Kuberaa OTT: குபேரா படத்தை பல கோடிக்கு வாங்கிய அமேசான் பிரைம்.. ஓடிடி ரிலீஸ் இந்த தேதியிலா?
சென்னை: நடிகர் தனுஷின் குபேரா படம் தெலுங்கில் 70 சதவீதம் வசூல் மழையில் நனைந்து வருகிறது. ஆனால், தமிழ்நாட்டில் தனுஷ் படத்துக்கு 30 சதவீதம் மட்டுமே இதுவரை வசூல் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டோலிவுட் இயக்குநர் சேகர் கம்முலா, தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகார்ஜுனா, நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள குபேரா படத்தை அங்கே கொண்டாடி வருகின்றனர்.
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான புஷ்பா 2 படத்துக்கும் விமர்சனங்கள் மோசமாக வெளியானாலும், படத்தை டோலிவுட் மற்றும் பாலிவுட் ரசிகர்கள் கொண்டாடியதன் விளைவுதான் பாக்ஸ் ஆபீஸில் 1800 கோடி வசூலை அந்த படம் ஈட்டியது.

தமிழ் சினிமாவில் தனுஷுக்கு எதிராக கிளம்பிய தேவையற்ற நெகட்டிவிட்டிகள் தான் வசூல் குறைய காரணம் என்கின்றனர். இந்நிலையில், குபேரா படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன. அதுதொடர்பாக இங்கே பார்க்கலாம் வாங்க..
அதிகரிக்கும் பக்தி தலைப்பு படங்கள்: தெலுங்கு திரையுலகில் தொடர்ந்து பக்தியை சார்ந்த தலைப்புகளில் படங்கள் வெளியாவது அதிகரித்துள்ளன. கல்கி, குபேரா படங்களை தொடர்ந்து அடுத்து கண்ணப்பா படமும் இந்த மாத இறுதியில் வெளியாகிறது. பெரிய பட்ஜெட்டில் இதுபோன்ற படங்களை முன்னணி நடிகர்களை வைத்து தெலுங்கு இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் எடுப்பதில் அதிக ஆர்வத்தை செலுத்தி வருகின்றனர். குபேரா படத்தில் தனுஷின் அறிமுக காட்சியில் திருப்பதியையும் ஸ்ரீனிவாசா பாடலும் ஒலித்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
தமிழில் டல்: குபேரா படம் தமிழ் மற்றும் தெலுங்கு பைலிங்குவல் படம் என்று சொல்லப்பட்டாலும், படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் தெலுங்கு என்பதால், வெற்றி விழாவை எல்லாம் அங்கேயே கொண்டாடி விட்டனர். அதே போல, அந்த படத்தை டோலிவுட்டில் மகேஷ் பாபு, சிரஞ்சீவி, நாக் அஸ்வின் என பல பிரபலங்களும் முழு ஒத்துழைப்பை கொடுத்து பாராட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், இதுவரை தமிழில் எந்தவொரு முன்னணி நடிகர்களும், சினிமா பிரபலங்களும் தனுஷின் நடிப்பைக் கூட பாராட்டாமல் உள்ளனர். தமிழில் வசூல் ரீதியாகவும் குபேரா படம் டல் அடித்தே காணப்படுவதாக கூறுகின்றனர்.

குபேரா ஓடிடி ரிலீஸ் எப்போது?: சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா, ஜிம் சர்ப், பாக்கியராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான குபேரா படத்தை அமேசான் பிரைம் 47 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், 4 வாரத்தில் குபேரா படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஜூலை 18ம் தேதி வெள்ளிக்கிழமை அதிகபட்சமாக குபேரா படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தியேட்டரில் பார்க்கலாம்: ஓடிடியில் வெளியாகும் வரை வெயிட் செய்து தனுஷின் குபேரா படத்தை பார்க்க வேண்டாம் என்றும் அருகில் உள்ள தியேட்டரில் கூடிய சீக்கிரமே படத்தை பார்க்கலாம் என்றும் கடைசி வரை குபேரா திரைப்படம் ரசிகர்களை பெரிதாக சோதிக்காது, நல்ல படத்தை பார்த்த அனுபவத்தையே தரும் என்றும் படக்குழு தொடர்ந்து புரமோஷனை முடுக்கி வருகிறது.


Click it and Unblock the Notifications











