தனுஷிடம் சரண்டரான நயன்தாரா.. பல நாள் பஞ்சாயத்துக்கு ஒருவழியா விடிவு காலம் பொறந்துடுச்சாம்!
சென்னை: தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா விக்னேஷ் சிவனை திருமணம் செய்துக் கொண்ட நிலையில், அவர்களது திருமண வீடியோ விரைவில் ஓடிடியில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த 2022ம் ஆண்டு ஜூன் 9ம் தேதி விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். அவர்களின் திருமண வீடியோ நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் டாக்குமெண்டரியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டு டீசர் எல்லாம் வெளியானது. ஆனால், விக்னேஷ் சிவனின் குழந்தைகளான உலக் மற்றும் உயிருக்கே 2வது பிறந்தநாள் கொண்டாடி விட்டனர்.

இன்னமும் அந்த திருமண டாக்குமெண்டரி படம் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகவில்லை. அதற்கு காரணமே தனுஷ் தான் என்கிற திடுக்கிடும் தகவல்கள் கசிந்துள்ளன. மேலும், ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸாக விரைவில் ஓடிடியில் நயன்தாராவின் திருமண வீடியோ வெளியாகப் போவதாகவும் கூறுகின்றனர்.
நயன்தாராவின் காதல் கதை: ஐயா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை நயன்தாரா சந்திரமுகி, சிவகாசி, கஜினி என வரிசையாக பெரிய படங்களில் நடித்து வந்த வேகத்திலேயே ஸ்டார் ஆனார். சிம்புவுடன் வல்லவன் படத்தில் நடிக்கும் போது காதலில் விழுந்த நயன்தாரா அதன் பின்னர் ஏற்பட்ட சில மனக்கசப்பு காரணமாக அவரை பிரேக்கப் செய்து பிரிந்தார். அதன் பின்னர் விஜய்யின் வில்லு படத்தின் இயக்குநரான பிரபுதேவாவை காதலிக்க ஆரம்பித்தார். ஆனால், பிரபுதேவாவின் முதல் மனைவி நடத்திய பஞ்சாயத்து காரணமாக இருவரும் பிரிந்தனர். கடைசியாக விஜய் சேதுபதியுடன் இணைந்து நானும் ரவுடி தான் படத்தில் நடிக்கும் போது போடா போடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தார் நயன்தாரா.
நயன்தாரா திருமணம்: நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் காதலிக்கும் போதே ரெஜிஸ்டர் திருமணம் செய்துக் கொண்டதாக வாடகைத்தாய் பிரச்சனை வரும் போது கூறியிருந்தனர். இருவரும் ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் கலந்துக் கொண்ட பிரம்மாண்ட திருமணம் மகாபாலிபுரத்தில் உள்ள ஒரு ரெசார்ட்டில் கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக திருப்பதியில் நயன்தாரா திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் சில சிக்கல்கள் காரணமாக திருமணம் மகாபலிபுரத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் முதல் ஷாருக்கான் வரை: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் வரை பல பிரபலங்கள் பங்கேற்றனர். சூர்யா, விஜய் சேதுபதி, ஷாலினி, அனிருத், மலையாள நடிகர் திலீப், இயக்குநர்கள் மணிரத்னம், அட்லீ என ஏகப்பட்ட பிரபலங்கள் பங்கேற்றனர். அதன் புகைப்படங்கள் மட்டுமே வெளியான நிலையில், நயன்தாராவின் திருமண வீடியோவுக்காக ரசிகர்கள் 2 ஆண்டுகளாக காத்திருக்கின்றனர்.
தனுஷ் கொடுத்த க்ரீன் சிக்னல்: நயன்தாராவின் திருமண வீடியோவை நெட்ஃபிளிக்ஸில் வெளியிடாமல் இருக்க காரணமே தனுஷ் தயாரிப்பில் வெளியான நானும் ரவுடி தான் படத்தின் சில காட்சிகளை அதில் பயன்படுத்தியிருப்பது தான் என்றும் அதற்கான என்ஓசியை தனுஷ் தராமல் இழுத்தடித்தது தான் காரணம் என சில தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒரு வழியாக தற்போது தனுஷை நயன்தாரா சம்மதிக்க வைத்து அந்த பிரச்சனையை தீர்த்து விட்டார் என்றும் விரைவில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் நயன்தாராவின் திருமண வீடியோ வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











