இந்த வாரம் ஓடிடியில் வெளியாக காத்திருக்கும் படங்களின் லிஸ்ட்..எந்த படம் பார்க்கலாம்!
சென்னை : வெள்ளிக்கிழமை என்றாலே சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டமான நாளும், கடந்த வாரம் ஜெயம் ரவியின் அகிலன், சசிக்குமாரின் அயோத்தி திரைப்படங்கள் வெளியாகின.
இந்த வாரம், உதயநிதியின் கண்ணை நம்பாதே, கப்ஸா, காஜல் அகர்வாலின் கோஸ்டி போன்ற திரைப்படங்கள் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளன.
இன்று ஓடிடியில் வெளியான படங்கள் மற்றும் இந்த வாரம் வெளியாக உள்ள படங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்

வாத்தி
தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியானத் திரைப்படம் வாத்தி. இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், சம்யுக்தா, சமுத்திரக்கனி, தனிகெல்லா பரணி, சாய் குமார், ஷா ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கடந்த மாதம் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 100 கோடியை வசூலித்தது. இப்படத்தை நெட்பிளிக்சில் இன்று முதல் பார்க்கலாம்.

ரைட்டர் பத்மபூஷன் (தெலுங்கு)
ரோகினி, ஆஷிஷ் வித்யார்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ரைட்டர் பத்மபூஷன். குடும்ப நகைச்சுவை திரைப்படமான இப்படம், பிப்ரவரி 3ந் தேதி திரையரங்கில் வெளியாகி நல்ல வசூலை பெற்றுத்தந்தது. சாய் பிஸ்கெட் பிலிம்ஸ் மற்றும் லஹரி இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் இன்று வெளியாகி உள்ளது

அயோத்தி
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் எம்.சசிக்குமார். இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளியானம் திரைப்படம் அயோத்தி. யஷ்பால் ஷர்மா, ப்ரீத்தி அஸ்ரானி, குக் வித் கோமாளி புகழ் மற்றும் பலர் நடித்துள்ளனர். டிரைடென்ட் ஆர்ட்ஸ் என்ற நிறுவனம் சார்பில் ஆர்.ரவீந்திரன் இப்படத்தை தயாரித்து உள்ளார் தயாரித்துள்ளார்.இப்படத்தை வருகிற மார்ச் 31ந் தேதி பிரபல OTT தளமான ஜீ5 வெளியாக உள்ளது.

ரோமாஞ்சம் (மலையாளம்)
கடந்த பிப்ரவரி 3ந் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ரோமாஞ்சம். அறிமுக இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், செம்பன் வினோத், அர்ஜூன் அசோகன், அசீம் ஜமால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.வெறும் ரூ.3 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட மலையாள படமான ரோமாஞ்சம் உலக அளவில் ரூ.62 கோடியை வசூலித்தது. இந்த படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகி உள்ளது.

புருஷப்ரேதம் (மலையாளம்)
தர்ஷனா ராஜேந்திரனின் இயக்கத்தில் உருவான மலையாளத் திரைப்படம் புருஷப்ரேதம். திகிலூட்டும் பேய் கதையான இப்படம் கடந்த மாதம் வெளியானது. ஆவாஸவ்யூஹம் படத்தை இயக்கி சிறந்த திரைப்படத்திற்கான கேரள அரசின் மாநில விருதை வென்ற கிரிஷாந்த் இப்படத்தை இயக்கியதால், இப்படத்திற்கு திரையரங்கில் கூட்டம் கூடியது. தர்ஷனா ராஜேந்திரன், பிரசாந்த் அலெக்சாண்டர் மற்றும் தேவகி ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். படம் வரும் மார்ச் 24 ஆம் தேதி OTT SonyLIVல் வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











