ஓடிடியில் ரிலீஸ் ஆகும் டிக்கிலோனா.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. எப்போன்னு பாருங்க!

சென்னை: சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிக்கிலோனா படம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் படம் டிக்கிலோனா. இந்தப் படத்தை கார்த்திக் யோகி இயக்கியுள்ளார்.

இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக அனகா மற்றும் ஷரின் என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.

ஏற்கனவே ட்ரைலர் வெளியீடு

ஏற்கனவே ட்ரைலர் வெளியீடு

மேலும் இந்தப் படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், யோகி பாபு, ஆனந்த்ராஜ், முனிஷ்காந்த, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். டிக்கிலோனா படத்தின் ட்ரைலர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.

டைம் மெஷின் - அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

டைம் மெஷின் - அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

ட்ரைலரே பஞ்ச் வசனங்களால் பட்டையை கிளப்பியது. இதில் டைம் மெஷினில் ஏறி தனக்கு ஏற்கனவே நடந்த கல்யாணத்தை தடுத்து நிறுத்த முயற்சி செய்வதாக கதை அமைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பேர் வச்சாலும் வைக்காம போனாலும்

பேர் வச்சாலும் வைக்காம போனாலும்

இந்நிலையில் இப்படத்தில் 90களில் சூப்பர் ஹிட்டான இளையராஜாவின் பேர் வச்சாலும் வைக்காம போனாலும் பாடலை யுவன்சங்கர் ராஜா ரீமிக்ஸ் செய்துள்ளார். இந்தப் பாடல் கடந்த பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆனது. நடிகர் சந்தானம் இந்தப் பாடலை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

ராஜா ராஜா தான்.. நம்ப முடியவில்லை

ராஜா ராஜா தான்.. நம்ப முடியவில்லை

இதுதொடர்பாக பதிவிட்ட சந்தானம், ராஜா ராஜாதான்.. ராஜா சார் ஒரிஜினல் இசையில் உருவான, யுவனால் மறுபரிசீலனை செய்யப்பட்ட பேர் வச்சாலும் வைக்காம போனாலும் பாடலுக்கு நடனமாடியதை நம்ப முடியவில்லை என குறிப்பிட்டிருந்தார்.

வாத்தியாரே ஈவ்னிங் 5 மணிக்கு அப்டேட்

வாத்தியாரே ஈவ்னிங் 5 மணிக்கு அப்டேட்

இந்நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டூடியோஸ் படத்தின் அப்டேட் குறித்த தகவலை இன்று காலை வெளியிட்டது. அதன்படி வாத்தியாரே ஈவ்னிங் 5 மணிக்கு டிக்கிலோனா அப்டேட் வருது.. ரெடியா இருங்க என பதிவிடப்பட்டிருந்தது.

விநாயகர் சதுர்த்தியன்று படம் ரிலீஸ்?

விநாயகர் சதுர்த்தியன்று படம் ரிலீஸ்?

இதனை தொடர்ந்து இன்று காலை முதலே #Dikkiloona என்ற ஹேஷ்டேக் ட்ரென்ட்டாகி வந்தது. ஏற்கனவே இப்படத்தின் ரிலீஸ் குறித்து உறுதியில்லாத தகவல் ஒன்று பரவி வந்தது. அதன்படி வருகிற செப்டம்பர் 10-ந் தேதி விநாயகர் சதுர்த்தியையொட்டி, டிக்கிலோனா படம் நேரடியாக ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக கூறப்பட்டது.

வெளியானது டிக்கிலோனா அப்டேட்

வெளியானது டிக்கிலோனா அப்டேட்

இந்நிலையில் இன்று மாலை வெளியாகும் அப்டேட் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.. ரசிகர்கள் பலரும் இதையே தங்களின் எதிர்பார்ப்பாக பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் இன்று மாலை டிக்கிலோனா படத்தின் அப்டேட் வெளியானது.

ஜீ 5 தளத்தில் செப்டம்பர் 10 ரிலீஸ்

ஜீ 5 தளத்தில் செப்டம்பர் 10 ரிலீஸ்

அதன்படி ஏற்கனவே வெளியானதை தகவலை போல டிக்கிலோனா படம் ஜீ 5 தமிழ் தளத்தில் வரும் செப்டம்பர் 10ஆம் தேதி வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கிலோனா படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சத்தை மையப்படுத்தி இப்படம் உருவாகி உள்ளது.

டாக்டர் படம் எப்போது ரிலீஸ்?

டாக்டர் படம் எப்போது ரிலீஸ்?

டிக்கிலோனா படம் குறித்த இந்த அறிவிப்பை பார்த்த ரசிகர்கள், டிக்கிலோனாவுக்காக வெயிட்டிங் என தெரிவித்து வருகின்றனர். சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தையும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனமே தயாரிப்பதால் டாக்டர் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்றும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X