல்லி

    கொலை கொள்ளையால் அதிரும் டெல்லி

    வர்த்திகாவின் டீம் உடனடியாக களத்தில் குதிக்கிறது. கொலை பற்றி விசாரணை நடத்தும்போதே இரண்டாவது கொலை நடந்துவிடுகிறது. இதனால் மேலும் அழுத்தம் அதிகரிக்கிறது. கொலை நடந்த பாணி 1990-களில் நடந்த கச்சா பனியன் கும்பலின் கைவரிசை போல் உள்ளதாக கண்டறிகிறார்கள். கச்ச பனியன் கும்பல் மலைவாழ் இனத்தை சேர்ந்த மக்கள். முன்னொரு காலத்தில் அவர்கள் கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டு வந்தாலும் 1990 க்குப்பிறகு பெரிய அளவில் குற்றச்செயலில் ஈடுபடாமல் இருந்தனர், ஆனால் அடுத்தடுத்து 6 பேர்களுக்கு மேல் வசதியான முதியவர்கள் கொல்லப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்படுவது ஊடகங்களில் வெளியாகி பெரும் பிரச்சினையை போலீஸ் டிபார்ட்மெண்டுக்கு ஏற்படுத்துகிறது.

    சமூகத்தை வைத்து குற்றங்களை பொதுமைபடுத்தாதீர்கள்

    சமூகத்தை வைத்து குற்றங்களை பொதுமைபடுத்தாதீர்கள்

    கச்சா பனியன் கும்பலை பிடிக்க வர்த்திகா அவரது டீம் முழு விசாரணையில் குதிக்கிறது. போஸ்ட் மார்டம் ரிப்போர்ட், தடயவியல் ஆய்வுகள், சிசிடிவி கேமரா காட்சி பதிவுகள் அடிப்படையில் கச்சா பனியா கொள்ளையர்கள் மீண்டும் வந்துவிட்டார்கள் என கண்டுபிடிக்கிறார்கள். அவர்களை பிடிக்க போலீஸ் மும்மூரமாக இருக்கும்போது அவர்களில் பலர் திருந்தி கவுரவமான வாழ்க்கை வாழ்வதை அறிகிறார் துணை ஆணையர் வர்த்திகா. வழக்கை வேறு கோணத்தில் நகர்த்துகிறார். கொள்ளை கும்பலை ஒரு சமூகத்தை வைத்து முடிவு செய்யக்கூடாது என்பதை இயக்குனர் அருமையாக சொல்கிறார்.

    பிற்பகுதியில் ஜெட் வேகத்தில் நகரும் கதை

    பிற்பகுதியில் ஜெட் வேகத்தில் நகரும் கதை

    ஆனால் மேலிட அழுத்தம் காரணமாக பிடிபட்ட அப்பாவி கச்சா பனியன் இளைஞர்கள் மீது வழக்கை போட்டு முடிக்க வற்புறுத்துகிறார் கமிஷனர். ஆனால் துணிந்து எதிர்த்து நிற்கிறார் வர்த்திகா. பின்னர் வழக்கின் போக்கே மாறுகிறது, கச்சா பனியன் பாணியில் கொலை, கொள்ளையை அரங்கேற்றி போலீஸை திசைத்திருப்பும் கும்பல் இந்த குற்றங்களை செய்வதை கண்டுபிடிக்கின்றனர். அதன் பின்னர் அவர்களுக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது. கடைசியில் குற்றவாளிகளை பிடித்தார்களா? எப்படி பிடித்தார்கள் என்பதே மீதிக்கதை.

    பிளஸ்

    பிளஸ்

    படத்தின் பிளஸ்சே இயக்கம், காட்சி அமைப்புகள், வலுவான திரைக்கதை, கதாபாத்திரங்களின் அருமையான மிகை இல்லாத நடிப்பு எனலாம். துணை ஆணையர் வர்த்திகாவாக நடிக்கும் ஷிஃபாலி ஷா, இன்ஸ்பெக்டர் பூபேந்தர் சிங்காக வரும் ராஜேஷ் தைலங், பயிற்சி எஸ்பியாக வரும் ராஷிகா துகல், சப் இன்ஸ்பெக்டர்களாக நடித்தவர்கள், கொள்ளையராக வரும் திலோத்தமா ஷோமே உள்ளிட்டோர் அருமையாக நடித்துள்ளனர். போலீஸ் விசாரணை எப்படி இருக்கும் என்பதை காட்சிக்கு காட்சி சரியாக காட்டியுள்ளனர். ஒருபுறம் கொள்ளை கும்பல் நடவடிக்கை, மறுபுறம் போலீஸ் அவர்களை நெருங்கும் காட்சிகள் திக் திக் என நகர்கிறது.

    மைனஸ்

    மைனஸ்

    பெரிய அளவில் மைனஸ் என்று ஒன்றும் சொல்ல முடியாது. ஆனால் மைனஸ் உள்ளது. இவ்வளவு பெரிய கிரைம் நடப்பதை காட்டும்போது பயிற்சி எஸ்பி அழகு நிலைய பெண் குறித்து விசாரணை நடத்திவிட்டு பிறகு சும்மா இருப்பது போல் காண்பிப்பதும், தேவை இல்லாமல் பெண் ஐபிஎஸ் அதிகாரி குடும்ப பிரச்சினை வலிந்து திணிக்கப்படும் வகையில் காட்சி அமைக்கப்பட்டுள்ளது கதையின் வேகத்தை குறைக்கிறது.

    கிரைம் கதை எடுக்கும் தமிழ் அப்ரண்டீஸ் இயக்குநர்கள் இதை பார்த்து கற்றுக்கொள்ளலாம்

    கிரைம் கதை எடுக்கும் தமிழ் அப்ரண்டீஸ் இயக்குநர்கள் இதை பார்த்து கற்றுக்கொள்ளலாம்

    கிரைம் திரில்லர் படங்களை விரும்பி பார்க்கும் ரசிகர்கள் தமிழில் எடுக்கப்படும் கிரைம் கதைகளின் அப்ரண்டீஸ் இயக்குநர்களும் ஒரு கிரைம் போலீஸ் கதையை எப்படி எடுக்கலாம் என்பதை இந்த டெல்லி கிரைம் சீசன் -1 சீசன் - 2 வெப்சீரீஸ் பார்த்து கற்றுக்கொள்ளலாம். போலீஸ் அதிகாரி என்றால் பப்புக்கு போவதுபோல் பொருத்தமில்லா உடை அணிந்து கருப்பு கண்ணாடி போட்டு சீன் போடும் பாத்திரங்களை ஹாலிவுட் படத்தை பார்த்து காப்பி அடித்து நடிக்கும் நடிகர், நடிகைகள் துணை ஆணையர் வர்த்திகாவாக நடிக்கும் ஷிஃபாலி ஷா, இன்ஸ்பெக்டர் பூபேந்தர் சிங்காக வரும் ராஜேஷ் தைலங், பயிற்சி எஸ்பியாக வரும் ராஷிகா துகல் உள்ளிட்டோரை பார்த்து கற்றுக்கொள்ளலாம். ஓடிடி தளத்தில் நெட்ஃபிலிக்சில் தமிழில் அழகாக டப் செய்யப்பட்டு வந்துள்ளது டெல்லி கிரைம் சீசன் 2.

    English summary
    Recently, the web series that have been introduced on television are getting well received by the fans with their realistic setting that surpasses the movie scenes.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X