ஓடிடி ரசிகர்களுக்கு ஜாக்பாட்.. துரந்தர் 2 அன்கட் வெர்ஷன் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியானது!

துரந்தர் த ரிவெஞ்ச் அன்கட் வெர்ஷன் இன்று மாலை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்ததை போலவே ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகி மாஸ் காட்டியுள்ளது. இந்த வாரம் தியேட்டரில் வருண் தவான், பூஜா ஹெக்டே, மிருணாள் தாக்கூர் நடித்த இந்தி படத்துக்கே இந்த படம் கடும் டஃப் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாக்ஸ் ஆபீஸில் அதிக வசூலை ஈட்டி மிகப்பெரிய வரலாற்று சாதனையை படைத்துள்ள துரந்தர் 2 திரைப்படத்தில் ரன்வீர் சிங் ஹம்சா கதாபாத்திரத்தில் அசத்தியிருப்பார். மாதவன் ஆக்‌ஷன் எல்லாம் செய்யவில்லை என்றாலும் அவரது ஸ்க்ரீன் பிரசன்ஸ் மூலமாகவே திரையரங்குகளை ஆட்சி செய்தார்.

Dhurandhar The Revenge Raw amp amp Undekha released just now on Jio Hotstar
Photo Credit:

ஓடிடியில் இந்த படம் எப்போது வரும் என ஆவலுடன் எதிர்பார்த்து ரீவாட்ச் போட காத்திருக்கும் ரசிகர்களுக்கு தற்போது அட்டகாசமான வீக்கெண்ட் வாட்ச்சாக துரந்தர் த ரிவெஞ்ச் ஓடிடியில் வெளியாகி உள்ளது.

ஓடிடியில் துரந்தர் 2: ஜியோ ஸ்டூடியோஸ் வழங்க, B62 ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவான "துரந்தர் த ரிவெஞ்ச் (Raw & Undekha)" திரைப்படம், ஜூன் 4 ஆம் தேதி மாலை 7 மணிக்கு ஜியோ ஹாட்ஸ்டாரில் டிஜிட்டல் முறையில் பிரம்மாண்டமாக வெளியானது. இத்தகைய பெரிய அளவிலான ஒரு படம் டிஜிட்டல் தளத்தில் நேரடியாக வெளியாவது இந்தியாவில் இதுவே முதன்முறை, என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெளியீட்டின் தனிச்சிறப்பாக, ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு 'வாட்ச் பார்ட்டி' மூலம் திரைப்பட நட்சத்திரங்களுடன் இணைந்து படத்தைக் கண்டு ரசிக்கலாம். இது சினிமா ரசிகர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் பிரம்மாண்ட படம்: இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான "துரந்தர் த ரிவெஞ்ச்", அதன் பிரம்மாண்டமான கதைசொல்லல், மிரட்டலான அதிரடி காட்சிகள் மற்றும் நினைவில் நிற்கும் நடிப்புகள் மூலம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இப்போது டிஜிட்டல் தளத்தில் வெளியாகவுள்ளதால், நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் ஒரே நேரத்தில் இப்படத்தை அனுபவிக்க முடியும்.

ஓடிடி ரசிகர்களுக்கு ஜாக்பாட்: சாதாரண திரைப்பட அனுபவத்தைத் தாண்டி, ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்ட உணர்வை ஏற்படுத்தும் வகையிலான இந்த டிஜிட்டல் வெளியீடு இந்தியத் திரையுலகில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குகிறது. இது இனிவரும் பெரிய திரைப்பட வெளியீடுகளுக்கும் ஒரு முன்னோடியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதித்யா தார் எழுதி, இயக்கி, தயாரித்த அதிரடி உளவுத் திரைப்படமான "துரந்தர் த ரிவெஞ்ச்", பலராலும் அறியப்படாத வீரர்களின் கதையை வெளிப்படுத்துகிறது. ஜ்யோதி தேஷ்பாண்டே மற்றும் லோகேஷ் தார் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாகப் பணியாற்றியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X