படு கேவலம்.. ச்சீ.. இப்படியெல்லாம் ஒரு கிரிஞ்ச் படம் எடுப்பாங்களா.. ஆவேசப்பட்ட ராதிகா.. என்ன ஆச்சு?

சென்னை: நடிகை ராதிகா சரத்குமார் திடீரென தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு படத்தை படு கேவலம் என கழுவி ஊற்றி போட்டுள்ள பதிவு ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது. இதற்கு முன் இல்லாத அளவுக்கு முதல் முறையாக ஒரு படத்தை பார்த்து கடுப்பாகி திட்டியிருக்கிறார் ராதிகா சரத்குமார். ஆனால், நாகரீகம் கருதி அந்த படத்தின் பெயரை அவர் சொல்லவில்லை. ஆனால், சோஷியல் மீடியாவில் அந்த படத்தை தான் ராதிகா கழுவி ஊற்றியிருக்கிறார் என ரசிகர்கள் கண்டு பிடித்து கமெண்ட் போட்டு வருகின்றனர்.

நடிகையாக, தயாரிப்பாளராக இருந்து வரும் ராதிகா சரத்குமார் இதுவரை எந்தவொரு படத்தையும் பார்த்து விட்டு இந்தளவுக்கு பொதுவெளியில் கோபப்பட்டு இருப்பார் என்றால் அது கேள்விக்குறி தான். ஆனால், அவரையே ஒரு குறிப்பிட்ட படம் இப்படி கொந்தளிக்கச் செய்து விட்டது. அப்படி எந்த படத்தை பற்றி இப்படி ஆவேசப்பட்டு ராதிகா பேசுகிறார் என்கிற கேள்வியும் அதற்கு அந்த படம் தான் என்கிற பதில்களும் வேறு சில படங்களின் பெயர்களை போட்டும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்ற்னர்.

Did Radhika Sarathkumar indirectly attacks Animal movie after its OTT release?

அனிமல் படமா?: சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர் நடிப்பில் சமீபத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான அனிமல் படத்தை பார்த்து விட்டுத் தான் நடிகை ராதிகா சரத்குமார் இப்படி கிரிஞ்ச் படம் என கொந்தளித்துள்ளார் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். பல சினிமா பிரபலங்களே வெளிப்படையாக அனிமல் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. ஆர்ஜே பாலாஜி சமீபத்தில் அந்த படத்தை எல்லாம் பார்க்கவே மாட்டேன் என்றும் ஹீரோயினை ஷூவை நக்க சொல்வது, ஆல்ஃபா மேல் கொடுமைகள் என படம் முழுக்க ஆபாசமும் ஆணாதிக்கமும் நிறைந்திருப்பது மோசமான விஷயம் என வெளுத்திருந்தார்.

சலாரா? சந்திரமுகி 2வா?: சமீபத்தில் ஓடிடியில் சலார் திரைப்படமும் வந்த நிலையில், அந்த படத்தை ஒருவேளை சொல்கிறாரா என ஆரம்பித்து வீரசிம்மா ரெட்டி படத்துல வரலக்‌ஷ்மி நடித்தது முதல் விஜய்யின் லியோ படம் வரை பல படங்களின் பெயர்களை குறிப்பிட்டு ரசிகர்கள் சண்டை போட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து ராதிகா சரத்குமார் நடித்த சந்திரமுகி 2 படத்தை விடவா கிரிஞ்ச் படம் ஒன்று இருக்கு என்றும் ராதிகாவை ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

Did Radhika Sarathkumar indirectly attacks Animal movie after its OTT release?

அனிமல் படத்துக்கு குவியும் கண்டனங்கள்: தியேட்டரில் வெளியான அனிமல் படம் பாலிவுட்டில் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்து விட்டது. ஆனால், அனைத்து மொழிகளிலும் நெட்பிளிக்ஸில் வெளியாகி உள்ள அந்த படத்தை ரசிகர்கள் வீட்டில் பார்க்க ஆரம்பித்த நிலையில், இவ்ளோ கேவலமான ஒரு படத்தை சந்தீப் ரெட்டி வங்கா எடுத்திருக்கிறாரே என்றும் ரன்பீர் கபூர், ராஷ்மிகா எல்லாம்ந் அடிக்க எப்படி சம்மதித்தார்கள்? என கேள்விகளை எழுப்பி வருகின்றனர். சைக்கோத்தனமான இதுபோன்ற படங்கள் இளைஞர்களை மேலும், தவறான வழிக்குத் தான் கொண்டு செல்லும் என்றும் அனிமல் வொர்ஸ்ட் படம் என்றும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X