தனுஷின் இட்லி கடை.. ஓடிடி உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?.. எந்த நிறுவனம் வாங்கியிருக்கு தெரியுமா?

சென்னை: தனுஷ் நடிப்பு மட்டுமின்றி இயக்கத்திலும் பிஸியாக இருக்கிறார். அவர் கடைசியாக இயக்கி நடித்த ராயன் திரைப்படமும், தனது உறவினரை வைத்து இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படமும் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. அடுத்ததாக சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர்; ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தேரே இஷ்க் மெய்ன் படத்தில் நடித்துவருகிறார். இதற்கிடையே அவர் இட்லி கடை என்ற படத்தையும் இயக்கியிருக்கிறார். இந்தச் சூழலில் அப்படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகிய்ரிஉக்கிறது.

கஸ்தூரி ராஜா சினிமாவில் இயக்குநராக இருந்தாலும் அவரால் பெரிய அளவுக்கு வளர முடியவில்லை. இதன் காரணமாக அவரது குடும்பம் கொஞ்சம் கஷ்டத்தில் தத்தளித்தது. இப்படிப்பட்ட சூழலில்தான் தனது மகன் தனுஷை நடிகராக அறிமுகப்படுத்தினார் அவர். முதல் படம் சரியாக போகாவிட்டாலும் இரண்டாவது படமான காதல் கொண்டேன் தனுஷுக்கும், அந்தப் படத்தின் இயக்குநரும் கஸ்தூரி ராஜாவின் மூத்த மகனுமான செல்வராகவனுக்கும் மிகப்பெரிய அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது.

தலையெடுத்த தனுஷ்: அந்தப் படத்துக்கு பிறகு தனுஷுக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் கிடைத்தன. அந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டு படிப்படியாக முன்னேறிக்கொண்டே இருந்தார். முக்கியமாக ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணமும் செய்துகொண்டார். பல வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த இவர்கள் கடந்த வருடம் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்கள். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்கிற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

Dhanush s Idli Kadai Movie OTT Rights Bagged By Netflix

பல ஜானர்களில் கிங்: தனுஷை பொறுத்தவரை நடிப்பு மட்டுமின்றி இயக்கம், பாடல்கள் பாடுவது, எழுதுவது, படங்களை தயாரிப்பு என பல வழிகளில் தன்னை நிரூபித்துக்கொண்டே இருக்கிறார். குறிப்பாக வுண்டர்பார் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி ஹிட் படங்களை தயாரித்திருக்கிறார். எதிர்நீச்சல், நானும் ரௌடிதான், விசாரணை, காலா என வரிசையாக படங்களை தயாரித்திருக்கிறார். சிவகார்த்திகேயன், விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு மிகச்சிறந்த ஹிட் படங்களை முதன்முதலில் கொடுத்தது தனுஷின் வுண்டர்பார் நிறுவனம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்: தனுஷ் கடைசியாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கியிருந்தார். இதில் அவரது சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக நடித்திருந்தார். அனிகா சுரேந்திரன், மாத்யூ தாமஸ் உள்ளிட்டோரும் நடித்திருந்த அந்தப் படம் தோல்வியையே சந்தித்தது. பவர் பாண்டி படத்துக்கு பிறகு தனுஷ் இயக்கத்தில் வெளியான ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஆகிய இரண்டு படங்களுமே ஃப்ளாப் ஆனதால் அவரும் அவரது ரசிகர்களும் கொஞ்சம் அப்செட்டில் இருக்கிறார்கள்.

அடுத்த படங்கள்: தனுஷ் இப்போது குபேரா படத்தில் நடித்து முடித்துவிட்டு ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தேரே இஷ்க் மெய்ன் என்கிற ஹிந்தி படத்தில் நடித்துவருகிறார். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான ராஞ்சனா திரைப்படம் மெகா ஹிட்டானது. அதன் காரணமாக இப்படத்தின் மீதும் எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தில் எழுந்திருக்கிறது. இதற்கிடையே அவர் இட்லி கடை படத்தையும் இயக்கி நடித்திருக்கிறார். இதில் நித்யா மேனன், அருண் விஜய் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

ஓடிடி உரிமம்: படமானது முதலில் ஏப்ரல் பத்தாம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால் அன்று அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸாகிறது. எனவே இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போயிருக்கிறது. இந்நிலையில் படம் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்தப் படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் 45 கோடி ரூபாய் கொடுத்து கைப்பற்றியிருப்பதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X