நெட்பிளிக்ஸில் வெளியாகும் தனுஷின் வாத்தி... காத்திருக்கும் ஓடிடி ரசிகர்கள்... ரிலீஸ் தேதி அப்டேட்!
சென்னை: தனுஷின் வாத்தி திரைப்படம் கடந்த மாதம் 17ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
வெங்க அட்லூரி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான வாத்தி 100 கோடி வசூலித்ததாக படக்குழு அறிவித்தது.
கலவையான விமர்சனங்களைப் பெற்ற வாத்தி தனுஷுக்கு எதிர்பாராத வெற்றியை கொடுத்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

100 கோடி கிளப்பில் இணைந்த வாத்தி
தனுஷ், சம்யுக்தா, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்த வாத்தி திரைப்படம் கடந்த மாதம் 17ம் தேதி வெளியானது. தமிழில் வாத்தி, தெலுங்கில் சார் என்ற டைட்டிலில் ரிலீஸான இந்தப் படத்தை வெங்கி அட்லூரி இயக்கியிருந்தார். கல்வியை பின்னணியாக வைத்து உருவான இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன. ஆனாலும், பாக்ஸ் ஆபிஸில் 100 கோடிக்கும் மேல் வசூலித்து அசத்தியது.

ஓடிடி ரிலீஸ் தேதி
சித்தாரா என்டர்டெயின்மென்ட், ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்த் வாத்தி படத்தின் ஓடிடி ரைட்ஸை நெட்பிளிக்ஸ் கைப்பற்றியிருந்தது. 35 கோடி பட்ஜெட்டில் உருவான வாத்தி, 17வது நாளிலேயே 100 கோடி வசூலை கடந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்தப் படம் வரும் 17ம் தேதி முதல் நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீமிங் ஆகும் என படக்குழு அறிவித்துள்ளது. இன்னும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் வாத்திக்கு ஓடிடி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

வாத்தி சக்சஸ் மீட்
முன்னதாக இந்தப் படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. அதில், இயக்குநர் வெங்கி அட்லூரி, சம்யுக்தா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். ஜி.வி. பிரகாஷ் இசையில் வாத்தி படத்தின் பாடல்களுக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வாத்தி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஊழல் நிறைந்த கல்வி முறைக்கு எதிராகப் போராடும் சாமானியனின் கதையாக உருவானது வாத்தி.

விரைவில் கேப்டன் மில்லர் ஸ்பாட்
வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா உட்பட மற்ற ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பிஸியாக இருந்த தனுஷ். தற்போது கேப்டன் மில்லர் ஷூட்டிங்கில் பிஸியாகிவிட்டார். ராக்கி, சாணிக் காயிதம் திரைப்படங்கள் மூலம் கவனம் ஈர்த்த அருண் மாதேஸ்வரன், கேப்டன் மில்லர் படத்தை இயக்கி வருகிறார். பீரியட் ஜானரில் உருவாகும் இந்தப் படத்தை, சத்யஜோதி ஃபிலிம்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. கேப்டன் மில்லரும் இந்தாண்டு வெளியாகும் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











