ஜகமே தந்திரம் படத்தை தொடர்ந்து தனுஷின் அடுத்த படமும் நெட்பிளிக்ஸில் ரிலீஸ் ஆகப் போகுதாம்!

சென்னை: ஜகமே தந்திரம் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள இந்தி படமும் நெட்பிளிக்ஸில் வெளியாகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்த ராஞ்சனா திரைப்படம் அவருக்கு பாலிவுட்டில் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.

இந்நிலையில், மீண்டும் அவர் இயக்கத்தில் தனுஷ், அக்‌ஷய் குமார் மற்றும் சாரா அலி கான் நடித்துள்ள அட்ரங்கி ரே திரைப்படமும் ஒடிடியில் வெளியாகப் போவது கன்ஃபார்ம் ஆகி உள்ளது.

பாலிவுட்டில் 3வது படம்

பாலிவுட்டில் 3வது படம்

கோலிவுட்டில் கலக்கி வரும் தனுஷ் பாலிவுட்டில் ஏற்கனவே இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் ராஞ்சனா மற்றும் பால்கி இயக்கத்தில் ஷமிதாப் என இரு படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், மூன்றாவது பாலிவுட் படமாக ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் அட்ரங்கி ரே எனும் படத்தில் நடித்துள்ளார்.

மாமனாருக்கு பின் மருமகன்

மாமனாருக்கு பின் மருமகன்

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தில் வில்லனாக நடித்த அக்‌ஷய் குமார், அடுத்ததாக மருமகன் தனுஷ் நடித்துள்ள இந்தி படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அமிதாப் பச்சன் உடனே காலரை பிடித்து சண்டை போட்டு நடித்த தனுஷ் அக்‌ஷய் குமாருடன் எப்படி நடித்துள்ளார் என்பதை காண ரசிகர்கள் ஆர்வம்.

சாரா அலி கான் ஜோடி

சாரா அலி கான் ஜோடி

அட்ரங்கி ரே படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகர் சைஃப் அலி கானின் மகள் சாரா அலி கான் நடித்துள்ளார். அக்‌ஷய் குமார், தனுஷ், சாரா அலி கான் மூவரும் இணைந்து இருக்கும் ஏகப்பட்ட புகைப்படங்களும் போஸ்டர்களும் வெளியாகி வைரலாகின.

தியேட்டர்கள் திறந்தாலும்

தியேட்டர்கள் திறந்தாலும்

நாடு முழுவதும் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் பல தயாரிப்பாளர்களும் நடிகர்களும் இன்னமும் ஒடிடியில் படங்களை வெளியிட ஆர்வம் காட்டி வருகின்றனர். தியேட்டர்களில் மக்கள் கூட்டம் வராது என்கிற பயம் ஒரு பக்கம் இருந்தாலும், ஒடிடியில் நல்ல விலைக்கு படம் விலைக்கு போனால் போதும் என்றே தள்ளி விட்டு விடுகின்றனர்.

நெட்பிளிக்ஸில் ரிலீஸ்

நெட்பிளிக்ஸில் ரிலீஸ்

அக்‌ஷய் குமார், தனுஷ், சாரா அலி கான் நடித்துள்ள அட்ரங்கி ரே திரைப்படம் தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே நெட்பிளிக்ஸில்

ஏற்கனவே நெட்பிளிக்ஸில்

தனுஷ் நடிப்பில் ஏற்கனவே நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியான ஜகமே தந்திரம் திரைப்படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. இந்நிலையில், அடுத்த படத்தை நெட்பிளிக்ஸில் ரிலீஸ் செய்து அந்த தோல்வியை சமன் செய்யும் திட்டம் நடைபெற்று வருகிறதா? என்கிற பேச்சுக்களும் அடிபட்டு வருகின்றன.

இன்னொரு படமும்

இன்னொரு படமும்

ஜகமே தந்திரம் மற்றும் அட்ரங்கி ரே மட்டுமில்லை தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ஹாலிவுட் படமான தி கிரே மேன் திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக தயாரித்து வரும் நிலையில், அந்த படமும் விரைவில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தியேட்டருக்கு திருச்சிற்றம்பலம்

தியேட்டருக்கு திருச்சிற்றம்பலம்

தனுஷ் நடிப்பில் அப்போ தியேட்டரில் இப்போதைக்கு எந்த படமும் வெளியாகாதா? என்கிற கேள்விக்கு விடையாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜவஹர் மித்ரன் இயக்கி வரும் திருச்சிற்றம்பலம் திரைப்படம் தியேட்டரில் அடுத்த ஆண்டு வெளியாகும் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், மாறன், நானே வருவேன் உள்ளிட்ட படங்கள் எப்போ எப்படி ரிலீஸ் ஆகப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X