தனுஷின் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்.. எப்போ ஓடிடியில் ரிலீஸ் தெரியுமா?
சென்னை: தனுஷின் நடிப்பில் அடுத்ததாக குபேரா, இட்லி கடை ஆகிய படங்கள் வரவிருக்கின்றன. அதேபோல் அவர் இயக்கியிருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் கடந்த மாதம் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு திரையரங்குகளில் வெளியான அப்படம் டிராகனுக்கு எதிராக தோல்வியையே சந்தித்தது. இந்நிலையில் அந்தப் படம் ஓடிடியில் எப்போது ரிலீஸாகும் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என கலக்கி வருபவர் தனுஷ். நடிப்பு மட்டுமின்றி இயக்கம், பாடல்கள் பாடுவது, எழுதுவது, படங்களை தயாரிப்பது என அனைத்து ஜானர்களிலும் கலக்குபவர். அவரது நடிப்பில் கடைசியாக ராயன் திரைப்படம் வந்தது. அவரது 50ஆவது படமான அதனை அவரே இயக்கியிருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. நல்ல எதிர்பார்ப்போடு வெளியானது படத்துக்கு போதிய வரவேற்பை ரசிகர்கள் கொடுக்கவில்லை. முக்கியமாக கடுமையாக ட்ரோலும் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த படங்கள்: தனுஷ் இப்போது சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதில் அவருடன் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். படம் சிறப்பாக வந்திருப்பதாக இயக்குநர் தெரிவித்திருக்கிறார். இந்தப் படத்துக்கு பிறகு தானே இயக்கி இட்லி கடை படத்தில் நடித்துவருகிறார் தனுஷ். இதில் நித்யா மேனன் ஹீரோயினாக கமிட்டாகியிருக்கிறார். அருண் விஜய் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்: அதுமட்டுமின்றி நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் தனுஷ் இயக்கினார். அந்தப் படத்தில் அவரது சகோதரி மகனான பவிஷ் ஹீரோவாக நடித்திருந்தார். அனிகா சுரேந்திரன், சரண்யா, மாத்யூ தாமஸ் உள்ளிட்டோரும் நடித்திருந்தார்கள். ஏற்கனவே அவர் இயக்கிய பவர் பாண்டி, ராயன் ஆகிய இரண்டு படங்களில் ராயன் படம் படுதோல்வியை சந்தித்தது. எனவே நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படமாவது இயக்குநராக தனுஷுக்கு வெற்றி கொடுக்கும் என்கிற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடம் இருந்தது.
இந்தப் படமும் தோல்வி: அந்த எதிர்பார்ப்போடு படம் கடந்த மாதம் வெளியானது. இப்படத்துக்கு போட்டியாக அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்திருந்த டிராகன் திரைப்படமும் வெளியானது. டிராகன் படத்துக்கு எதிராக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இதன் காரணமாக இந்தப் படமும் தோல்வியையே சந்தித்தது. அதேசமயம் ரசிகர்களில் ஒருதரப்பினரோ தனுஷின் இயக்கத்தை பாராட்டவும் தவறவில்லை.
எப்போது ஓடிடியில் ரிலீஸ்: இப்படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருந்த தனுஷுக்கு படத்தின் ரிசல்ட் கொஞ்சம் அப்செட்டை கொடுத்திருப்பதாகவே கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் இந்த மாதம் 21ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. முன்னதாக படம் ரிலீஸாகி 12 நாட்கள் கடந்தும் இன்னும் பத்து கோடி ரூபாய் வசூலைக்கூட எட்டவில்லை என்று பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரம் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











