1300 கோடியில பாதி.. அப்படியே என் பேங்க் அக்கவுண்ட்டுக்கு வந்துடுமா?.. பிரியங்கா சோப்ரா ரகளை!
மும்பை: ராஜமெளலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் வாரணாசி படத்தில் மந்தாகினி கதாபாத்திரத்தில் மஞ்சள் சேலையில், கையில் துப்பாக்கி வைத்துக் கொண்டு இந்தியன் டாம்ப் ரைடராக காட்சி தந்த பிரியங்கா சோப்ரா, சமீபத்தில், நெட்பிளிக்ஸில் ஒளிபரப்பான கபில் ஷர்மா நிகழ்ச்சியில் தனது சம்பளம் குறித்த கேள்விக்கு ஜாலியாக பதிலளித்துள்ளார்.
மகேஷ் பாபு கடந்த 2 ஆண்டுகளாக தனது உடலை மெருகேற்றி ராஜமெளலி படத்துக்காக முரட்டுத்தனமாக ரெடியாகி உள்ளார். நாசரை வைத்து அவருக்கு நடிப்பு பயிற்சி எல்லாம் தனிப்பட்ட முறையில் கொடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின.

இன்னொரு பக்கம் கும்பா கதாபாத்திரத்தில் நடிக்க தூக்கத்தை எல்லாம் தொலைத்து விட்டு பிருத்விராஜும் தனது உடம்பை மெருகேற்றி போட்டோ எல்லாம் பதிவிட்டு வருகிறார்.
1300 கோடி பிரம்மாண்டம்: தமிழ் சினிமாவில் இதுவரை ரஜினிகாந்த், விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் படங்கள் கூட 1000 கோடி வசூலை எட்ட முடியாமல் தவித்து வருகின்றன. இந்நிலையில், டோலிவுட்டில் இயக்குநர் ராஜமெளலி மகேஷ் பாபுவை வைத்து 1300 கோடி பட்ஜெட்டில் வாரணாசி படத்தை பிரம்மாண்டமாக உருவாக்கி வருகிறார். ஜேம்ஸ் கேமரூன் உங்களுடன் செட்டுக்கு வந்து நான் கேமரா ஆப்ரேட் செய்து செகண்ட் யூனிட் டைரக்டராக வேலை பார்க்கவா? என கேட்கும் அளவுக்கு ராஜமெளலியின் புகழ் உலகம் முழுவதும் பரவி வருகிறது.

1300 கோடில பாதி: விஜய் நடித்த தமிழன் படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா பாலிவுட்டில் டாப் ஹீரோயினாக மாறினார். கோலிவுட் கொண்டாட தவறிய பிரியங்கா சோப்ரா பாலிவுட்டை தாண்டி ஹாலிவுட்டில் மேட்ரிக்ஸ் 4 படத்திலேயே நடித்து மாஸ் காண்பித்தார். ரூசோ சகோதரர்களின் சிட்டாடல் வெப்சீரிஸிலும் நடித்த பிரியங்கா சோப்ரா தற்போது டோலிவுட்டில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக வாரணாசி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், கபில் ஷர்மா வாரணாசி படத்தின் பட்ஜெட் 1300 கோடின்னு சொல்றாங்க, அதற்கு காரணமே உங்க சம்பளம் தானா? எனக் கேட்டுவிட்டார்.
தலையை சுத்தி மூக்கை தொடுற: வாரணாசி படத்தின் பட்ஜெட் நீங்க வருவதற்கு முன்பாக 1300 கோடி கிடையாது என்றும் கேள்விப்பட்டேன் என தி கிரேட் இந்தியன் கபில் ஷோவில் கபில் ஷர்மா போட்டு வாங்க.. தலையை சுத்தி மூக்கை தொடுற.. ஏதோ எனக்கே அதுல பாதி பணத்தை சம்பளமா போட்டது போல என ஜாலியாக ரகளை செய்து பேசிவிட்டார்.
வாரணாசி கதை என்ன?: அந்த நிகழ்ச்சியில், நவ்ஜோத் சிங் வாரணாசி படத்தின் கதை குறித்து கேட்டவுடன், கபில் ஷர்மாவே முந்திக்கொண்டு, பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார் என்பது பார்ட் 2 வரும் போது தான் அனைவருக்குமே தெரிந்தது. அதனால், பிரியங்காவிடம் வாரணாசி கதை பற்றி கேட்பது தேவையில்லாத ஆணி என பதிலளித்துவிட்டார். 1300 கோடி பட்ஜெட் என்பதை பிரியங்கா சோப்ரா மறுக்காத நிலையில், வாரணாசி படத்தின் பட்ஜெட் அதுதான் என ரசிகர்கள் உறுதி செய்து அவரது வீடியோவையும் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். 2027ம் ஆண்டு பொங்கலுக்கு வாரணாசி படம் திரைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications











