ஓடிடியில் மாஸ் காட்டப்போகும் குக் வித் கோமாளி பிரபலம்.. காக்கி சட்டையில் கலக்கும் தர்ஷா குப்தா!
சென்னை: வசந்தபாலன் இயக்கத்தில் zee5 ஓடிடி தளத்தில் நாளை வெளியாக உள்ள தலைமைச் செயலகம் வெப்சீரிஸில் குக் வித் கோமாளி பிரபலம் நடிகை தர்ஷா குப்தா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய கேரக்டர் லுக்கை அவர் வெளியிட்டு ரசிகர்களின் வாழ்த்துக்களை பெற்று வருகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் நடித்து வந்த தர்ஷா குப்தா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார். அந்த சீசன் முடிவதற்குள் மோகன்ஜி இயக்கத்தில் வெளியான ருத்ர தாண்டவம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

அதன் பின்னர் சன்னி லியோன் நடித்து தமிழில் வெளியான ஓ மை கோஸ்ட் திரைப்படத்திலும் ஹீரோயினாக இவர் நடித்திருந்தார். யோகி பாபு நடித்த வரும் மெடிக்கல் மிராக்கிள் படத்தில் தர்ஷா குப்தா நடித்து வரும் நிலையில், ஓடிடி பக்கமும் தற்போது ஒதுங்கி உள்ளார்.
சின்னத்திரை டு சினிமா: விஜய் டிவியில் பல பிரபலங்கள் சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்து கொண்டே இருக்கின்றனர். நடிகர்கள் உச்ச நட்சத்திரங்களாக மாறுவதும் நடிகைகள் ஒரு சில படங்களில் ஆள் அட்ரஸே தெரியாமல் காணாமல் போவதுமாக இருந்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓவியா முதல் ஷிவானி நாராயணன் வரை இதே நிலைமை தான். தர்ஷா குப்தாவுக்கும் சினிமாவில் பெரிய வெற்றிகள் கிடைக்கவில்லை. ஆனால், தொடர்ந்து அவர் நல்ல கதாபாத்திரத்துக்காகவும் நல்ல படங்களுக்காகவும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இன்ஸ்டாகிராம் இளவரசி: சுமார் 2.3 மில்லியன் ரசிகர்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொண்டுள்ள தர்ஷா குப்தா தொடர்ந்து கவர்ச்சிகரமான புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கொரோனா காலத்தில் பலருக்கு உணவு அளித்து மிகப்பெரிய சேவை செய்ததும் குறிப்பிடத்தக்கது.
சதீஷுடன் சண்டை: ஓ மை கோஸ்ட் படத்தில் சதீஷுக்கு ஜோடியாக தர்ஷா குப்தா நடித்திருந்தார். சன்னி லியோன் மற்றும் தர்ஷா குப்தாவின் ஆடையை குறிப்பிட்டு சதீஷ் கிண்டல் செய்த நிலையில், அதற்கு எதிராக கடும் கண்டனத்தை தர்ஷா குப்தா வெளியிட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

போலீஸ் அதிகாரியாக தர்ஷா குப்தா: இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடை புகைப்படங்கள் வரை வெளியிட்ட தர்ஷா குப்தா தற்போது தலைமைச் செயலகம் வெப் சீரிஸில் சுந்தரி எனும் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். வசந்தபாலன் இயக்கத்தில் ஆடுகளம் கிஷோர் நடிப்பில் உருவாகியுள்ள அரசியல் கதைக்களத்துடன் அனலை கிளப்பவுள்ள ஜீ5 வெப்சீரிஸ் நாளை வெளியாகிறது. சினிமாவில் பெரிய சான்ஸ் கிடைக்காத நிலையில், ஓடிடியில் தர்ஷா குப்தாவுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறதா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.
வசந்தபாலன்: அங்காடித் தெரு படத்தை இயக்கிய ஷங்கரின் உதவி இயக்குநர் வசந்தபாலன் ஆல்பம் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன், ஜெயில் மற்றும் அநீதி என பல படங்களை இவர் இயக்கிய நிலையில், தற்போது ஓடிடியில் முதல் முறையாக தலைமைச் செயலகம் எனும் வெப்சீரிஸை இயக்கி உள்ளார். ஷீ வெப்சீரிஸில் வில்லனாக நடித்து மிரட்டிய ஆடுகளம் கிஷோர் இந்த வெப்சீரிஸில் லீடு ரோலில் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











