தனுஷ் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ராயன் ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா?.. வெளியான அறிவிப்பு

சென்னை: நடிகர் தனுஷ் கோலிவுட்டின் டாப் 10 நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான ராயன் படம் விமர்சன ரீதியாக அப்படி இப்படி பேசப்பட்டாலும் வசூல் ரீதியாக நல்ல ரெஸ்பான்ஸையே பெற்றது. இப்போது சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்துவரும் தனுஷ் ஹிந்தியிலும் கமிட்டாகியிருக்கிறார். இந்தச் சூழலில் ராயன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

தனுஷ் இப்போது கோலிவுட்டின் சிறந்த நடிகராக திகழ்ந்துவருகிறார். தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, ஹாலிவுட் ஆகியவைகளிலும் நடித்துவருகிறார். துள்ளுவதோ இளமை படத்தில் யாரெல்லாம் அவரை உருவ கேலி செய்தார்களோ அவர்கள் எல்லாம் இப்போது மூக்கின் மீது விரலை வைத்து பார்த்துவருகிறார்கள் தனுஷை. அந்த அளவுக்கு தனது திறமையை வளர்த்துக்கொண்டு தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிவைத்திருக்கிறார். நடிப்பு, இயக்கம், பாடல் எழுதுவது, பாடல் பாடுவது என கலக்குகிறார் தனுஷ்.

Dhanush Raayan OTT

ராயன்: தனுஷின் நடிப்பில் கடைசியாக ராயன் படம் வெளியானது. அந்தப் படத்தை அவரே இயக்கி நடித்திருந்தார். தங்கை செண்ட்டிமெண்ட் என்ற பழைய அஸ்திவாரத்தை வைத்து ராயனை கட்டியிருந்தார் தனுஷ். படம் விமர்சன ரீதியாக பெரிதாக கொண்டாடப்படவில்லை. அதேசமயம் வசூல் ரீதியாக நல்ல ரெஸ்பான்ஸை பெற்றுவிட்டதாக சொல்லப்படுகிறது.

வடசென்னை வாடை: குறிப்பாக படத்தின் ஸ்க்ரீன்ப்ளே ரொம்பவே சொதப்பிவிட்டதாக ரசிகர்கள் கூறுகிறார்கள். அதாவது படத்தின் பல இடங்களில் வடசென்னை படத்தின் வாடை ரொம்பவே அடித்ததாக குற்றஞ்சாட்டினர். அதேபோல் படத்தின் க்ளைமேக்ஸோ அப்படியே ஆடுகளம் படத்தின் க்ளைமேக்ஸை நினைவுப்படுத்தியதாகவும் கூறினார்கள். அதேசமயம் தனுஷ் ஒரு நடிகராக இதில் கலக்கிவிட்டார் என்று அவரது ரசிகர்கள் நிம்மதியடைந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் அப்செட்: ராயன் படத்தை தனுஷ் ரொம்பவே எதிர்பார்த்திருந்தார். ஏனெனில் இந்தப் படம் அவருக்கு 50ஆவது படம் ஆகும். இந்தப் படத்தை வெற்றி படமாக கொடுத்து தன்னுடைய ரசிகர்களுக்கு பெரும் சந்தோஷத்தை கொடுக்கலாம் என்று நினைத்திருந்தார். ஆனால் ரிசல்ட் எதிர்பார்த்தபடி கிடைக்காததால் அவர் கொஞ்சம் அப்செட்டாகிவிட்டார் என்று தனுஷுக்கு நெருக்கமான வட்டாரத்திலிருந்து தொடர்ந்து தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கின்றன.

ராயன் ஓடிடி ரிலீஸ்: இதுவரை படம் 80 கோடி ரூபாய்வரை வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ராயன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதன்படி ஆகஸ்ட் 23ஆம் தேதி ராயன் படமானது அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று கூறப்பட்டிருக்கிறது. தியேட்டரில் கிடைத்த ரெஸ்பான்ஸைவிடவும் ஓடிடியில் எப்படி கிடைக்கும் என்பதை காண தனுஷ் ரசிகர்கள் உச்சக்கட்ட ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X