ஓடிடியில் மிரட்ட வருகிறது டிமான்ட்டி காலனி 2.. எப்போ, எதில் ரிலீஸ் தெரியுமா?
சென்னை: அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த மாதம் 15ஆம் தேதி வெளியானது டிமான்ட்டி காலனி 2. இந்தப் படத்தின் முதல் பாகம் மெகா ஹிட்டானதால் இதன் மீதும் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு இருந்தது. இப்படமும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக ப்ரியா பவானி சங்கருக்கு ரொம்பவே நல்ல பெயரை இந்தப் படம் பெற்றுக்கொடுத்தது. இந்தச் சூழலில் டிமான்ட்டி காலனி 2 ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
அருள்நிதி வம்சம் திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படத்தின் கதை முதன்முதலில் உதயநிதிக்கு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது. பாண்டிராஜ் இயக்கியிருந்த அந்தப் படம் நல்ல விமர்சனத்தையே பெற்றது. முக்கியமாக அருள்நிதியின் நடிப்பும் முதல் படம் போன்றே பெரும்பாலும் தெரியவில்லை. தனது முதல் படத்திலிருந்தே கதைகளை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்கிறார் அருள்நிதி. அப்படி அவர் நடித்த பல படங்கள் ஹிட் ஆனது மட்டுமின்றி; கதை தேர்வில் தெளிவு உள்ள ஹீரோ என்ற நல்ல பெயரையும் ரசிகர்களிடையே அருள்நிதிக்கு பெற்றுக்கொடுத்தது. அப்படித்தான் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் டிமான்ட்டி காலனி படத்திலும் நடித்தார்.

சூப்பர் ஹிட்: அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. பேய் பட ஜானர்தான் என்றாலும்; அதில் இருந்த எதார்த்தமான மேக்கிங்கும், லொக்கேஷன்களும், திரைக்கதையும் படத்தை அனைவரிடமும் கொண்டு சேர்த்தது. இன்றுவரை அந்தப் படத்தை டிவியில் போட்டால் அமர்ந்து பார்ப்பவர்களும் இருக்கிறார்கள்., தங்களது மொபைல் ஃபோனில் வைத்திருப்பவர்களும் இருக்கிறார்கள். அந்த அளவுக்கு படம் பலரிடமும் சென்று சேர்ந்திருக்கிறது. இந்தச் சூழலில் டிமான்ட்டி காலனி 2 படம் உருவானது.
டிமான்ட்டி காலனி 2: பொதுவாக தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரு படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டால் அதில் சொதப்பல்கள் ஏகப்பட்டவை இருக்கும். பார்ட் 2 வரிசையில் சிக்கி பல படங்கள் சின்னாபின்னாமாகியிருக்கின்றன. எனவே அதேபோல் டிமான்ட்டி காலனி 2வும் மாட்டிவிடுமோ என்ற அச்சம் ரசிகர்களுக்கு இருக்கத்தான் செய்தது. ஆனால் அஜய் ஞானமுத்து படத்தின் இரண்டாவது பாகத்தை நன்றாகவே உருவாக்கியிருந்தார். முக்கியமாக முதல் பாகத்தையும், இரண்டாம் பாகத்தையும் கனெக்ட் செய்திருந்த விதம் ரசிகர்களை ரசிக்க வைத்துவிட்டது.
ப்ரியா பவானி சங்கருக்கு நல்ல பெயர்: அதேபோல் ப்ரியா பவானி சங்கரும் படத்தின் பலங்களில் ஒன்றாக திகழ்ந்தார். ராசியில்லாத நடிகை என்ற பெயரும் இந்தப் படத்தால் அவருக்கு மாறியிருக்கிறது. ஸ்க்ரீன் ப்ளேவில் ரொம்பவே கவனமாக இருந்த அஜய் ஞானமுத்து க்ளைமேக்ஸை முடித்த விதமும், மூன்றாவது பாகத்துக்கான லீடை கொடுத்த விதமும் படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக்கொடுத்தன. தங்கலான் படத்துக்கு போட்டியாக களமிறங்கி சோடை போகாமல் வென்றிருக்கிறது டிமான்ட்டி காலனி 2.
ஓடிடி ரிலீஸ்; தியேட்டரில் சக்கைப்போடு போட்ட டிமான்ட்டி காலனி 2 எப்போது ஓடிடியில் ரிலீஸாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. இந்நிலையில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதன்படி செப்டம்பர் 27ஆம் தேதி டிமான்ட்டி காலனி 2 படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது. திரையரங்குகளில் கிடைத்த வரவேற்புபோல் கண்டிப்பாக ஓடிடியிலும் கிடைக்கும் என்று படக்குழு எதிர்பார்த்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











